வாழ்க்கையெனும் ஓடம்

ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்
அறிவிக்கிறது அவர்களை
வள்ளல்களாக

பட்டங்களை
பரிவட்டங்களை
சூட்டுகிறது
அவர்களின்
நன்கொடைகள்

உழைத்தவன்
உயிரைப் பொசிக்கிய
சாதனைகளை முழங்குகிறார்கள்
ஆயிரக்கணக்கான வீடுகளில்
அடுப்பெரிகிறது எங்களாலென்று


விதவைக் கணவன்களின்
விடுமுறை விண்ணப்பங்கள்
கப்பல்களாக மிதக்கின்றன
வள்ளல் குழந்தைகளின்
விளையாட்டில்

4 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குழலி / Kuzhali said...

நல்ல கவிதை

முத்துகுமரன் said...

நன்றி குழலி....

கவிதை பற்றி உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்....

Manmadan said...

கவிதையே கருத்து சொல்கிறதே...பாராட்டுகள் முத்துகுமரன்...

முத்துகுமரன் said...

இந்த கவிதை கீற்று இணையதளத்தில் வெளிவந்திருக்கிறது..
http://keetru.com/literature/poems/muthukumaran_1.html

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP