*நட்சத்திரம்* -

வெளிச்சப் புள்ளிகள்
காரிருள் வெளியில்
நட்சத்திரங்கள்.

மொட்டை மாடி, எப்போதுமே மகிழ்ச்சியின் அடையாளம். அலங்காரப் பொருட்களால் அழகு படுத்தப்பட்டிருக்கும்வீட்டை விட மொட்டை மாடி மிகவும் அழகனாது. குறிப்பாக இரவுகளில், பரந்து விரிந்த வான் வெளியைப் தன் கூரையாக விரித்து பால் கிண்ணமாய் நிலவையும், முத்துச் சிதறல்களாய் நட்சத்திரங்களையும் உடுத்தி கொண்டு வேர்வை துடைக்கும் தென்றலோடு வாழும் தருணங்கள் மிக அழகானவை.

தனியாகவோ, கூட்டமாகவோ, எப்படி இருந்தாலும் அங்கே முக்கியமாக நிகழ்வது நிலாப் பார்த்தல் மற்றும் நட்சத்திரங்களை எண்ணுதல். அதிலும் சிறுகுழந்தை போல் விளையாட்டு காட்டி ஓடிச் சொல்லும் நட்சத்திரங்களுடனான உறவு மிக இன்பமானது.

என்ன கதை சொல்ற மாதிரி இருக்கா?

இல்லைங்க.

இந்த வார நட்சத்திரம்(நட்சத்திர பதிவர்) நானாம். (எல்லாம் நேரம்ன்னு சிலர் முணுமுணுக்கிறது கேக்குது:-) )

தமிழர் திருவிழா நாட்களில் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என்னை மகிழ்விக்கிறது.

பரவலாக அறிமுகமின்றி இருக்கும் நண்பர்களுக்காக மேடை அமைத்து அவர்கள் உள்ளிருக்கும் தீயை ஊருக்கு அறிவிக்கும் முயற்சி இந்த நட்சத்திர பதிவர் முறை. வாய்ப்பு பெற்ற அத்தனை பேரும் தங்கள் வெளிச்ச வெள்ளத்தை நிரம்பவே பாய்ச்சி இருக்கிறார்கள். தங்கள் இருப்பை அழுத்தமாகவும் அறிவித்து சென்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகள். வரப்போகும் நட்சத்திரங்களுக்கும் எனது வாழ்த்துகள்

வலைப்பூவில் தீவிரமாக இயங்க தொடங்கிய குறுகிய காலத்திற்குள் எனக்கு இந்த வாய்ப்பளித்த தமிழ்மணம் நிர்வாக குழுவினருக்கு நன்றி. இது குறித்து என்னை தொடர்பு கொண்ட மதி கந்தசாமிக்கும், முறையாக அறிவித்த காசிக்கும் நன்றிகள்.

இது ஒரு பெரிய சவால். நட்சத்திரமா மின்னுறது இல்ல.(ஏன்னா நட்சத்திரம் தன்னைப் பொறுத்தவரை எப்போதும் அதன் ஒளியை இழப்பதில்லை. அது பார்ப்பவரை பொறுத்து) தினமும் தொடர்ந்து எழுதுறதுதான். ஒழுங்கா எழுதி விதிகளை காப்பாத்திடுவேன்னு நினைக்கிறேன். (இப்ப பார்த்து அலுவலகத்தில படுத்த ஆரம்பிச்சிட்டாங்க.... )

அதுனால இந்த வாரம் என்னை பொறுத்த வரை நட்சத்திர இரவு வாரம்:-)

ஒரு வாரம் எல்லோரையும் என்னை கவனிக்க வைக்க ஒரு வாய்ப்பு. இதை எப்படி பயன்படுத்துவது, என்ன மாதிரியான விசயங்களை எழுதுவது. எனக்குள் ஏகப்பட்ட சிந்தனைகள் வருகிறது. நிறைய எழுதத்தான் ஆசை.
ஆசைப்படறதுக்காக என் எண்ணத்தை எல்லாம் ஏழு நாளைக்குள்ள எழுதறதுங்கிறது கடினமானது. ஆனா முடிந்தவரை என்னை நிரூபிக்கும்/ விரும்பும் எழுத்துகளாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கடந்த சில நாட்களாக நண்பர்கள் சிலருக்கு ஒரு விதத் தவிப்பு. நான் பரபரப்பிற்காக எழுத ஆரம்பித்திருக்கிறேனோ என்று. நிச்சயம் பரபரப்படைய வேண்டும் என்பதற்காக மலிவான உத்திகளை கையாண்டு எழுதுவதில்லை. இனியும் அவ்வாறு செய்யப் போவதில்லை. என் மனதிற்கு நேர்மை என, உண்மை என படும் எதையும் தயங்காமல் சொல்லுவேன். எந்த காலத்திலும் நடுநிலை என்னும் அயோக்கியதனத்தைச் செய்யமாட்டேன்.

விதையின் பயணம் மென்மையானது அல்ல. கரடு முரடானதுதான். அதுபோலத்தான் கட்டுகளை உடைத்து கொண்டு வருபவன் குரலும். என் நியாயங்களை தயக்கமின்றி எப்போதும் உரத்துச் சொல்லுவேன். மற்றவர் அதை ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும்.

நான் எத்துனை மென்மையானவன் என்று என்னோடு பழகியிருக்கும், பழகும் நண்பர்களுக்கு தெரியும். அதே மென்மையை எழுத்தில் காட்டவேண்டும் எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் எனக்குள் எல்லைகள்
வைத்திருக்கிறேன். என் எழுத்துகள் கண்ணியமாக இருக்க வேண்டும், நாகரீகமாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்கவேண்டும். அதே போல் எந்த சூழலிலும் தனிமனித தாக்குதலில் இறங்க மாட்டேன்.

இந்த வாரத்தில் ஒரு கலவையான படைப்புகளாகவே தர எண்ணி இருக்கிறேன். எந்த வித வேடங்களுமின்றி, எந்த வித சாயங்களுமின்றி. கவிதைகள் முதல் கடவுள் வரை என் எண்ணங்களை என் புரிதல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அது மார்கழிப் பனியாகவும் இருக்கலாம். சித்திரை வெயிலாகவும் இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் உங்கள் இதயம் நனைப்பேன்

என்ற நம்பிக்கை இருக்கிறது

அன்புள்ள
முத்துகுமரன்

44 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

ramachandranusha said...

வாங்க, வாங்க.

அழகப்பன் said...

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட தமிழ்மணத்தின் முதல் நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள்.

இந்த நட்சத்திர வாரத்தில் தமிழ் ஆண்டு முறை குறித்தும், தற்போது தமிழர்கள் பயன்படுத்தும் சித்திரைப் புரட்டுகள் குறித்தும் விளக்கமாக விவாதித்து தமிழர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி உஷா, அழகப்பன்.

முத்துகுமரன் said...

என்னுடைய முந்தைய பதிவில் நட்சத்திர வாழ்த்து தெரிவித்த அப்படிபோடு, துளசி அக்கா, ஜோ, முத்து ஆகியோருக்கு எனது நன்றிகள்.

முடிந்தவரை சிறப்பான பதிவுகளை கொடுக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி

வசந்தன்(Vasanthan) said...

தமிழ்மணத்தில் நட்சத்திரமாக அறிவித்த பின்னும் எங்கடா பதிவைக் காணேல எண்டு பாத்தன்.

நட்சத்திரத்துக்கு வரவேற்பு.

இளவஞ்சி said...

வாழ்த்துக்கள் முத்துக்குமரன்,

நனைய காத்திருக்கும் இளவஞ்சி! :)

முத்து(தமிழினி) said...

//எந்த காலத்திலும் நடுநிலை என்னும் அயோக்கியதனத்தைச் செய்யமாட்டேன்.//

// என் நியாயங்களை தயக்கமின்றி எப்போதும் உரத்துச் சொல்லுவேன். மற்றவர் அதை ரசித்தாலும் ரசிக்காவிட்டாலும்.//

//நான் எத்துனை மென்மையானவன் என்று என்னோடு பழகியிருக்கும், பழகும் நண்பர்களுக்கு தெரியும். அதே மென்மையை எழுத்தில் காட்டவேண்டும் எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஆனால் எனக்குள் எல்லைகள்
வைத்திருக்கிறேன். என் எழுத்துகள் கண்ணியமாக இருக்க வேண்டும், நாகரீகமாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்கவேண்டும். அதே போல் எந்த சூழலிலும் தனிமனித தாக்குதலில் இறங்க மாட்டேன்.//

அருமையிலும் அருமை என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்.

எல்லா கவித்துவமான வாக்கியத்தையும் ஒரே ஆளே உபயோகப்படுத்திட்டா நாங்கள்ளாம் என்ன சொல்றது?

அப்டிப்போடு... said...

//எந்த காலத்திலும் நடுநிலை என்னும் அயோக்கியதனத்தைச் செய்யமாட்டேன்//.

அப்பிடிப்போடுங்கப்பு!., மகாமேதைகளும்., முற்றும் துறந்தவர்களாலுமே நடுநிலைமையா இருக்க முடியாது. நடுநிலை என்பதும் ஒரு கற்பனையே. நம் மனதிற்கு பட்டதை, நம் மனத்திற்கு விரோதமில்லாமல் எழுதினாலே போதும். அந்த எழுத்து வெல்லும் எழுத்தாக இல்லாமல் வெற்றெழுத்தாக நின்று போனாலும்....அது நமக்குத் தரும் நிறைவு ஒன்று போதும். (இந்த விதயத்தை வெறுபாடுகளை விதைப்பவர்களும், அடுத்தவரின் தூக்கம் பறிக்கும்படி எழுதுபவர்களும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.). நல்ல விதயங்களுக்கு மட்டுமே இதைச் சொல்கிறேன்.

மார்கழிப் பனியும், சித்திர வெயிலும் பழக்கப் பாட்ட ஆளுகதான இங்க எல்லாரும்?. தொடர்ந்து காலாசுங்க( நன்றி., பொட்டீக்கடைத் தம்பி!).

G.Ragavan said...

வாழ்த்துகள் முத்துக்குமரன். இந்த வார நட்சத்திரமாக நீங்க ஜொலிக்க எனது வாழ்த்துகள். நல்ல பொங்கல் பரிசுதான் இது.

இலவசக்கொத்தனார் said...

வரவேணும். தரவேணும்.
வாழ்த்துக்கள்.

பூங்குழலி said...

வாழ்த்துகள் முத்துக்குமரன்.

முத்துகுமரன் said...

வாழ்த்துக்கு நன்றி வசந்தன், இளவஞ்சி.....

முத்துகுமரன் said...

//அருமையிலும் அருமை என்று மட்டும் சொல்லி வைக்கிறேன்//

முத்து

எத்தனை நாள் ஆசை அய்யா இப்பிடி கிண்டல் பண்றதுக்கு...

நடத்துங்க நடத்துங்க

முத்துகுமரன் said...

நன்றி அப்பிடி போடு - உங்க போடு எல்லாம் அருவா போடாத்தான் இருக்கு

வாழ்த்துக்கு நன்றி கோ.ரா(எனக்கு ஜி.ராஇல்லை நீங்க)

முத்துகுமரன் said...

வாழ்த்துக்கு நன்றி இலவசகொத்தனார், பூங்குழலி

மோகன்தாஸ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் முத்துக்குமரன்.

//எந்த வித வேடங்களுமின்றி, எந்த வித சாயங்களுமின்றி. கவிதைகள் முதல் கடவுள் வரை என் எண்ணங்களை என் புரிதல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.//

முன்பு இராகவனின் பதிவில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். உங்களுடைய கருத்துக்களை எழுதுங்கள் முத்துக்குமரன். அதற்கு நட்சத்திர வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

tbr.joseph said...

வாழ்த்துக்கள் மு.குமரன்..

முத்துகுமரன் said...

வாழ்த்துக்கு நன்றி மோகன்தாஸ்.

//உங்களுடைய கருத்துக்களை எழுதுங்கள் முத்துக்குமரன். அதற்கு நட்சத்திர வாரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.//

உள்குத்தேதும் இல்லை என்றே நினைக்கிறேன்:-))

முத்துகுமரன் said...

நன்றி ஜோசப் சார்.


உங்கள் படைப்பில் நான் ரசிப்பது திரும்பி பார்கிறேன் தொடரைத்தான்.
நகைச்சுவை பதிவுகளை இன்னும் வாசிக்கவில்லை.
உங்களுடைய பதிவில் இதுவரை நான் பின்னூட்டம் போட்டதில்லை. அதே சோம்பல்தான் உங்கள் நட்சத்திரவாரத்திலும் தொடர்ந்து விட்டது. அதற்காக என்னுடைய மன்னிப்புகள் சார்.

மூர்த்தி said...

அன்பின் முத்துக்குமரன்,

அற்புதமான இந்த நட்சத்திர பயணத்திற்கு எனது அன்பு வாழ்த்துகள்!

உற்சாகமாக கலக்குங்கள்!

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் (வாழ்த்துக்கள்?!) முத்துகுமரன். உங்கள் விவகாரமான பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறேன். அட இந்த தட்டச்சுப் பிழைகள் அதிகமாய் வருகின்றன இப்போதெல்லாம். விவரமான பதிவுகள்ன்னு மனசு சொல்லுது. ஆனா விவகாரமான பதிவுகள்ன்னு தட்டச்சு அடிக்குது. :-)

இந்த வாழ்த்துகள் விஷயத்துல எனக்கு ஒரு சந்தேகம். உங்களையும் என்னையும் உட்கொண்டு பலபேர் வாழ்த்துகள் தான் சரி என்கிறோம்; அப்படியே எழுதுகிறோம். வசந்தன் வாழ்த்துக்கள் சரியா என்று தெரியவில்லை; ஆனால் பழக்கத்தின் அடிப்படையில் அப்படியே எழுதுகிறேன் என்கிறார். பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை சன் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்; எல்லா நேரங்களிலும் அவர்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தான் சொன்னார்கள். அதனால் இன்னும் குழம்பிப் போயிருக்கிறேன்.

இந்த மொட்டை மாடிக்குச் சென்று நிலவையும் விண்மீன்களையும் பார்ப்பது எனக்கும் மிகப் பிடித்த ஒரு செயல். இங்கு அமெரிக்காவில் நான் அதிகம் 'இழந்ததாய்' நினைப்பது இந்த விஷயம் தான். இங்கே எந்த வீட்டில் மொட்டை மாடி இருக்கிறது? படுத்துக் கொண்டு நிலவையும் விண்மீன்களையும் ரசிக்க. என்ன இடைவிடாத இணையத் தொடர்பு இருப்பதால் உங்களைப் போன்ற தமிழ்மண விண்மீன்கள் எழுதுவதைப் படித்து ரசிக்க முடிகிறது. :-)

// என் மனதிற்கு நேர்மை என, உண்மை என படும் எதையும் தயங்காமல் சொல்லுவேன். எந்த காலத்திலும் நடுநிலை என்னும் அயோக்கியதனத்தைச் செய்யமாட்டேன்.//

நடுநிலையாய் எழுத முயற்சித்தாலும் யாராலும் உண்மையான நடுநிலையில் எழுத முடியாது. அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலை, படித்தக் கேட்ட விஷயங்கள், நம்பிக்கைகள் இவை அவரவர் எழுத்தில் தானே தலை காட்டிவிடும். அதனால் பரபரப்பு ஊட்டும் தலைப்புகளில் கவனம் செலுத்தாமல் மனதிற்கு உண்மை, நேர்மை எனப் படும் எதையும் தயங்காமல் எழுதலாம். அப்படிச் சொந்த நம்பிக்கைகள் அடிப்படையில் எழுதிவிட்டு பின்னர் நான் நடுநிலையானவன் என்று சொல்வதைத் தான் அயோக்கியத் தனம் என்கிறீர்கள் என்றெண்ணுகிறேன். அப்படியென்றால் யோக்கியர்கள் இங்கு மிகக் குறைவு. நடுநிலையானவன் என்று சொல்லிக் கொள்பவர்கள் தங்கள் எழுத்துகள் (எழுத்துக்கள்?!) தம் நம்பிக்கையைச் சார்ந்து இருக்கின்றன என்ற உண்மையை உணராதவர்கள். அவர்களை அயோக்கியர்கள் என்பது சற்றே அதிகம். ஆனால் உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள் :-)

உங்களால் மார்கழிப் பனியாகவும் எழுத முடியும். சித்திரை வெயிலாகவும் எழுத முடியும் என்பதை உங்கள் எழுத்துகளைப் படித்த இந்த குறைந்த கால வேளையில் கண்டிருக்கிறேன். இந்த வாரமும் அப்படியே இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. என்ன இங்கு அமெரிக்காவில் இப்போது குளிர் காலம்; குளிர் வாட்டி எடுக்கிறது. நீங்கள் வெயிற்பதிவுகள் அதிகம் இட்டால் கொஞ்சம் இதமாகத் தான் இருக்கும். :-)

அட. உங்களுக்கு இடும் பிற்சேர்க்கையையே (பின்னூட்டத்தையே) ஒரு தனிப் பதிவாய் போடலாம் போலிருக்கிறதே. பேசாமல் பூங்குழலி போல் 'முத்துகுமரனின் நட்சத்திரப் பதிவு - பதில்'ன்னு போட்டுற வேண்டியது தான். :-)

நிலவு நண்பன் said...

அட முத்துக்குமரா..கலக்கிட்டீங்கப்பா..
வாழ்த்துக்கள். எல்லோரையும் கவனிக்கும் படி எழுதப்போறதா சொல்லியிருக்கீங்க..நீங்க வசிக்கும் துபாயோட சமூக அமைப்பு பத்தி எழுதுங்களேன். உபயோகமான தகவலாகவும் இருக்கும்.

சிவா said...

வாழ்த்துக்கள் முத்துகுமரன். கவித்துவமாக ஆரம்பித்துள்ளீர்கள். தொடருங்கள். காத்திருக்கிறோம்.

முத்துகுமரன் said...

நன்றி குமரன். விரிவான ஒரு பின்னூட்டத்திற்கு.

அப்பா நான் இந்த பதிவை எழுதியதற்கான வெற்றி உங்கள் பின்னூட்டத்தினால் கிடைத்துவிட்டது. அறிமுகப்பகுதியை விட்டுட்டு நட்சத்திரத்தை பத்தி எழுதலாம்ன்னுதான் நினைச்சேன். அப்புறம் சரி எதுக்கு வேணாம்ன்னு விட்டுட்டேன்.வாழ்த்துகள்தான் சரி அதே போல எழுத்துக்கள் என்பதுதான் சரி.மேலும் விரிவான விளக்கத்திற்கு இலக்கண நூல்களைத்தான் தேடிப் பிடிக்க வேண்டும்.

//என்ன இடைவிடாத இணையத் தொடர்பு இருப்பதால் உங்களைப் போன்ற தமிழ்மண விண்மீன்கள் எழுதுவதைப் படித்து ரசிக்க முடிகிறது. :-)//

உங்களுக்கு மிக அதிக நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அப்பிடியே ஈரமான மனசும் கூட:-)

சன் டீவியைக் கொண்டு தமிழை சரி பார்ப்பது.... ஏன் ஹிகுமரன். இப்படி எல்லாம் விசப்பரிட்சையில இறங்குறீங்க

G.Ragavan said...

குமரன் நீங்கள் என்னிடம் அடிதான் வாங்கப் போகின்றீர்கள் :-) இந்த வாட்டி ஸ்மைலி போட்டிருக்கேன். அடுத்த வாட்டி இருக்காது.

நான் சொல்றது இந்த வாழ்த்துகள் பத்தி. ஏற்கனவே ரெண்டு வாட்டி வெளக்கு வெச்சி விளக்கியாச்சு. எத்தன வாட்டி சொல்றது? வாழ்த்துக்கள் தப்பு. தப்பு. தப்பு. குழந்தைக்கள் என்று சொல்றோமா? முல்லைக்கள்ளுக்கும் முல்லைகளுக்கும் உள்ள வேறுபாடு தெரியலையா? டீவீல ஆயிரஞ் சொல்லுவான். அவனென்ன இலக்கணம் இலக்கியம் காப்பாத்த வந்தவனா....இல்லைல. இனிமேலாவது என் பேச்சைக் கேளுங்க. ஆமாம்.

பிரதீப் said...

முத்துக்குமரன்,
மனமார்ந்த வாழ்த்துகள் (ஏம்ப்பா இதையெல்லாம் பெரிய எழுத்தில போட முடியாதா?)
நீங்க கலக்குங்க....

முத்துகுமரன் said...

நன்றி மூர்த்தி
நல்லதொரு வாரமாக அமைய ஆண்டவனை பிராத்திக்கிறேன்

முத்துகுமரன் said...

உங்கள் வாழ்த்திற்கு நன்றி நிலவுநண்பன்.

துபாய் பற்றி வாரக் கடைசியில் அநேகமாக வெள்ளியன்று எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.

வாழ்த்திற்கு நன்றி சிவா.

கவிஞன் கவித்துவமா ஆரம்பிக்காட்டிதான் ஏதாவது கோளாறு இருக்குன்னு அர்த்தம். நல்லவேளை நான் கூறோடதான் இருக்கேன்னு ஒத்துகிட்டீங்களே

பிரதீப் உங்களைப் போலவே உங்கள் அன்பும் மிகப்பெரியதுதான்:-), எழுத்ததிலும் போடத்தான் வேணுமா என்ன?

ஆசிப் மீரான் said...

மக்கா, நல்லா இருங்கடே!!
இந்த வாரம் மட்டுமில்லாம எல்லா வாரமும் நட்சத்திரப் பதிவா போட்டுத் தாக்குங்கடே!!

சாத்தான்குளத்தான்

குமரன் (Kumaran) said...

இராகவன். நீங்கள் வசந்தனின் இந்தப் பதிவைப் பாருங்கள். அவர் சொன்னது சரியாகத் தான் எனக்கும் தோன்றுகிறது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் ஒவ்வொருமுறையும் வாழ்த்துக்கள் என்றும் எழுத்துக்கள் என்றும் தான் எனக்கு எழுத வருகிறது - பழக்கம் இது; தவறு என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு வாழ்த்துகள் எழுத்துகள் என்று எழுதுகிறேன்.

வசந்தனின் பதிவு: http://vasanthanin.blogspot.com/2006/01/blog-post_15.html

ஞானவெட்டியான் said...

அன்பு முத்துக்குமரன்,

சிறிது காலந்தாழ்த்தி வந்தாலும் வந்தேன்! வாழ்த்து மழை பொழிந்துள்ளது. என் நல்வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

முத்து(தமிழினி) கூரியதையே நானும் கூறவேண்டியுள்ளது.

//என் எழுத்துகள் கண்ணியமாக இருக்க வேண்டும், நாகரீகமாக இருக்க வேண்டும், உண்மையாக இருக்கவேண்டும். அதே போல் எந்த சூழலிலும் தனிமனித தாக்குதலில் இறங்க மாட்டேன்.//

மிக அருமையான கொள்கை. இப்படியே அனைவரும் இருத்தலாகாதா?

முத்துகுமரன் said...

//எல்லா வாரமும் நட்சத்திரப் பதிவா போட்டுத் தாக்குங்கடே!!//

உத்தரவு குருவே:-))

முத்துகுமரன் said...

//சிறிது காலந்தாழ்த்தி வந்தாலும் வந்தேன்! வாழ்த்து மழை பொழிந்துள்ளது. என் நல்வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்//

அய்யா உங்கள் வாழ்த்துகளை அதிக மகிழ்வோடு ஏற்றுக் கொள்கிறேன்.

நன்றி

"வற்றாயிருப்பு" சுந்தர் said...

வாழ்த்துகள் முத்துகுமரன்,

நிறைய எழுதுங்கள்; உங்களுக்கு நிறைவுதரும் வகையில் எழுதுங்கள்; தொடர்ந்து எழுதுங்கள்.

அன்புடன்
சுந்தர்.

சிங். செயகுமார். said...

வாழ்துக்கள் நட்சத்திரமே. வாங்க வந்து பந்தி விரிங்க!

பரஞ்சோதி said...

ஆகா அட்டகாசம், நண்பரே!

நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு வாழ்த்துகள்.

என்றும் மாறா அன்புடன்
பரஞ்சோதி

முத்துகுமரன் said...

//நிறைய எழுதுங்கள்; உங்களுக்கு நிறைவுதரும் வகையில் எழுதுங்கள்; தொடர்ந்து எழுதுங்கள்.//.

நிச்சயமாக எனக்கு நிறைவு தருவதைத்தான் எழுதப் போகிறேன். தங்கள் வாழ்த்திற்கு நன்றி சுந்தர்.

முத்துகுமரன் said...

நன்றி சிங்.செயகுமார்.

பரஞ்சோதி உங்கள் மாறா அன்புக்கு நன்றி

Pot"tea" kadai said...

நட்சத்திர வாரத்தில் மேலும் பல "சலசலப்புகள்" ஏற்படுத்த என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.:-)

***காலம் தாழ்ந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.

நன்றி!
சத்தியா.

முத்துகுமரன் said...

//நட்சத்திர வாரத்தில் மேலும் பல "சலசலப்புகள்" ஏற்படுத்த என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.:-)//

வாழ்த்திற்கு நன்றி சத்தியா.
உங்கள் எண்ணம் ஏடேற வாழ்த்துகள்:-)

Pot"tea" kadai said...

***வாழ்த்துகள்.

Satheesh said...

வாழ்த்துகள்.

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி சதிஸ்

Dharumi said...

வாழ்த்துக்கள்..........ராகவன் உங்கள தான அடிப்பேன் என்றார் :-)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP