இருளின் வீதிகளில்

தேய்தலும் வளர்தலுமாய்
உன் நினைவுகளின்
ஆக்கிரமிப்புகளினூடாக
தொடர்கிறதென்
தனிமைப்பயணம்
நிலவோடு

வெளிச்ச இரைச்சல்களினால்
உணர்ந்திட முடியாது போன
உன் நேசத்துளிகளை
தேடவே
இமை மூடுகிறேன்
இருளின் வீதிகளில்

8 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்து(தமிழினி) said...

எப்படிய்யா இப்படியெல்லாம் ?

முத்துகுமரன் said...

என்ன செய்றது. இப்படித்தான் இருக்க வேண்டியிர்க்கே:-)

ramachandranusha said...

ரொம்ப நல்லா வந்திருக்கு. அடிக்கடி கவிதை எழுதாதீங்க. எப்பாவது ஒண்ணு. இதுப் போல போதும் :-)

எல்லா வரிகளும் சூப்பர்

முத்துகுமரன் said...

நன்றி உஷா.

நான் அடிக்கடி கவிதை எழுதுவது இல்லை.
ஆனால் அடிக்கு அடி உண்டு.:-)


இந்த கவிதை நன்றாக வந்திருக்கு என்றால் அதற்கு காரணம் மதுமிதா அக்காதான். நேற்று அவர்களின் மெளனத்தோடு உன் முன்னால் கவிதைத் தொகுப்பை வாசித்து கொண்டிருந்த போது உதித்த கவிதைதான் இது.

அதானால் பாராட்டுகளை அவரின் சாலைக்கே திருப்பி விடுகிறேன்

Pot"tea" kadai said...

அவ்வளவாகப் புரியவில்லை என்றாலும் புரிந்த மாதிரி தான் உள்ளது!
நல்ல கவிதை!

பட்டணத்து ராசா said...

//தேய்தலும் வளர்தலுமாய்//
நிலா மட்டுமா இல்ல நினைவுகளுமா

முத்துகுமரன் said...

//அவ்வளவாகப் புரியவில்லை என்றாலும் புரிந்த மாதிரி தான் உள்ளது!//

அப்ப நிச்சயமா நான் எழுதியிருக்கிறது கவிதைதானோ....

நன்றி பொட்'டீ'கடை

முத்துகுமரன் said...

//நிலா மட்டுமா இல்ல நினைவுகளுமா //

நினைவுகள்தான் நிலா போலவே...

என்றும் மாறததாக இருக்கிறது. உண்மையில் மறையாததாக இருக்கிறது

நன்றி பட்டிணத்து ராசா

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP