நட்சத்திர வாரம் எப்படி


என் நட்சத்திர வாரம்என் நட்சத்திர வாரம் எப்படி


ஏமாற்றமே
பரவாயில்லை
நன்று
சிறப்பாக இருந்தது
எதிர்பார்த்த அளவிற்கு இல்லை

Current Results

9 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்துகுமரன் said...

இது ஒரு சோதனை முயற்சி.

ஓட்டெடுப்புகள் இணைப்பதற்காக பரிசோதிக்கிறேன்

இப்னு ஹம்துன். said...

அன்பின் முத்துக்குமரன்,
நட்சத்திரமாக நீங்கள் நன்றாகவே ஒளிர்ந்தீர்கள் என்றாலும்
அதிக கண்களுக்கு 'சர்ச்சை நெருப்பில்' குளிர் காயத்தான் ஆசை என்று நினைக்கிறேன்.
அற்புதமான கவிதைகளுக்கு கிடைக்காத பின்னூட்ட மரியாதை அரைகுறை சர்ச்சைகளுக்குக் கிடைப்பதும் அதனால் தான்.
மற்றபடி, நீங்கள் தேர்ந்தெடுத்துத் தந்த கவிதைகள் நன்றாகவே இருந்தன. நன்றி

முத்துகுமரன் said...

தங்கள் கருத்துக்கு நன்றி இப்னு ஹம்துன்.

வாக்களித்து கருத்து தெரிவித்திருக்கும் நண்பர்களுக்கும் என் நன்றிகள்

குமரன் (Kumaran) said...

முத்துக்குமரன், நீங்கள் உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதே என் கருத்து. நீங்கள் மற்றவர்களுடைய கவிதைகளைத் தந்திருந்தீர்கள். அது தவறில்லை. ஆனால் அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்கள் கருத்துக்களையும் கூறியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். இப்படிச் செய்திருக்கலாம். உங்கள் கருத்துக்களைக் கூறிப் பதிவுகள் எழுதி அவற்றின் நடுவில் நீங்கள் இட்ட கவிதைகளை இட்டிருக்கலாம். அதன் மூலம் நீங்கள் விரும்பிய அந்த கவிதைகளையும் இட்ட மாதிரி இருந்திருக்கும்; உங்கள் கருத்துக்களையும் சொன்ன மாதிரி இருந்திருக்கும்.

சர்ச்சை நெருப்பில் குளிர்காய்வதற்கு உங்கள் பதிவுகள் தேவையில்லை. அப்படி எழுதுவதற்குத் தமிழ்மணத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் சொல்வது உங்கள் கருத்துக்களை நேரடியாக அவை சர்ச்சைக்குள்ளாகும் என்றாலும் எடுத்து வைத்திருக்க வேண்டும் என்பதே. அப்படிச் செய்ய நீங்கள் தயங்குபவர் இல்லை என்பது என் கருத்து. ஆனால் விண்மீன் வாரத்தில் அப்படிச் செய்யாமல் ஏன் விட்டீர்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை.

கவிதை என்னும் உருவில் ஒரு கருத்து சொல்லப்படும் போது கவிஞர் அல்லாதாருக்கு அந்தக் கருத்து கவிதை என்னும் வடிவில் சொல்லியிருப்பதாலேயே உயர்வானக் கருத்தாய்த் தோன்றிவிடுகிறது; அதனால் எதிர் கருத்துக்களையோ இயைந்த கருத்துக்களையோ சொல்வதற்குத் தயங்குகிறார்கள்; அது கவிதை என்னும் வடிவின் மேல் உள்ள ஒரு மரியாதை; இப்படி இருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன்.

அதனால் தான் கவிதைகளுக்கு வரும் பின்னூட்டங்களை விட அரைகுறைச் சர்ச்சைகளுக்கு அதிக பின்னூட்டம் வருகிறது என்று எண்ணுகிறேன்.

நீங்கள் உங்கள் விண்மீன் வாரத்தில் அரைகுறை சர்ச்சைகள் என்று எதுவும் பதியவில்லை என்று தான் எண்ணுகிறேன். நண்பர் இப்னு ஹம்துன் என்ன நினைக்கிறாரோ :-)

சிவா said...

முத்துகுமரன்! உங்கள் சொந்த ஆக்கங்கள் நிறைய எதிர்பார்த்தேன். எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம். (அது தப்பு என்று சொல்லிடாதீங்க). மற்றபடி கொஞ்சம் ஏமாற்றம் தான். வரும் வாரங்களில் உங்கள் எழுத்துக்களை தொடருங்கள். படிக்கின்றேன்.

முத்துகுமரன் said...

//ஆனால் விண்மீன் வாரத்தில் அப்படிச் செய்யாமல் ஏன் விட்டீர்கள் என்பது தான் எனக்குப் புரியவில்லை. //

எனக்கு கிடைத்த நேரத்தை கொண்டு என்னளவில் திருப்தியாகத்தான் செய்திருந்தேன். அந்த கவிதைகளைத் தவிர மற்ற எல்லாமே எனது சொந்த புத்தியிலிருந்து வந்ததுதான். ஜெயகாந்தன் புகைப்படங்கள் கூட ஒருவகை கருத்து பதிவுதான்.

என் விருப்பம் 7 நாளும் 7 கவிதைகள் படைக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அப்படிசெய்திருந்தால் என்ன 7 நாளும் கவிதையாவே கொடுத்திட்டீங்க என்று சொல்லியிருப்பார்கள் பலர். அதனால் முடிந்த வரை என் பார்வைகள் எப்படி இருகின்றன என்பதையே என் வாரத்தில் தொட்டிருந்தேன்.

கவிதைகளுக்கு நான் விளக்கம் கொடுக்காமல் இருந்தது வாசகனுக்காகத்தான். கவிதையை வளர்க்க விரும்பினால் முதலில் வாசகனை வளர்க்க வேண்டும். அதற்கான சிறுமுயற்சிதான் அது.

விண்மீன் வாரத்தில் சர்ச்சைகள் இடம் பெறாது போனது தற்செயல் நிகழ்வுதானே அன்றி திட்டமிடல்கள் எதுவும் இல்லை. எந்நேரமும் சர்ச்சைகளோடு அலைய வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல. போலியாக எதையும் செய்ய விருப்பமில்லை.

எதிர்ப்பு என்பதையும் நான் ஆக்கப்பூர்வமாகத்தான் அணுகுகிறேன். கண்ணை மூடி கொண்டு எதிர்க்கவேண்டும் என்பதல்ல என் நோக்கம். எனக்கு ஒவ்வாதவைகளை சந்திக்கும் போது அது குறித்தான எனது எதிர்ப்பை எந்தவித தயக்கமுமின்றி வைப்பேன்.

மிகப்பலத்த:-) சர்ச்சையை கிளப்ப கூடிய ஒரு விடயம் மனதிற்குள் வேர் விட்டிருக்கிறது. பார்ப்போம் அது வெளிவர எவ்வளவு காலம் ஆகுமோ, ஆண்டுகள் ஆகுமோ?

குமரன் (Kumaran) said...

//மிகப்பலத்த:-) சர்ச்சையை கிளப்ப கூடிய ஒரு விடயம் மனதிற்குள் வேர் விட்டிருக்கிறது. பார்ப்போம் அது வெளிவர எவ்வளவு காலம் ஆகுமோ, ஆண்டுகள் ஆகுமோ?
//

எப்போது அது முழு வடிவு பெறுகிறதோ அப்போது போடுங்கள் முத்துக்குமரன். காத்திருக்கிறேன்.

இப்னு ஹம்துன். said...

==நீங்கள் உங்கள் விண்மீன் வாரத்தில் அரைகுறை சர்ச்சைகள் என்று எதுவும் பதியவில்லை என்று தான் எண்ணுகிறேன். நண்பர் இப்னு ஹம்துன் என்ன நினைக்கிறாரோ :-)==
==நீங்கள் உங்கள் விண்மீன் வாரத்தில் அரைகுறை சர்ச்சைகள் என்று எதுவும் பதியவில்லை என்று தான் எண்ணுகிறேன். நண்பர் இப்னு ஹம்துன் என்ன நினைக்கிறாரோ :-)==

அன்புச் சகோதரர் குமரன்,
நான் சுருக்கமாக சொன்னதை; விரிவாக சொல்ல எண்ணியதைத் தான் நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.
முழுமையாக உங்கள் கருத்து சரியே. நண்பர் முத்துக்குமரன் தேர்ந்தளித்த கவிதைகள் நன்றாக இருந்தன. நன்றாகவே ஒளிர்ந்தன. ஆனால் குளிர்காய 'சர்ச்சை நெருப்புகளையே' எதிர்பார்த்த மனங்களைப் பொறுத்தவரை அவை பாலையில் பொழிந்த நிலவு தான், இல்லையா...?

சிங். செயகுமார். said...

நான் சொன்னதையும் சொல்ல நினைத்ததையும் குமரன் சொல்லிவிட்டாரே....

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP