மரணச் சமன்

நீண்ட நாட்களாக
நிற்க காத்திருக்கிறது துடிப்பு...
அருகில் செல்லாமல்
நாடி பார்க்காமல்
நாள் குறிக்கப்பட்டிருக்கிறது
அவரவர் ஞானத்திற்கேற்ப

உள்ளிருக்கும் கறைகள்
சமனாகும்
நம்பிக்கை தந்தது.
காதில் விழுந்த
என்
மரணத்தின் பலன்கள்.

14 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

ENNAR said...

கண்ணாடி முன்னாடி நின்ற தயரதன் கண்டான் காட்சியை ஒரு சில வெண்முடியை
அப்பொழுதுதான் தனக்கு வயதாகிவிட்டதென உணர்ந்தவன் மகனுக்கு பட்டாபிசேகத்திற்கு ஏற்பாடு செய்கிறான் இதைத்தான் திருமுருககிருபாணந்த வாரியார் அவர்கள் சொல்லுவார் அந்த முடிதான் காலதேவன் அனுப்பிய சமன் என.

பரஞ்சோதி said...

பிரிய முத்துக்குமரன்,

கவிதை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியவில்லை.

என்னார் சொன்னதை வைத்து விவேக் பட ஜோக் நினைவுக்கு வருது.

சிக்னலில் ரெட் போட்டா போன்னு அர்த்தம், காதோரம் வெள்ளை போட்டா போகப்போறான்னு அர்த்தம்.

முத்துகுமரன் said...

என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி என்னார். உங்கள் மூலம் ராமயண நிகழ்வொன்றை தெரிந்து கொண்டேன்.

தொடர்ந்து வாருங்கள். வாசித்து தங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்...

முத்துகுமரன் said...

நன்றி பரஞ்சோதி. கவிதை ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இல்லையே.
பாவத்தின் சம்பளம் மரணம் என்று சொல்வார்களே அதைத்தான் சொல்லியிருக்கிறேன். இறக்கும் போது தன் மனசாட்சியை சுத்தமாக வைத்திருக்கும் மன நிறைவோடு இறக்க வேண்டும் என்பது என் கருத்து......

ஞானவெட்டியான் said...

"காதோரம் நரச்ச முடி கதை முடிவைக் காட்டுது"
கவியரசு கண்ணதாசன் சொன்னது

முத்துகுமரன் said...

கவியரசு சொல்லாமல் விட்டது மிகக்குறைவே....

தங்கள் வருகைக்கு நன்றி திரு. ஞானவெட்டியான். தொடர்ந்து வந்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.....

குமரன் (Kumaran) said...

//நீண்ட நாட்களாக
நிற்க காத்திருக்கிறது துடிப்பு//

முத்துகுமரன், எனக்குப் புரிந்த வரை சொல்கிறேன். இந்த வரி நன்றாய் இருக்கிறது. கடைசி வரியும்.

மதுமிதா said...

முத்து குமரன்

தீபங்கள் பேசும் விட இதில் முதிர்ச்சி தெரிகிறது.

/அவரவர் ஞானத்திற்கேற்ப/

/

நம்பிக்கை தந்தது.
காதில் விழுந்த
என்
மரணத்தின் பலன்கள்/

அருமை முத்துகுமரன்

முத்துகுமரன் said...

நிச்சயமாக நானும் அதை உணர்கிறேன். தீபங்கள் பேசும் எனது உள்ளத்தின் உணர்ச்சித் தெளிப்பு. காதல் கவிதைகளுக்குள்ளே சிக்கிக் கிடக்காமல் வெளியே பறக்கும் போது நிறைய படிப்பினைகள் கிடைக்கின்றன. அதை எழுத்தில் வடிக்க தொடர்ந்து முயற்ச்சி செய்தே வருகிறேன்...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

முத்துகுமரன் said...

கீற்று இணையதளத்தில் இந்த கவிதை வெளிவந்திருக்கிறது
http://keetru.com/literature/poems/muthukumaran.html

Manmadan said...

நல்ல கவிதை.................நிறைய எழுதுங்க முத்துகுமரன்....

முத்துகுமரன் said...

நன்றி மன்மதன்....

உங்கள் வலைப்பூ அருமையாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்க...

சிங். செயகுமார். said...

இப்போதுதான் உங்கள் வலைதளம் வந்தேன்.
நாலு வரியில் நச்சென்று கவிதை
நிச்சயமாக நல்லதொரு முதிர்ந்தபுலமை உங்களிடம்
நேரம் வாய்த்தால் உங்கள் பதிவையெல்லாம் பாத்து விடுகின்றேன்
வாழ்த்துக்கள்!
தொடரட்டும் இன்ப உலா

முத்துகுமரன் said...

தங்கள் வருகைக்கு நன்றி சிங்.செயகுமார்.... உங்கள் பாராட்டு சற்று அதிகப்படியாகவே தோன்றுகிறது.. என் பதிவுகளை பற்றிய உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP