நிவா''ரணம்''

ஓடிக் கொண்டிருக்கும் வரை
மதிப்பற்ற இதயம்
நின்றதும்
கிடைக்கிறது
இலட்சம் ரூபாய்
கேட்காமலே வழங்கப்படுகின்றன
பசி தூண்டா வாக்கரிசிகள்.
மாறுவதேயில்லை
மரணக்கும் போது
ம(மி)திக்கப்படும்
வறுமை.


புதைக்கும் முன்னமே
அழுகுகின்றன
அவர்கள் உடல்கள்
கொத்தித் தின்னும்
அரசியல் புழுக்களால்

6 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

சிங். செயகுமார். said...

லட்சங்களுக்காக நீங்கள்!
லட்சியங்களுக்காக நாங்கள்!
மறப்போம் மன்னிப்போம்!
மறவோம் மறவோம்!
உங்கள் ஓட்டு எங்களுக்கே!
"http://singaarakumaran.blogspot.com/2005/12/blog-post_113490121282760895.html"

துளசி கோபால் said...

ஆன்னா ஊன்னா இறந்து போனவங்களுக்கு ஒரு லட்சம் னு சொல்லி அறிக்கை. அது வாங்கப்
போறப்ப இன்னும் எத்தனை இழப்போ?

ஆமாம்,தெரியாமத்தான் கேக்கறேன். இப்பக் கொடுக்கற /கொடுக்கப்போற 42 லட்சத்துலே ஒரு ஒண்ணு ரெண்டு லட்சம் செலவு செஞ்சு
இன்னும் கொஞ்சம் காவலர்கள், இன்னும் கொஞ்சம் விரிவான ஒழுங்குபடுத்தல் செய்திருக்கலாமுல்லே?

உயிருக்கு இப்படி மதிப்பில்லாம போச்சேங்க. ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு இடத்துலே கொடுத்தாங்கன்னா இப்படிக் கூட்டம்
ஒரே இடத்துலே சேராதில்லையா?

மூர்த்தி said...

கவிதையால் அழுதிருக்கிறீர்கள்! உங்கள் மன வேதனையில் நாங்களும் பங்கு கொள்கிறோம் முத்துக்குமரன். தொலைக்காட்சிவழி காண நேர்ந்து வேதனை கொண்டோம்.

முத்துகுமரன் said...

உண்மை செயகுமார்.

இந்த பிணங்கள் தேர்தலின் ஓட்டுக்களை நிர்ணயிக்ககூடியவர்கள் ஆகிப்போயிருப்பதுதான்
அரசியல்வாதிகளின் பரிவுகளுக்கு காரணம்

முத்துகுமரன் said...

எல்லாவற்றையும் இழந்தவனிடம் அரசும், அரசு இயந்திரங்களும் தாக்குவது கொடூரமானது. உண்மையான இழப்புகளை சந்தித்தித்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் ஆளுங்கட்சிக்கு தொண்டர்களுக்கு மட்டும் போவதாக பரவலான குற்றச்சாட்டு வருகிறது. எடுத்துகாட்டாக மதுரையில் வெள்ளம் பாதிக்காத வார்டுகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. முழுமையாக வெள்ளம் பாதித்த சில வார்டுகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த லட்சணத்தில்தான் நிவாரணப்பணிகள் நடக்கின்றன. ஜெயலலிதா கேட்கும் நிவாரணத் தொகை மக்களுக்கானதா இல்லை அவரது தேர்தல் செலவுகளுக்கா என்று எழும் சந்தேகம் தவிர்க்க முடியாது. எதிர்க்கட்சிகளின் இந்த குரலை புறக்கணிக்க முடியாது. அரசியல் ஆதாயங்களுக்காக செயல்படும் இவர்கள் இருக்கும் வரை ஒழுங்காக நிவாரணம் கிடைக்காது. பேரழிவுச் சமயத்தில் கூட ஒன்றினையாமல் இருக்கும் போக்கும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது

முத்துகுமரன் said...

நன்றி துளசி அக்கா, மூர்த்தி

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP