*நட்சத்திரம்* - பிடித்த கவிதைகள் ஆறு - கவிதை 6

புரிந்து கொள்ளுங்கள்!

புரிந்து கொள்ளுங்கள்-எதிரியைப்
புரிந்து கொள்ளுங்கள்!

சூரியனை அப்பிய முகங்களுக்குள்ளே
சூனிய இருள்கள் புதைந்து கிடைக்கும்
உதட்டில் நெளியும் சாத்வீக மந்திரம்
உள்ளத்தில் ஆயிரம் ஓநாயின் ஓசை

அகிம்சை உறைக்குள் ரத்தவாடை
அமைதிவனத்தில் நச்சுப் பூக்கள்
தருமச் சக்கரம் சுழலும் தடங்களில்
புதையும் மானுட உயிரின் ஓலம்

இதனது முகத்தை எவர் கிழிப்பார்கள்
இவனது தோலை எவர் உரிப்பார்கள்
இந்த எதிரையைப் புரிந்தவர் எவரோ
இந்த வரலாற்றைப் படைப்பவர் அவரே!

-கவிஞர். இன்குலாப்

** ஒவ்வொரு புல்லையும் - இன்குலாப் கவிதைகள், இயல் 4**

2 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குமரன் (Kumaran) said...

'தாமே தமக்குச் சுற்றமும்' என்பார் மாணிக்க வாசகர். நாமே நமக்குப் பகைவர் என்பர் நம் முன்னோர். அந்த உட்பகைவனைச் சொல்கிறாரோ கவிஞர்?

முத்துகுமரன் said...

இந்த கவிதையின் அர்த்தம் புரிய வேண்டியவர்களுக்கு மிகத் தெளிவாகவே புரியும்.ஆகையால் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் குமரன்.

தங்கள் வருகைக்கு நன்றி.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP