தீபங்கள் பேசும் - தொகுப்பிலிருந்து

விரைவில் வெளிவர இருக்கிற எனது தீபங்கள் பேசும் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்


களவு புரிந்தேன்.
கைதாகவில்லை.
உன்னுள் சுதந்திரமாய்
நான்..

xxxxxxxxxxxxxxxxxxxx

நகைக்கடை-
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்!
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்!!

xxxxxxxxxxxxxxxxxxxxxxx

கால்கள் தழுவிய
சலங்கையைக் களவாடி
முகம் பதித்தேன்

மணி(கண்) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல..

ம்ம்ம் ம்ம்ம்ம்

எத்தனை மென்மையடி
உன் மனம்
மருந்தாய்
வியர்வைத் துளிகள்

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

6 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

SwethaRaja said...

மிகவும் நன்றாக உள்ளது அண்ணா தொடர்ந்து எழுதுங்கள்.

முத்துகுமரன் said...

நன்றி சுவேதா

ஆசிப் மீரான் said...

நல்லா இருங்கடே!!
இன்னும் நெறய எழுதுங்க

-சாத்தான்குளத்தான்

விடியலின் கீதம். said...

NALLA A EUKU UNKA KAVETHAIKAL.

NALAYINY THAMARAICHSELVAN

முத்துகுமரன் said...

நன்றி நளாயினி தாமரைச் செல்வி. உங்கள் கவிதைகளைப் பற்றி இசாக், நண்பன் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்

சேதுக்கரசி said...

//நகைக்கடை-
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்!
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்!!//

யதார்த்தம்! சுமார் ஒன்றரை(?) வருடங்களுக்கு முன்பு இந்தக் கவிதையை வாசித்திருக்கிறேன். அருமை.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP