சென்ற வருட கவிதைகள் - முத்தம்

உதிர்ந்த இலைகள்..
வெப்ப காற்று...
வெறுமை...
உலர்ந்த உதடு.
பாலையே
உன்னைதவறாக பொருள் கொண்டனரே
என் மக்கள்.

வெள்ளை(ளி) முடி முகத்தில்
வெள்ளமாய்
தந்தையின் சிரிப்பு.
தொலைபேசியில் பேசிடும் தாய்,
பாச அலையாய்.....
"வாடா" என்று மட்டும் அழைத்து
சண்டையிட்ட தங்கை
அண்ணா என்றாளே
ஒவ்வொரு அழைப்பிலும்...

வெப்பம் போல் குறையாமல்
அவள் மேலான காதல்
எத்தனையோ
சுக பிரளயங்கள்...

உச்சி வெயில்பாலையில்
மண்டியிட்டு முத்தமிடுகிறேன்...
அதிசயம் பாருங்கள்
என்னுள்
பனி மலை

4 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

G.Ragavan said...

முத்துக்குமரன். நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. பாலையிலும் வாழ்வைக் கண்டு அது கொடுக்கும் பல விஷயங்களைப் பட்டியல் இட்டிருக்கின்றீர்கள். நன்றாக இருக்கிறது.

முத்துகுமரன் said...

இந்த கவிதை ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு பின் நான் எழுதிய முதல் கவிதை. கவிதை எழுத காரணமாக இருந்த புலம் பெயர்வுக்கு எனது நன்றி

வசந்தன்(Vasanthan) said...

ரசித்தேன்.
நன்று.

முத்துகுமரன் said...

நன்றி வசந்தன். என் வலைப்பதிவிற்கு வந்ததற்கும் கருத்து சொன்னதற்கும். தொடர்ந்து வாருங்கள. உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்....

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP