ஒரு காதல் கவிதை

மலர் கொத்துகள்
வாழ்த்து அட்டைகள்
பரிசுப் பொருட்கள்
தொலைபேசி உரையாடல்கள்
எதுவுமற்ற தனிமையில்
ஈரம் குறையமலே இருக்கிறது
நம் காதல்
சிட்டாங் கல்லெறிந்த குளத்தைப்போல
நினைவுகள் விரிய
ஒருவருக்கொருவர்
சமாதனம் சொல்லிக் கொண்டு.

26 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Pot"tea" kadai said...

//சிட்டாங் கல்லெறிந்த குளத்தைப்போல
நினைவுகள் விரிய
ஒருவருக்கொருவர்
சமாதனம் சொல்லிக் கொண்டு//

கேணியில் எறிந்த கல்லால்
விரிந்த நனவுகள்
என்னிடமே மீண்டு வந்தது
கனவுகளைப் போல

கைப்புள்ள said...

நல்ல கற்பனை முத்துகுமரன். ரசிக்கும்படியாக இருந்தது.

சிங். செயகுமார். said...

"மலர் கொத்துகள்
வாழ்த்து அட்டைகள்
பரிசுப் பொருட்கள்
தொலைபேசி உரையாடல்கள்
எதுவுமற்ற தனிமையில்
ஈரம் குறையமலே இருக்கிறது
நம் காதல்
சிட்டாங் கல்லெறிந்த குளத்தைப்போல
நினைவுகள் விரிய
ஒருவருக்கொருவர்
சமாதனம் சொல்லிக் கொண்டு"

பிரிந்த காதல் சேரும்
பிப் 14 ல்
துயரம் வேண்டாம் நண்பரே!
காத தூரம் சென்றும்
மோதல் வேண்டுமா?

மூர்த்தி said...

நல்ல காதல் கவிதை முத்துக்குமரன்.

முத்துகுமரன் said...

நன்றி பொட்டீ கடை.

உங்களுக்குள் இருந்த கவிஞரை இன்றுதான் சந்திக்க முடிந்திருக்கிறது.

கடைசி இரண்டு வரிகள் மனதை ஏனோ மயக்குகிறது.

முத்துகுமரன் said...
This comment has been removed by a blog administrator.
முத்துகுமரன் said...

//பிரிந்த காதல் சேரும்
பிப் 14 ல்
துயரம் வேண்டாம் நண்பரே!//

எது துயரம் சிங். செயகுமார்.

//காத தூரம் சென்றும்
மோதல் வேண்டுமா? //
அதில்தானே இருக்கிறது காதலின் இருப்பு

முத்துகுமரன் said...

கைப்பிள்ளை நன்றி

என் வீட்டுக்கு முதல்முறையாக வந்திருக்கிறீர்கள். ஒருவாய் சாப்பிட்டுவிட்டு போங்களேன்....

கைப்புள்ள said...

சாப்பிட கூப்பிட்டுட்டீங்க. சாப்பாடுன்னா நானும் நம்ம பசங்களும் ரவுண்டு கட்டி அடிப்போம். பரவாயில்லியா?
:)-

முதல் தடவை பின்னூட்டம் தானேயொழிய...இது என் முதல் வருகை அல்ல. நைசா எட்டிப் பார்த்துட்டு போயிருக்கேன் இரண்டொரு முறை. திருமண முறை பற்றிய உங்களது பதிவையும், பஸ் எரிப்பு பற்றிய பதிவையும் படித்திருக்கிறேன். ஆரியக் கூத்து பதிவையும் நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன்.

செந்தமிழில் எழுதும் உங்களைப் போன்ற பதிவர்களை எதாச்சும் அரைவேக்காட்டு தனமாப் பாராட்டறது அவ்வளவா நல்லாருக்காதுன்னு தான் சும்மாவே போயிடறது. அத்தோட நல்லாயிருக்கு, அருமைன்னு சொல்றதை தவிர இலக்கியத்தை ஆய்வு செய்து கருத்து வழங்கும் வல்லமை இல்லாத காரணத்தினால் இலக்கிய பதிவுகளில் 'தில்லானா மோகனாம்பாள் சிவாஜி கணேசன்' பார்வை தான்.

முத்துகுமரன் said...

//சாப்பிட கூப்பிட்டுட்டீங்க. சாப்பாடுன்னா நானும் நம்ம பசங்களும் ரவுண்டு கட்டி அடிப்போம். பரவாயில்லியா? :)-//

என்ன மருதக்காரன பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொல்லிடீங்களே....

அய்யா நான் இலக்கிய ஆவலோடதான் இருக்கேன். இன்னும் இலக்கியவாதியா ஆவல:-))

மோகனம்பாளுக்கு மறைந்திருந்து பார்க்கும் சண்முகனைத்தான் பிடிக்கும் என்பது தெரியாதா:-))

ENNAR said...

கவிதை நன்று

சின்னவன் said...

எதற்கு சமாதானம்

முத்துகுமரன் said...

நன்றி என்னார்.

வளர்ந்தவன் - அதில்தான் கவிதையே இருக்கிறது. முதல் வருகைக்கு நன்றி

Selva said...

Good one..

நிலவு நண்பன் said...

//சிட்டாங் கல்லெறிந்த குளத்தைப்போல
நினைவுகள் விரிய
ஒருவருக்கொருவர்
சமாதனம் சொல்லிக் கொண்டு//


நல்ல உவமை முத்துக்குமரா..

அழகாய் மனதை நெருடுகிறது..

சிவன்மலை said...

malar kothukkal illai
vazhtthu attaigal illai
parisupporutkal illai
kanivana mozhi pesum tholai pesi vuraiyadalgal illai
kaneerin eeram kuraiyamale
irukirathu num natppu,
oruvarukku oruvar
samathanam sollikondu.
maarathathu natpu mattumthan.
thuyaram vendam nanbare.
neenda thooram senralum natpu maaruma?

Karthik Jayanth said...

முத்துகுமரன்,

இந்த கவிதையை ஒரு கற்பனை என்று எடுத்துகொள்ள மனம் ஒப்பவில்லை..

//நினைவுகள் விரிய
ஒருவருக்கொருவர்
சமாதனம் சொல்லிக் கொண்டு.

மன்னியுங்கள்.. ஒரு தமிழ் இலக்கியவாதிக்கு ஆங்கில வாழ்த்துரை..

Hats off Buddy ...

நாகு said...

அவள்விட்டுச்சென்ற நினைவு,
விடாமல் துரத்தும் -- நிழல்!
குளக்கரையில் மீட்கையில்
மீண்டும் மீண்டும் வீழ்கிறேன்!

சிட்டாங்குளக் கல்போல

பட்டணத்து ராசா said...

//முதல் தடவை பின்னூட்டம் தானேயொழிய...இது என் முதல் வருகை அல்ல. நைசா எட்டிப் பார்த்துட்டு போயிருக்கேன் இரண்டொரு முறை. திருமண முறை பற்றிய உங்களது பதிவையும், பஸ் எரிப்பு பற்றிய பதிவையும் படித்திருக்கிறேன். ஆரியக் கூத்து பதிவையும் நுனிப்புல் மேய்ந்திருக்கிறேன்.

செந்தமிழில் எழுதும் உங்களைப் போன்ற பதிவர்களை எதாச்சும் அரைவேக்காட்டு தனமாப் பாராட்டறது அவ்வளவா நல்லாருக்காதுன்னு தான் சும்மாவே போயிடறது. அத்தோட நல்லாயிருக்கு, அருமைன்னு சொல்றதை தவிர இலக்கியத்தை ஆய்வு செய்து கருத்து வழங்கும் வல்லமை இல்லாத காரணத்தினால் இலக்கிய பதிவுகளில் 'தில்லானா மோகனாம்பாள் சிவாஜி கணேசன்' பார்வை தான்.
//
அதே அதே..
பாருங்க இதுகூட கட் அண்டு பெஸ்ட் தான் :)

முத்துகுமரன் said...

//இந்த கவிதையை ஒரு கற்பனை என்று எடுத்துகொள்ள மனம் ஒப்பவில்லை..//
நன்றி கார்த்திக் ஜெயந்த்...
கற்பனைகவிதைதான் இது. ஆனால் காதல் உணர்வோடு எழுதிய கவிதை. காதலர் தினம் என்னும் பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கும் கூத்துகளில் காதல் வாழ்வதில்லை. ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் உண்மையான அன்பினாலே அது வாழ்கிறது.

முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் எனது நன்றிகள் தோழரே

முத்துகுமரன் said...

//அவள்விட்டுச்சென்ற நினைவு,
விடாமல் துரத்தும் -- நிழல்!
குளக்கரையில் மீட்கையில்
மீண்டும் மீண்டும் வீழ்கிறேன்!

சிட்டாங்குளக் கல்போல//.

அற்புதமான கவிதை நாகு.
காதலை அழகாக படம்பிடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்..

முதல் வருகைக்கு எனது நன்றிகள். தொடர்ந்து வாருங்கள்.... கவிதைகள் நிறைய தாருங்கள்..

முத்துகுமரன் said...

//அதே அதே..
பாருங்க இதுகூட கட் அண்டு பெஸ்ட் தான் :)//

பட்டணத்து ராசா, கவிதைக்கு விளக்கம் சொல்லி தனிப்பதிவே போடும் நீங்கள் இப்படிச் சொல்லலாமா??..

நான் கவிதையில் இன்னும் வளர வேண்டும் என்று நினைக்கிறேன்:-)). பிறகாவது பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன்

பட்டணத்து ராசா said...

//நான் கவிதையில் இன்னும் வளர வேண்டும் என்று நினைக்கிறேன்:-)). //

இதுதானே வேணாங்குறது :-))

Karthik Jayanth said...

முத்துகுமரன்,

// முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் எனது நன்றிகள் தோழரே

உண்மையை சொன்னால், நேற்று பின்னிரவில் தூக்கம் வராமல் வலைபதிவுகளை பார்த்துகொண்டிருந்தேன். கண்ணில் பட்டது இந்த கவிதை பதிவு. சொந்த ஊரில் கிடைத்திருக்கும் மற்றுமொரு முகம் தெரியா நண்பன்.

***

உங்களுடைய 'தீபங்கள் பேசும்' - பார்த்தேன். ரசித்தேன் !. அழகான எழுத்துக்கள்.

எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை.. ப்ரிண்ட் எடுத்துள்ளேன்.. மிக நிதானமாக ரசிக்க வேண்டும், இந்த அவசர உலகில் இருந்து தள்ளி நின்று !

முத்துகுமரன் said...

//உங்களுடைய 'தீபங்கள் பேசும்' - பார்த்தேன். ரசித்தேன் !. அழகான எழுத்துக்கள்.

எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை.. ப்ரிண்ட் எடுத்துள்ளேன்.. மிக நிதானமாக ரசிக்க வேண்டும், இந்த அவசர உலகில் இருந்து தள்ளி நின்று !//

நன்றி நண்பரே...

என்னுடைய தீபங்கள் பேசும் தொகுப்பு கவிதை நூலாக அடுத்த மாதம் வருகிறது. தலைப்பை மட்டும் மாற்றி இருக்கிறேன்...

உங்கள் மென்மையான கவிதை ரசனை எனக்கு அதிகமான மகிழ்வைத் தருகிறது.

விக்னேஷ்வரி said...

அழகான, உண்மையான கவிதை. ரசித்தேன்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP