*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 2

ஒரு சுயசரிதைக் கவிதை

அன்றொரு நேற்று
'அருணாச்சலம் பேரன்
லட்சுமி மவன்'

அடுத்தொரு நேற்று
'சுசி புருசன்'

நேற்றொரு நேற்று
'சுடர் அப்பா...
கதிர் அப்பா...
கண்மணி அப்பா'

இன்று
காவியா தாத்தா
ஓவியா தாத்தா
அபூர்வா தாத்தா


எனக்கொரு பெயர் இருப்பது
எப்படித் தெரியாமல் போனது
என் தெருக்காரர்களுக்கு...

-கவிஞர் மீரா

**கோடையும் வசந்தமும் தொகுப்பிலிருந்து**

11 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

neo said...

பல வருடங்கட்கு முன்பு கவிஞர் மீரா அவர்களின் பொன்விழாமலர் என்றே எண்ணுகிறேன்(சரியாக நினைவில்லை) கையிலே கிடைத்தது. அதில இந்தக் கவிதையைப் படித்ததாக நினைவு அல்லது குமுதமாக இருக்கலாம் (மாலன் காலத்தில்?)

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நெருங்கிய நண்பராக விளங்கிய மீரா (மீ.ராசேந்திரன்)அவர்கள் எளிய சொற்களால் வல்லிய கவிதை பின்னுபவர். தந்ததற்கு நன்றி. :)

குமரன் (Kumaran) said...

நன்றாய் இருக்கிறது முத்துகுமரன்.

உங்க அப்பா பெயர் என்ன? நீங்க சொன்னாலும் நான் மத்தவங்ககிட்ட அவரை அறிமுகப்படுத்தணும்னா முத்துகுமரன் அப்பான்னு தான் சொல்வேன். எனக்கு முதல்ல தெரிஞ்சவர் முத்துகுமரன் தானே. அப்படித் தான் மேலே சொல்லப்பட்டவையும்.

இப்படிக்கு இன்னாருடைய பேரனிலிருந்து இன்னாருடைய அப்பாவான குமரன். :-)

சிங். செயகுமார். said...

அன்று
இவர் மகன்
இவன் என்றார்கள்

இன்று
இவன் தந்தை
இவர் என்கிறார்கள்

நாளை
அவன் தான்
இவன் என்பார்கள்

அப்டிப்போடு... said...

இது பெண்களுக்குத்தான் முதலில் பொருந்தும். சரி., உங்களையாவது மனிதரோட சம்பந்தப் படுத்திதான இன்னாரு மகன்.. பேரன்... அப்பா.. தாத்தா எல்லாம்., ஆனா நம்மள அம்மா, பாட்டி, தங்கை, மகள் இது மட்டுமல்ல... விளங்காத பொருட்களின் வரிசையிலும் வைத்திருக்கிறார்கள். மது, மாது.... பணம்... பானம்...பாவை.... இப்படி ஏதாவது ஆண்களுக்கு இருந்தால் சொல்லுங்கள். மீராவை எப்போதோ வாசித்தது.

ENNAR said...

ஆமாம் அப்படித்தான் சொல்வார்கள்

ஜோ / Joe said...

நல்ல கவிதை.நன்றி!

செயக்குமார்,
உங்க கவிதைல கடைசி வாக்கியம் புரியல்ல.

பிரதீப் said...

அனைவருக்கும் இருக்கும் பொதுப் பிரச்சினை இவை.
கல்லூரியில் படித்த என் நண்பர்கள் வட்டாரத்தில் அதே கல்லூரியில் பேராசிரியராக இருந்த என் தந்தை கூட பிரதீப் அப்பாதான்.
என்ன செய்வது, அதிலும் ஒரு பிரபலத்தின் குடும்பத்தில் இருந்துவிட்டாலோ, ஆலமரத்தின் கீழ் முளைக்கத் திணறும் அகத்திச் செடியின் கதிதான் நமக்கு.

சூப்பரப்பு

சிங். செயகுமார். said...

அதோ போராரே அவர் பையன் தான் ஜோ
இது அன்று


அதோ போராரே அவர் யார் தெரியுமா?
நம்ம ஜோவோட அப்பா!
இது நேற்று வரை

அதோ போராரே அவரு யாருன்னு தெரியலையா?

அவருதாங்க வியட்நாம் வீரன்,உலகம் சுற்றும் வாலிபன். அவள் விகடன்லகூட வந்துச்சே......... இன்னும் புரியலையா!

முத்துகுமரன் said...

நன்றி நீயோ, குமரன், அப்படிபோடு, சிங்.செயகுமார், என்னார், ஜோ, பிரதீப்.

மீராவைப்பற்றியே தனிப்பதிவுகள் பல எழுதலாம். காலம் வாய்க்கும் போது நிச்சயம் செய்வேன்

முத்துகுமரன் said...

நன்றி நீயோ, குமரன், அப்படிபோடு, சிங்.செயகுமார், என்னார், ஜோ, பிரதீப்.

மீராவைப்பற்றியே தனிப்பதிவுகள் பல எழுதலாம். காலம் வாய்க்கும் போது நிச்சயம் செய்வேன்

இனியவள் said...

கவிதை நன்றாக உள்ளது

அன்புடன் இனியவள்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP