கனாக் காலங்கள்....

1.

வந்த வரை
என்னுள் வந்தவரை
கருவறையிலிருந்து
கல்லறை வரை
கண்டவர்
நெஞ்சிலிருக்கும்
கனவுகளை
எழுத்தில் கொணர்ந்திடவே
இந்தத் தேடல்


2.

மேவிய வயிற்றை தொடும் போதெல்லாம்
உன் பிஞ்சு உடலைத் வருடும்
சுகமே எனக்கு.
என்னவருடன் பேசிய கணங்களைவிட
எனக்குள் உன்னிடம் பேசுகிற கணங்களிலேயே
எங்கள் காதல் இனிக்கிறது.
முகம் தெரியாமலே
என் உயிரில் வளர்கிறாய்.
உன் அசைவுகள் உணர்ந்தே
உன் தேவைகளறிந்தே
உண்ணவோ
உட்காரவோ
நிமிரவோ,
ஒருக்களித்து படுக்கவோ செய்கிறேன்.
மார் முட்டி நீ பால்குடிக்கவிருக்கும்
அந்த நிமிடத்தில்தான்
என் ரத்தம் புனிதப்படவிருக்கிறது.
காத்திருக்கிறேன் என் கண்ணே
நீ வர

3.

மலர் மேல் விளையாடும்
வண்ணத்துபூச்சிகளாய்
திரியவிடாமல்
சிறகுகளை செதுக்கி
கூண்டுக்குள் அடைப்பதுதான்
அவசியமாகிறது
அக்கறையாகிறது

தொப்புள் கொடி
அறுக்கும் முன்னே
மழலைப் பள்ளியின்
விண்ணப்பங்கள் நிரப்பும்
உங்களுக்கு
தாய்வாசம் தேடும்
எங்கள் பிஞ்சுக் கதறல்கள்
யாழிசையாக இனிக்கிறது.

உங்கள் முற்பகல் தன்னிற்கு
பிற்பகலாய்த் தானே
ஊரெங்கும்
முதியோர் இல்லங்கள்

3 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

vciri said...

nalla kavithai

விடியலின் கீதம். said...

3 vathu kavethai manathai thodukerathu. paaraadukal.

nalayiny thamaraichselvan

முத்துகுமரன் said...

நன்றி. நளாயினி. மழலைப்பள்ளிகளும் முதியோர் இல்லங்களும் பெருகக் காரணம் நமது போலியான அவதானிப்புகளே. பாசம் செலுத்த வேண்டிய மழலைத் தருணத்தில் அவர்களை கல்வி என்னும் பெயரால் பிரிப்பதே பின்பு வாழ்க்கை சுகம் என்று அவர்கள் பெற்றோர்களை ஒதுக்கும் நிலைக்கு தள்ளிவிடுகிறது

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP