*நட்சத்திரம்* - ஊரோடு ஒத்து வாழ் !!!( வணிக இடைவேளை)

6 வித்தியசமல்ல. 1வித்தியாசம்தான்:

புகைப்படங்கள் நன்றி :
www.thinnai.com
http://pksivakumar.blogspot.com.

பி.கு: மேற்கூறியதில் இருந்து நீதியோ, நகைச்சுவையோ, காழ்ப்புணர்வோ - அப்பிடி ஏதாவது இருந்தால் எடுத்து கொள்வது அவரவர் திறனுக்குரியது.

இது ஒரு வணிக இடைவேளை மாதிரி.

ஆசுவாசப்படுத்திகொள்வதற்காக

இடைவேளைக்கு பின் நாளை புதுப் பதிவோடு வருகிறேன்

25 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

குமரன் (Kumaran) said...

ஒன்னுல மீசை இருக்கு. இன்னொன்னுல இல்லை. இது தவிர வேற எதுவும் எனக்குப் புரியலீங்கோ....

முத்துகுமரன் said...

அம்புட்டுதான்:-)

ENNAR said...

அதே அதே

நண்பன் said...

இடமறிந்து மீசை வை - அப்படியா?

G.Ragavan said...

புகைப்படக் கூட்டுகள் அருமை. ஒன்றில் யாருக்குமே இல்லை. ஒன்றில் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் ஒருவர் இரண்டிலும் இருக்கிறார். ம்ம்ம்ம். இத மட்டுந்தான் சொல்ல வந்தீங்களா?

அப்டிப்போடு... said...

:-)))))))., இதுக்கு நாம் எதாவது எழுதப்போயி ஏன் வம்பு?

பரஞ்சோதி said...

முதல் படத்தில் வாங்குகிறார், இரண்டாவது படத்தில் விற்கிறாரா?

(எல்லோரும் சொல்வதையே சொல்வது சரியல்ல)

நண்பன் said...

முத்துகுமரன்,

மீசை ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம்.

சில நாட்களில் நான் கூட மீசை இல்லாதிருந்திருக்கிறேன்.

அதை ஒரு விவாதப் பொருளாக மாற்றுவது சரியா?

இதைவிட நேரடியான ஒரு விவாதத்தை வைத்திருக்க்லாம்.

புறத்தோற்றம் எள்ளி நகையாடப்படக்கூடாது என்பது என் எண்ணம். இல்லையென்றால், நகைச்சுவைக்காக 'சொறித்தலையா' போன்ற வார்த்தைகளை உபயோகித்து பிரபலமடைந்த கவுண்டமணி தரத்திற்குப் போய்விடுவோம்.

முத்துகுமரன் said...

//புகைப்படக் கூட்டுகள் அருமை. ஒன்றில் யாருக்குமே இல்லை. ஒன்றில் எல்லாருக்கும் இருக்கிறது. ஆனால் ஒருவர் இரண்டிலும் இருக்கிறார். ம்ம்ம்ம். இத மட்டுந்தான் சொல்ல வந்தீங்களா?
//

ஆமான்னு சொன்னா நம்பவா போறீங்க ராகவன்:-)

முத்துகுமரன் said...

//:-)))))))., இதுக்கு நாம் எதாவது எழுதப்போயி ஏன் வம்பு? //
:-))))))))))) பதில் சொல்லு நான் மட்டும் வம்ப வாங்கணுமா என்ன?

முத்துகுமரன் said...

முதல் படத்தில் அவர் நாயகன். இரண்டாவது படத்தில் அவர் பார்வையாளர்.

எல்லோருக்கும் ஒரே பதிலை சொல்லலை பரஞ்சோதி. சரிதான.

நன்றி

முத்துகுமரன் said...

//புறத்தோற்றம் எள்ளி நகையாடப்படக்கூடாது என்பது என் எண்ணம். //

இது புறத்தோற்றத்தை பற்றிய எள்ளல் இல்லை நண்பன். எந்தவித திட்டமிடல்களும் இன்றி 10 நிமிடத்தில் முடிவு செய்து போடப்பட்ட பதிவு இது. மேலும் இரண்டு படங்களையும் பார்த்த போது சட்டென ஒரு ஒற்றுமை இருப்பதாக தோன்றியது.
பார்ப்பவரின் ரசனைக்கேற்ப செய்திகள் சொல்லக்கூடியதாய் தோன்றியிற்று. அதனால்தான் பதித்தேன். விவாதத்திற்குரிய கனம் இதற்கு இருக்கிறது என்று உணர்பவர்கள் தாராளமாக விவாதிக்கலாம்.நானும் கலந்து கொள்கிறேன்.

முத்துகுமரன் said...

கருத்து சொன்ன குமரன், என்னார் அய்யாவிற்கு எனது நன்றீகள்.

அப்புறம்
தாமத பதிலுக்கு எனது மன்னிப்புகள்

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன் ஒரு சந்தேகம். Thanks என்று சொல்வதை நான் நன்றிகள் என்று சொல்வேன். ஆனால் Sorry என்று தானே சொல்வோம். நீங்கள் மன்னிப்புகள் என்று சொல்கிறீர்களே?

Oh...Apologies?!!!

Pot"tea" kadai said...

ஒருத்தர் "அப்துல் கலாம்" மத்த மூனு பேர் யாருங்க!
:-)

முத்துகுமரன் said...

//நீங்கள் மன்னிப்புகள் என்று சொல்கிறீர்களே?//

குமரன் தீராத இலக்கண ஆர்வம் வந்திடுச்சு போல:-)

முத்துகுமரன் said...

//ஒருத்தர் "அப்துல் கலாம்" மத்த மூனு பேர் யாருங்க!
:-)
//

அந்த படத்தை மொத தடவ பார்த்த போது பரிசு வாங்குறது யாருன்னு என்னால அடையாளம் கண்டுபிடிக்கமுடியலை. படத்துக்கு கீழ எழுதி இருந்ததை வச்சித்தான் நானே தெரிஞ்சுகிட்டேன்.

மத்த ரெண்டு பேரும் யாருன்னு தெரியலை. யாராவது பெரிய இலக்கியவாதிகளுக்கு தெரிந்திருக்க கூடும்:-)

G.Ragavan said...

// ஆமான்னு சொன்னா நம்பவா போறீங்க ராகவன்:-) //

நிச்சயமாக இல்லை முத்துக்குமரன். இங்கு நண்பன் குறிப்பிட்ட கருத்துதான் என்னுடையதும்.

tbr.joseph said...

குமரன்,

என் மானசீக குருவைப் போயி மீசைக்கு முன் மீசைக்கு பின் அப்படீங்கறா மாதிரி போட்டு ஒரு விவாத பொருளாக்கிட்டீங்களே..

போட்டோ இருந்தா ஒரிஜினல் போட்டோ இல்லேன்னா போலின்னு ஒருத்தர் சொல்லிக்கிட்டிருந்தார்.. அப்புறம் அதையும் போலி கண்டுபிடிச்சி அவரை பீட் பண்ணார். அதுமாதிரி இல்ல இது..

மீசை இருந்தாலும் மீசை இல்லாட்டாலும் என் குரு குருதான்..

முத்து(தமிழினி) said...

ஜோசப் சார்,

அவரை முதல்ல விவாத பொருளாக்கணும்... அவர் எப்படி உங்களுக்கு குரு என்று சொல்ல முடியுமா?அவரை சிலர் நச்சிலக்கியவாதி என்று கூறுகிறார்களே? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?(இந்த கேள்வி முத்துகுமரனுக்கும் தான்)

முத்துகுமரன் said...

//அவரை சிலர் நச்சிலக்கியவாதி என்று கூறுகிறார்களே? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?(இந்த கேள்வி முத்துகுமரனுக்கும் தான்)//

பொதுப்படையாக அவ்வாறு கூறுவது தவறு. ஒவ்வொரு இலக்கியவாதிக்கும் அரசியல் முகம் உண்டு. அது வெளிவரும்போதுதான் அதைப்பற்றி விவாதிக்க முடியும். ஒரு இலக்கியவாதியின் மீதான மாற்று கருத்து அவரது எழுத்திற்கான மாற்று கருத்தாக எல்லா நேரத்திலும் அமைவது கிடையாது. சில நேரங்களில் விமர்சனங்கள் படைப்புகளையும் உள்ளடக்கி இருக்கும். சில நேரங்களில் இலக்கியவாதியைப் பற்றி மட்டுமான விமர்சனமாக இருக்கும்.

இந்த இருவகைக்குமான சமீபத்திய இரண்டு எடுத்து காட்டுகள்.

ஜெயகாந்தனின் நாய்ப் பேச்சு பற்றியான விமர்சனங்கள்.
சு.ராவின் பிள்ளை கெடுத்தாள் விளை பற்றி வந்த விமர்சனங்கள்.

அவருடைய எல்லா படைப்புகளையும் வாசித்துவிட்டு, அவர் கருத்தோட்டங்கள் எப்படி இருந்திருக்கின்றன என்பதை பற்றி தெரிந்து கொண்ட பின்புதான் ஜெயகாந்தன் எந்தமாதிரியான இலக்கியவாதி என்று என்னால் முடிவுக்கு வரமுடியும்.

ஜோசப் சார்,
மீசை இல்லாதிருப்பது அவரக்கு வந்துவிட்ட ஞானத்தை குறிக்கிறதோ என்னவோ.

முத்துகுமரன் said...

//நிச்சயமாக இல்லை முத்துக்குமரன். இங்கு நண்பன் குறிப்பிட்ட கருத்துதான் என்னுடையதும்//

நண்பனுக்கான பதில்தான் இதற்கும்.

அப்ப நீங்களே விவாதத்தை தொடங்கி வையுங்கள் ராகவன். ஜமாச்சிடலாம்:-))

tbr.joseph said...

முத்துகுமரன்,

ஜெயகாந்தன் அவர்களை சுமார் இருபது வருடங்களுக்கு முன் அவருக்காக நடத்தப்பட்ட பாராட்டுவிழாவில் சந்தித்து அவருடைய கதைகளைப் பற்றி பேசியிருக்கிறேன்.

அவருடைய சித்தாந்தங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய கதைகளைப் படித்து, படித்துத் தான் நானும் அவரைப் போலவே சாரி, அவரளவுக்கு அல்ல எழுத வேண்டும் என்று விரும்பினேன்.

என்னுடைய கதைகளிலும் கட்டுரைகளிலும் அவருடைய எழுத்தின் சாயல் லேசாக இருக்கும். அவர் கதையில் வரும் பாத்திரங்களின் குணாதிசயங்களை வர்ணிக்கும் முறை என்னுடைய படைப்புகளிலும் இருக்கும்..

அவர் நச்சிலக்கியவாதி என்பதை நானும் ஒரு நாளும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.. அவருடைய பார்வை வித்தியாசமானதுதான்.. தனக்குத்தான் எல்லாம் தெரியும், என்னை எவனும் கேள்வி கேட்கக் கூடாதென பேசுவதும் அவருடைய தனித்துவம் அவ்வளவுதான்.. அவருடைய கதாநாயகர்களும் அப்படித்தான்.

ஏன அவருடைய கதையை சினிமாவாக எடுத்தபோது கூட அவருடைய சாயலையொத்த ஸ்ரீகாந்தைத் தான் கதாநாயகனாக (ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்)தேர்ந்தெடுத்தார்.

குமரன்..

அவருக்கு மீசை இருக்கோ இல்லையோ அவருடைய ஞானத்துக்கு என்னைக்குமே குறை வந்ததில்லை.. அவரை வெறும் படைப்பாளியாக மட்டுமே பார்ப்பவன் நான். அதற்காக அவர் இச்சமுதாயத்தைப் பற்றி பேசியதையெல்லாம் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தமல்ல.

G.Ragavan said...

// அப்ப நீங்களே விவாதத்தை தொடங்கி வையுங்கள் ராகவன். ஜமாச்சிடலாம்:-)) //

நிச்சயமாக இல்லை. என்னுடைய விவாதத் திறமையின்மைதான் உங்களுக்குத் தெரியுமே. :-))

ஜோசப் சார் சொன்னது போல, அவருடைய கருத்துகளில் ஏற்புகளும் மறுப்புகளும் உண்டென்றாலும் ஒரு எழுத்தாளராக எனக்கும் ஜெயகாந்தனை மிகவும் பிடிக்கும்.

முத்துகுமரன் said...

ஜோசப் சார்,

தங்களுடைய விரிவான கருத்திற்கு நன்றி.

தற்போது ஒரு படைப்பாளியை விமர்சிக்கும் போது அதை அவரின் படைப்புகளின் மீதானா மதிப்பீட்டு விமர்சனமாக திரிக்கும் போக்கு நிலவுகிறது. ஜெயகாந்தனின் எழுத்துகளைப் பற்றி முழுமையாக வாசித்த பின்பே சொல்ல முடியும். ஆனால் அவரது சமுதாயப்பார்வை குறித்தான விமர்சனங்களை என்னால் செய்ய முடியும்.

இலக்கிய தாகம் கொண்ட பலருக்கு ஜெயகாந்தன் ஒரு கம்பீரமான படைப்பாளி. அவரின் எழுத்துகளும் அவரது தோற்றமும் அதை அனைவருக்கும் அறிவித்திருந்தது.

நான் முன்பே தெளிவுபடுத்திவிட்டேன். அவரை நச்சிலக்கியவாதி என்று சொல்வது எனக்கு ஒப்புமை இல்லை என்று.

சரி ராகவன் - உங்கள் விருப்பம்:-)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP