ஓடுகாலிகள்

பீடங்களின் பிடறிகளில்
விழுந்தன மரண அடிகள்
பெருவலியின் வேதனைகளை
கீரிடங்களைச் சரிசெய்யும் சாக்கில்
சமாளிக்கின்றன.
அக்கம் பக்கம்
யாருமில்லையென்பதை
உறுதி செய்துகொண்டு
வேகமாய் வருகின்றன
வீர முழக்கங்கள்.

எப்போதும் புறமுதுகிட்டு
ஓடத்தயாராயிருக்கும்
ஓடுகாலிகளே...
முதுகெலும்பற்ற
புழுக்களான உம்மோடு
போரிட அல்ல
என் வீரம்

8 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்து(தமிழினி) said...

இரண்டு இடங்களில் கவிதை முழுமையை தொடுகிறது...ஆனால் இப்போது எதற்கு இந்த முழக்கம்?

பரஞ்சோதி said...

அன்பு முத்துகுமரன்,

கவிதைகளின் வரிகள் அருமை. ஏதோ நச்சென்று சொல்லியிருக்கீங்க.

ஆனா எதை என்று தான் புரியலை, உங்களுக்கு தான் தெரியுமே, என் கவிதை அறிவு பற்றி தான் உங்களுக்கு தெரியுமே.

பிரதீப் said...

ஹ்ம்ம்...
உங்கள் வீர முழக்கத்துக்கு வாழ்த்துகள்!
பரம்ஸ் அண்ணாவுக்குப் புரியலைங்கறதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.

Pot"tea" kadai said...

கவிதை அருமை!
ஆனால் இந்த வீரமுழக்கம் இப்பொழுது எதற்கு என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை!
புரிய வேண்டிய புழுக்களுக்குப் புரிந்தால் சரி.:-)

முத்துகுமரன் said...

நன்றி முத்து தமிழினி, பரஞ்சோதி, பிரதீப், பொட்டீகடை.

சாதாரண கவிதை வரிகளே வீரமுழக்கங்களாக தெரிவது மகிழ்வான ஒன்றே.

இது வரை மூன்று பேர் தங்களை புழுக்களாக அறிவித்து சென்றிருக்கிறார்கள்(பின்னூட்டம் போடாமல்)

குமரன் (Kumaran) said...

அருமை. அருமை. சூப்பரோ சூப்பர். இனி என்னைப் புழுன்னு திட்டமாட்டீங்களே முத்துகுமரன்.

வர வர ரொம்பத் தான் திட்ட ஆரம்பிச்சுட்டீங்க. ஆனா எதுக்கு யாரைத் திட்டறீங்கன்னு தான் என் மரமண்டைக்குப் புரியறதில்லை.

என்ன சொல்றீங்க? இப்பப் புதுசாத் திட்ட ஆரம்பிக்கலையா? எப்பவுமே இப்படித் தான் திட்டுவீங்களா? எனக்கு தெரியாதுல்ல? அதான் கேட்டுட்டேன்.

முத்துகுமரன் said...

குமரன் ஊர்க்காரரான உங்களை அப்படித் திட்டுவனா? மதுரை வீரத்துக்குத்தானே பெயர் பெற்றது. புழுக்களுக்கு இல்லையே:-))

//என்ன சொல்றீங்க? இப்பப் புதுசாத் திட்ட ஆரம்பிக்கலையா? //.

என் கவிதையிலேயே இதற்கும் பதில் இருக்கிறது. இப்போது வேண்டுமானால் இன்னொன்றை செர்த்து கொள்ளுங்கள். முகமும் பெயர்களமற்ற அநாமதேய புழுக்களுக்கெல்லாம் என்று:-)))

அழகு said...

இத்தனைக் காலம் இணையத்தில் படித்து, எழுதி என்னதான் புரிந்து கொண்டார்களோ பின்னூட்டப் புண்ணியவான்கள்.

கவிதையின் தலைப்பு : 'ஓடுகாலிகள்'

தொடங்கும் சொல் : 'பீடம்'

ஒனக்கு வெளக்கஞ் சொல்லியே ....

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP