அப்பாவின் சட்டை

முன்னும் பின்னும்
மிடுக்காய் நடந்து
மீசையைத் தடவி
கண்ணாடிக்கு அறிவித்தேன்
வளர்ந்துவிட்டேன் என்று.
அது
சிரித்துக்கொண்டே
பழைய நினைவுகளை
தோகை விரித்தது
நான் சட்டென
சிறுபிள்ளையாகிப் போனேன்

கைபற்றி நடைவண்டி பழக்க
விரும்பாது அவர் கை உதறி
தனியாய் ஓட்ட முயன்று
விழுந்தெழுந்த போது
புன்னகையோடு முட்டித் தளும்பிய
கண்ணீர்

என் மலத்துணி கசக்கி கசக்கி
தேய்ந்து போன கைரேகைகள்

கோவத்தில் அடித்துவிட்டு
தோளில் எனை சுமந்து நடந்த
அந்த நீண்ட இரவு....

அவர் குணமுறிந்து
என் தேவைகள் தீர்க்க
நடத்திய உண்ணாவிரதங்கள்

என் ரகசியமும் பகிர்ந்திட
வைத்திட்ட
நட்பு(பூ).

நினைவுகள் கலைய
என் கர்வத்தின் காரணம்
உணர்ந்தேன்

அது என் உடல்மீதிருந்த
இறுக்கமான
அப்பாவின் சட்டை

14 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

பிருந்தன் said...

அப்பாவின் சட்டை நல்லாக இருக்கிறது தொடர்ந்து தைக்க வாழ்த்துக்கள்.

சிங். செயகுமார். said...

இங்கே மீண்டும் ஓர் தவமாய் தவமிருந்து........

முத்துகுமரன் said...

//தொடர்ந்து தைக்க வாழ்த்துக்கள். //

வாழ்த்துக்கு நன்றி பிருந்தன். கண்டிப்பாக தொடர முயற்ச்சி செய்வேன்

முத்துகுமரன் said...

//இங்கே மீண்டும் ஓர் தவமாய் தவமிருந்து........ //

இது ஓராண்டுக்கு முன் நான் எழுதிய கவிதை. இப்போது சில வடிவ மாறுபாடுகளுடன்.

இந்தக் கவிதையின் முந்தைய வடிவம்
//கையோடு கைபற்றி
நடைவண்டி பயணம்....

நான் தனித்து முயன்று விழுகையில்
தடுமாறும் அவர் கண்களோர நீர்....

என் மலத்துணி கசக்கி கசக்கி
காணமல் போன அவர் ரேகைகள்.....

என் தேவை தீர்க்க
அவர் குணமுணர்ந்து
நான் நடத்திட்ட உண்ணாவிரதங்கள்.....

கோவத்தில் அடித்துவிட்டு
தோளில் எனை சுமந்து
நடந்த அந்த நீண்ட இரவு....

ஓட்டைபானை நீராய்
என் ரகசியம் சொல்லி
நனைட்திட வைத்திட்ட
நட்பு(பூ)........

அடடா ....
நான் இன்று அழகானேன்.
அணிந்திட்ட இறுக்கமான
அவர் சட்டையால்.......//

நன்றி செயகுமார்

நிலவு நண்பன் said...

அப்பாவின் சட்டை
ரொம்பவும் இறுக்கமாக இருந்தது முத்துக்குமார்..

உடம்பில் அல்ல இதயத்தில்...

முத்துகுமரன் said...

நன்றி நிலவு நண்பன்....

மு மாலிக் said...

இத்தகைய நினைவுகள் மறையா வண்ணம் மனதில் இருத்திவரும் தங்களுக்கும் அதனை பகிர்ந்துகொள்ளத் தூண்டிய உங்கள் மனத்திற்கும் நன்றிகள்.

முத்துகுமரன் said...

நன்றி மாலிக்.

இது போன்றே கவிதைகள் எழுதவே எனக்கு ஆசை.

ஞாபகங்கள் வரும் போதெல்லாம் இதுமாதிரி எழுத தவறுவதேயில்லை.

இளவஞ்சி said...

முத்துகுமரன்,

//ஓட்டைபானை நீராய்
என் ரகசியம் சொல்லி
நனைட்திட வைத்திட்ட
நட்பு(பூ)........// நன்றாயிருக்கிறது உங்கள் அப்பாவின் சட்டை....


என்னுடைய அப்பாவின் சட்டை இங்கே! :)
http://ilavanji.blogspot.com/2005/03/blog-post_15.html

முத்துகுமரன் said...

உங்கள் அப்பாவின் சட்டையும் இயல்பாக, உணர்வுப்பூர்வமாக இருந்தது இளவஞ்சி.

நன்றி

மதுமிதா said...

நன்று முத்துகுமரன்

அப்பாவின் சட்டை அப்பவின் நினைவுகளையும்,அப்பாவின் சட்டையுடன் நினைத்துப்பார்க்கும் மகனின் மனபாரம் இனிமையும்,இழந்த அவஸ்தையும் கலந்த உணர்வை வெளிப்படுத்தியது நன்றாக இருக்கிறது.

பரஞ்சோதி said...

முத்துக்குமரன்

அப்பாவின் சட்டை மீண்டும் படித்ததில் மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்த் உறவுகளின் கவிதைகள் கொடுங்க.

அன்புடன்
பரஞ்சோதி

முத்துகுமரன் said...

//அப்பாவின் சட்டை அப்பவின் நினைவுகளையும்,அப்பாவின் சட்டையுடன் நினைத்துப்பார்க்கும் மகனின் மனபாரம் இனிமையும்,இழந்த அவஸ்தையும் கலந்த உணர்வை வெளிப்படுத்தியது நன்றாக இருக்கிறது//

இந்த உறவுச் சங்கிலிப்பிணைப்பில்தானே நம் உற்சாக ஊற்றுகள் இருக்கின்றன.

நன்றி மதுமிதா அக்கா.

முத்துகுமரன் said...

//தொடர்ந்து உறவுகளின் கவிதைகள் கொடுங்க.//


கண்டிப்பாக அதற்கான முயற்சிகளைச் செய்வேன் பரஞ்சோதி.

தங்கள் வருகைக்கு நன்றி

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP