அப்பத்தா

முத்துகுமரன் - அன்பை விரும்பும் மனிதன். மானமும் உணர்வுமுள்ள தமிழன்,

விருப்பங்கள் - கவிதை, கதை, விவாதங்கள், திரைப்பட இயக்கம்,

நண்பர்களே எனது முதல் பதிப்பாக அப்பத்தா கவிதையை பதிக்கிறேன்


இலையுதிர்காலம்..
பாதையெங்கும்
உதிர்ந்த சருகுகள்..
காத்திருக்கிறது
சருகான இலையொன்று
மரத்திலிருந்து மண்ணிற்கு பயணப்பட....

சருகுகள் எல்லாம்
குப்பைகள் அல்ல
அது பசுமையின் பரிணாமம்....

பெண்மையின் தன்மையாய்
செடியாய் இருக்கையிலே
நிழல் தந்தவள் நீ..
வயது பதினான்கில் தாரமாய்
ஆனவள் நீ..

அணைக்காத உன்வீட்டு அடுப்பு...
பிள்ளை சோறு பொங்கிப் பொங்கி
ஈரமான உன் மனது..
சித்தமருந்துகள் அரைத்து அரைத்து
அழகான உன் கைகள்....

உலகின் சுழற்சியில்
துக்கங்களும் நேசம் கொண்டன
உன்னிடம்...
திடீரென்று ஓய்வெடுத்த

உன்னவரின் இதயம்
திசைமாறிய காற்றாய்
உன் வாழ்வு...

ஈன்ற தலைமகனை
மடியெடுத்தாய் மறுபடியும்
சடலமாய்......
உன் சோகம் சொல்ல
முடியாமல் தடுமாறுகிறது
என் தமிழறிவு...

எண்ணிப் பார்க்கிறேன் உன்னுடனான என் நாட்களை......
நீ கூறிய பாட்டிகதை முதல்
கைலாயத்தில் தாத்தாவைப்
பார்த்ததாக கூறிய செய்திவரை...
அவை கற்பனை அல்ல

நீ உணர்ந்த மரணத்திற்குப்பிறகான
வாழ்வது........


வயது உயர
உயரம்குன்றி
குழந்தையாய் உன் உருவம்
எதை உணர்த்துகிறாய்.....

மறைந்த பார்வை
மறந்த தன்னிலை
குறைந்த உணவு
குழறிய பேச்சு
மரணத்தோடும் வாழ்கிறாயே....

சத்தம் எழும்பா உன்கடைசி உணர்வுகளில்
என்னென்ன நினைக்கிறாய் ....
பிறர் சொல்ல கடினம்தான்..
எனக்கு மட்டும் தெரியும்

உன் மெளனப் பிராத்தனை.....
பேத்திகளின் வயிற்றில்
பிறந்திடவேண்டுமென்ற அந்த,,,,,,,,

8 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

demigod said...

Romba nalla irukku, keep writing.

முத்துகுமரன் said...

நன்றி ரவி. கண்டிப்பாக தொடர்வேன்.நான் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையிது

இ.இசாக் said...

முத்துகுமரன்
கவித நல்லா இருக்குப்பா..
கொஞ்சம் கவனமா.. தொடர்ந்து எழுதனா
எல்லோராலும் கவனிக்கப்படுவ..
சரியா..

முத்துகுமரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி இசாக், தொடர்ந்து கவனமாக எழுத முயற்சி செய்தே வருகிறேன்.

SwethaRaja said...

நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் எழுத என் வாழ்த்துக்கள்!

prasanna said...

நன்றாக இருக்கிறது

cheena (சீனா) said...

முத்துக்குமரன்,

அழகு கவிதை - அருமை அருமை
முதியவளின் எண்ணங்களை அப்படியே வடித்திருக்கிறீர்கள். பேத்திகளின் வயிற்றில் பிறக்க எண்ணுவது அப்பத்தாக்களின் இயல்புதான்.

வலைச்சரம் மூலம் வந்தேன்

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP