எனக்கு பிடித்த வலைப்பூக்கள்

என் பெயரை பரிந்துரைத்த அப்பிடிபோடு(மரம்) அவர்களுக்கும், எனக்கு அந்த செய்தியைத் தெரியப்படுத்திய மதி கந்தசாமி அவர்களுக்கும் எனது நன்றி.

நான் தீவிரமாக வலைப்பதிவுகளில் பங்கு பெறுவது கடந்த ஒரு மாதமாகத்தான். அதனால் நிறைய பேருடையதை வாசிக்கவில்லை. வாசித்தவைகளில் என் மனதிற்கு பிடித்த மூன்று பதிவுகளை இங்கு குறிப்பிடுகிறேன்...

1. பரஞ்சோதியின் சிறுவர் பூங்கா:
தன் மேல் வெளிச்ச வட்டம் விழ வேண்டும் என்று துடிப்போடு இணையத்தில் இயங்கி வருகிற பலருக்கு மத்தியில் மெல்லிய நதியாய் சலனமில்லாமல் பயணத்தை தொடர்ந்து கொண்ட வலைப்பூ இது. விதைக்கின்ற ஒரு நல்ல விதை நிச்சயம் நல்ல பலனைத் தரும். அது போலத்தான் குழந்தைகள் வளர்ப்பும். அன்பையையும், சகோதரத்துவத்தையும் குழந்தைகளிடம் நாம் விதைத்தால் அது பிற்காலத்தில் உலகை அமைதி வனமாக்கி காட்டும். எளிய கதைகள், கதைகளின் வாயிலாக நீதிகள் என தேனைக் கலந்து தருகிறார். குழந்தைகளுக்கான இதுவும் இலக்கியமே. இன்னும் சித்திர கதைகள் படங்கள் எனத் தந்தால் குழந்தைகளை எளிமையாக கவரும். குழந்தைகள் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை பரஞ்சோதி தொடுவார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

2. சிவாவின் கீதம் சங்கீதம்:
ஓய்வு எல்லோருக்கும் பிடித்தமானது. பரபரப்பான வாழ்க்கை ஓட்டத்தில் நம்மை நாமேதான் உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டி இருக்கிறது.
மரத்தின் நிழல் போல் வீசும் தென்றல் காற்று போல் நமக்குத் தேவையான மகிழ்வைத் தரக்கூடிய பொதுகுணங்கள் சிலவற்றிற்கு உண்டு. அதில் முதன்மையானது இசை. எந்த வித எல்லைகளுக்கும் சுருங்கி விடாதது இசை. கேட்கும் ஒலிகள் வேண்டுமானால் மனங்களுக்கு ஏற்ப வித்தியாசப்படலாம். ஒரு கலைஞனுக்கு சிறந்த ரசிகனாக இருப்பதும் ஒரு கலையே. அதிலும் ரசனையும், அதைப்பற்றிய அறிவும் இருந்து விட்டால் இன்னும் குதுகலமே. எனக்கு அதுமாதிரித்தான் இளையராஜாவின் இசை. அது எனக்கு பல சுகங்களை தந்திருக்கிறது. இளையராஜா இசை பிடிக்கும். அந்த இசை விரும்பும் எவரும் என் உள்வட்டத்திற்குள் வந்து விடுவதை என்னால் எப்போதுமே தவிர்க்க முடிவதில்லை. அந்த வகையில் சிவாவை எனக்கு நெருக்கமானவராகவே உணருகிறேன்....

3. ஆசிப் மீரான்:

சாத்தான்குளத்து வேதத்தை பற்றி இந்த பூதம் சொல்லித்தான் தெரிய வெண்டுமா என்ன? ஆளை கிறங்கடிக்கும் வட்டார நடை, அங்கதம் தொனிக்கும் சமூக பார்வை, தெளிவான சிந்தனை ஆழ்ந்த இலக்கிய அறிவு, அதை வெளிக்காட்டிக் கொள்ளா நிறை குடத் தன்மை என எழுதிக் கலக்கும் அன்பர், நண்பர். கை தேர்ந்த சிறுகதை எழுத்தாளர். இவரின் நல்லா இருங்கடேக்காகாவே ரசிகர்களாக இருப்பவர் பலரில் அடியேனும் ஒருவன். ஆனால் அப்பப்ப தலை மறைவாயிடுவது ஒன்றுதான் ஒரு குறை

இந்த மூவரும் இந்தபதிவுத்தேரை நகர்த்தி செல்ல கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
முத்துகுமரன்

(பி.கு. என் உடல்நலம் விசாரித்த அனைத்து நண்பர்களின் அன்புக்கு எனது நன்றிகள்.)

12 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

சிவா said...

முத்துக்குமரன்! நன்றிங்கோ..நன்றிங்கோ..நம்ம ப்ளாக்க புடிச்சதுல லிஸ்ட் போட்டதுக்கு.
எனக்கும் பரஞ்சோதியோட சிறுவர்பூங்கா ரொம்ப புடிச்சது. தவறாமல் படிப்பதுண்டு.

G.Ragavan said...

என்ன முத்துக்குமரன்! உடம்புக்கு என்ன? என்னாச்சு? நல்லாருக்கீங்கள்ள? நேரம் கிடைச்சா என்னைப் பிங்குங்க. உடம்பைப் பாத்துக்கோங்க.

பினாத்தல் சுரேஷ் said...

I have sent you a mail with my mobile number (mail id found in profiles page). talk when you are alright and free.

முத்துகுமரன் said...

சுரேஷ் உங்கள் மெயில் வரவில்லை. என் மின்னஞ்சல் முகவரி muthukumaran_muthu@yahoo.co.in, mmuthukkumaran@gmail.com

எனது கை பேசி எண்: 6243115

நன்றி

முத்துகுமரன்

மதுமிதா said...

என்ன ஆச்சு முத்துகுமரன்

உடல்நலம் கவனிங்க
மூன்று பதிவுகளும் நன்று.

முத்துகுமரன் said...

நன்றி சிவா...

ஒன்றும் இல்லை கொஞ்சம் காய்ச்சல். அதான் ஓய்வு:- } எடுத்து கொண்டு இருக்கிறேன் ஒரு நல்ல தூக்கம் போட்டால் சரியாகி விடும்

அன்பான விசாரிப்புக்கு நன்றி ராகவன், மதுமிதா அக்கா.

அப்டிப்போடு... said...

முத்துக்குமரன்., பதிவிற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

வெறும் காய்ச்சல் தானா? திடீர் உடல்நலக்குறைவுன்னு படிச்சவுடனே என்னவோன்னு நெனைச்சேன். இப்பத் தேவலையா?

உங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளில் எனக்குப் பிடித்த இரண்டும் இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன். பரஞ்சோதியின் சிறுவர் பூங்காவும் சிவாவின் இரண்டு வலைப்பூக்களும் நான் அடிக்கடி விரும்பிப் படிக்கும் வலைப்பூக்கள். ஆசிப் மீரான் பதிவுகளை படித்ததில்லை. சென்று பார்க்கிறேன்.

சிவா said...

முத்துக்குமரன்! இன்று தான் மறுபடி என்னுடைய ப்ளாக் பற்றி விரிவாக சொல்லியிருப்பதை பார்த்தேன். //**ஒரு கலைஞனுக்கு சிறந்த ரசிகனாக இருப்பதும் ஒரு கலையே. அதிலும் ரசனையும், அதைப்பற்றிய அறிவும் இருந்து விட்டால் இன்னும் குதுகலமே.**'// உன்மை தான். ராஜாவின் இசை எனக்கு கொடுத்திருப்பது நிறைய. நம்மை அறியாமலே நமக்கு ஒரு அமைதி, சந்தோசம் கொடுக்கும் ஆற்றல் அவர் இசைக்கு உண்டு. அடிக்கடி என்வீட்டம்மா சொல்வாங்க 'இளையரஜா கிறுக்கு புடிச்சிருக்கு." அப்படின்னு. சிரித்துக்கொள்வேன். அந்த கிறுக்கும் ஒரு கலை தானே :-)

முத்துகுமரன் said...

தங்கள் வருகைக்கு நன்றி அப்பிடி போடு

முத்துகுமரன் said...

இப்ப சரியாயிடுச்சு குமரன். மீண்டும் பழைய உற்சாகத்துடன் களம் இறங்கி விட்டேன்..( கொஞ்சம் ஓவராத் தெரியுதுல்ல:-

முத்துகுமரன் said...

நன்றி சிவா....

கிறுக்கன் என்று சொல்லப்படுவதில்

இன்று நீங்கள்.....

நாளை நான்.....

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP