கவிதை

எண்ணம் சொல்ல
ஒவ்வொரு முறையும்
காத்திருப்பேன்
ஒன்றுமில்லாதது போல்
எங்கோ ஒளிந்திருப்பாய்

உணர்ச்சி,
பாசம்,
காதல்
உறவு என
பன்முகமாய் விரிந்து
கடைசியில் பதுங்கிக் கொள்வாய்

எதையும் சொல்லவிடினும்
உமிழ்நீரைப் போல
மீண்டும் மீண்டும்
சுரக்கிறாய்
எனக்குள்

1 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

SwethaRaja said...

எதையும் சொல்லவிடினும்
உமிழ்நீரைப் போல
மீண்டும் மீண்டும்
சுரக்கிறாய்
எனக்குள்


இவ் வரிகள் மிகவும் நன்றாக இருக்கிறது அண்ணா தொடர்ந்து எழுதுங்கள் எழுத என் வாழ்த்துக்கள்!

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP