ஏன்? ஏனம்மா?

ஏன்? ஏனம்மா?
இத்தனை வேகம்
உ‎ன் வடிவம் பொலிவாக்கிட
பல்லாயிரம் உயிர்கள்
உதிர்ந்த சோகம்

ஏ‎ன்? ஏனம்மா?

பிய்த்து எறியபட்ட
எம்பிஞ்சுகளுக்கு தெரிந்திருக்கது.
உ‎ன் அதிர்வி‎ன் அர்த்தம்
தாய் மார்புச்சூடென்று நினைத்திருக்கும்..

தமிழ்த்தாகம்
தீரவில்லையோ
பொங்கிப் புகுந்த
உ‎ன் உவர் வெள்ளத்திற்கு

உயிரோடு ஒவ்வொரு நாளும்
உணவுக்காக
உன்மடியில் மிதந்தவனுக்கு
உன்னாலே
மரணப் பரிவட்டம்

தினமும் செத்துசெத்து
வாழ்ந்தவனுக்கு
மரண வாழ்வும்
கொந்தளிப்பில்
ஏ‎ன்? ஏனம்மா?

வணங்கும் வடிவில் எல்லாம்
வந்து வழக்கு தீர்க்கிறாயே.

ஏன்?
ஏனம்மா?

5 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

பரஞ்சோதி said...

முத்துக்குமரன்

அருமையான கவிதை.

அன்னை ஒரு முறை தான் சோதிப்பாள், இனிமேல் கவலை வேண்டாம்.

சிங். செயகுமார். said...

யார் மீது கோபமோ
ஏனிந்த எண்ணமோ
தான் பெற்ற பிஞ்சே
தனக்கு இரை
போதும் உன் விளையாட்டு
புண்னியமாய் போகும் உனக்கு!
இன்றேனும் உனை நம்பி
பெற்ற மகனாம் பிள்ளை
உன்மீது சவாரி
தாய் பாசம்
தவறாகா
தூய எண்ணம்
தொலைந்து போகா!

முத்து(தமிழினி) said...

//வணங்கும் வடிவில் எல்லாம்
வந்து வழக்கு தீர்க்கிறாயே.//


GOOD

முத்துகுமரன் said...

நன்றி பரஞ்சோதி, சிங்.செயகுமார், முத்து

நிலவு நண்பன் said...

//பிய்த்து எறியபட்ட
எம்பிஞ்சுகளுக்கு தெரிந்திருக்கது.
உ‎ன் அதிர்வி‎ன் அர்த்தம்
தாய் மார்புச்சூடென்று நினைத்திருக்கும்..//


நல்ல யதார்த்தம் நண்பா.. மனம் உருக்குகிறது இந்த வரி.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP