எ‎ங்கள் வாழ்வின் ‏இனிய வசந்தம் நீ,,,,,
ஆளுக்கொரு பெயர்சொல்ல
நா‎ன் அழைத்த பெயருக்கு சிரித்து
எ‎ன் முதல் வெற்றி தந்தவள்,,,,

கைகளில் ஏந்தி,
தலைமுடி வருடி,
விரலைத் தொடுகையில்
லேசாய் நீ சிரிக்க
பாப்பாக்கு எ‎ன்னை தெரியுதுப்பா
என மகிழ வைத்தவள்...

உ‎ன்னோடு தரையில் படுத்துகொண்டு
கதைகள் சொல்லி
கடைசியில்கன்னம் கிள்ளுவே‎ன் -
நிறம் கூடிய ரோஜாவாகிடுவாய்

உனக்குத் தலைசீவி,
மையிட்டு,
புருவம் இ‏டையே சந்திர பொட்டு வைத்து,
அழகு பாதத்தில் கொலுசணிவித்தே‎ன்...
மயில்தோகையாய்
பட்டுப் பாவாடை பிடித்து நீ ஆட கண்டது
இறைவனாலும் பெறமுடியாத
அற்புத வரம் ...,,,,

வாயாடி பெண்ணானாய்...
சீண்டிச் சீண்டி தேனாய் ருசித்தோம்...,,
‏இன்னும் இன்னும்

எத்தனை ‏எத்தனை
இனிய நினைவுகள் .,,
நினைத்து நினைத்து உள்ளம் பூரிக்கிறே‎ன்

தினம் பெயர் சொல்லி
சண்டை போட முடியாமல் -
இன்று தொலைவில்...
வருந்தாமல் பிரிந்திருக்க பழகி கொள்கிறே‎ன் -

அதற்காய்த்தானே
இந்த பாலைக்கே வந்தே‎ன்

14 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குழலி / Kuzhali said...

தங்கையின் அருமை
அவள் திருமணம்
ஆனபின் தான் தெரியும்

என எங்கேயோ படித்த ஞாபகம்

உங்கள் கவிதை நன்றாக உள்ளது

முத்துகுமரன் said...

நன்றி குழலி. கண்டிப்பாக திருமணம் ஆகி நம்மை பிரிந்து சென்றுவிடும் தங்கையின் மீது பாசம் கூடுவது இயற்கையே

வீ. எம் said...

நல்ல கவிதை முத்துகுமரன். அண்ணன்கள் அனைவரும் படித்து மகிழ்வார்கள் !
இதிலிருந்து ஒரு பகுதியை மைய்யமாக வைத்து 'காகித பூக்களும்..கலர் டீ வீ ...." என ஒரு பதிவு எழுதியுள்ளேன். நேரம் இருக்கும்போது படியுங்களேன் ... !!

வீ எம்

முத்துகுமரன் said...

நன்றி வி.எம். கண்டிப்பாக படித்து கருத்து கூறுகிறேன்
ஆனால் உங்கள் இணைப்பு வேலை செய்யவில்லையே?

demigod said...

Really a good one. Vazhthukkal.

முத்துகுமரன் said...

நன்றி ரவி. தொடர்ந்து வாசியுங்கள்.

தமிழ்வாணன் said...

அருமை நல்ல கவிதைகள். வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

நன்றி தமிழ்வாணன், தொடர்ந்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்

Moorthi said...

மிக நல்ல கவிதை முத்துக்குமரன். தொடர்ந்து படையுங்கள்.

முத்துகுமரன் said...

நன்றி மூர்த்தி. கழ்ண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன்

SwethaRaja said...

தங்கையின் அருமை மிகவும் அருமை அதுபோல் அண்ணனின் அருமையும் இது போல்தான் தங்கைக்கு இருக்கும். :)

விடியலின் கீதம். said...

ADDAA NALA KAVETHAI

ஆதிபன் சிவா said...

முத்துக்குமரன் கவிதை அற்புதம். கண்களின் ஓரத்தில் இரண்டு துளிகள் அடக்கியும் அடங்காமல் வெளிவந்துவிட்டது. எனக்கு தங்கை இல்லைத்தான் ஆனால் எனது அக்காளின் மகளின் நினைவுகளை கவிதை கொணர்ந்துவிட்டது. நன்றி.

அன்புடன் ஆதி

முத்துகுமரன் said...

தங்கள் உணர்வை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. இது போன்ற பாராட்டுகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. தொடர்ந்து வாசியுங்கள். கருத்துகளை சொல்லுங்கள்.
நன்றி ஆதிபன் சிவா

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP