முத்துக்கள் நான்கு

சங்கிலிப்பதிவு மாலையில் இந்த முத்துவை கோர்த்துவிட்ட ஜோ அவர்களுக்கு நன்றி. இந்த விளையாட்டு ஆரம்பித்தவுடனேயே நான் எந்தப்பக்கம் இருந்து கொக்கி வரும் என்று யோசித்து ஒரு நான்கு பேரை குறித்து வைத்திருந்தேன். முதல் ஆளே கூப்பிட்டு விட்டார்.:-) அவருக்கு நன்றி.

பிடித்த நான்கு விசயம்:

அரசியல்: நான் மட்டும் விதிவிலக்கா என்ன. எனக்கு மிகவும் பிடித்த விசயம் அரசியல். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்த கூடியது இது. அதனால் ஒதுங்கிப் போகாமல் உள்ளே குதித்துவிடுவதுதான் நல்லது. அரசியல் தொடர்பான விவாதங்கள் மிகச் சுவையாக இருக்கும். பேச்சுத்திறனை வளர்க்க இது ஒரு சிறப்பான வழி.

கவிதை: எனக்குள் முதன்முதலில் ஒரு பெருமித உணர்வைத் தந்தது கவிதை. முதல் கவிதை எழுதி முடித்த போது ஏதோ சாதனை நிகழ்த்தியது போன்றதொரு உணர்வு. நமது எண்ணங்களை சிந்தனைகளை பதிவு செய்துகொள்ள வாய்த்திருக்கிற அற்புதமான வடிவம். எல்லா விதமான கவிதைகளும் பிடிக்கும். சமூகம் சார்ந்த கவிதைகளில் கவிஞனின் குரலாய் கவிதை இருக்க வேண்டுமே தவிர புனைவாக இருப்பதில் ஒப்புமை இல்லை.

கிரிக்கெட்: கிரிக்கெட் கிறுக்குப் பிடித்த கோடானு கோடி இந்திய திருமகன்களில் அடியேனும் ஒருவன். தோல்வி அடைந்து விடுவோம் என்று தெரிந்த ஆட்டங்களை கூட கடைசி பந்து வரை பார்க்கும் ஆள். கூட்டு முயற்ச்சிக்கும் இறுதி வரைக்கும் போராடக்கூடிய எண்ணத்திற்கும் இது ஒரு வினையூக்கி. கல்லூரியில் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் இல்லாத எங்கள் அணி பலமுறை வெல்லக்காரணமாக இருந்தது கூட்டு முயற்ச்சியும் போராட்ட குணமும்தான்.

காதல் & திருமணம்: மனித வாழ்வின் மிக முக்கியமான உணர்வு மட்டும் உறவு. இதன் மேல் எப்போதும் ஒரு மயக்கமுண்டு. உன்னை விரும்பக்கூடிய இதயத்திற்கு சொந்தக்கரானாய் இருப்பதே மாபெரும் சாதனை என்பேன். அதே போல் இறுதி மூச்சிருக்கும் வரை இணைந்திருக்கும் திருமண உறவு அழகான ஒன்று.
(மனசாட்சியின் பாடல்:
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாரும் இல்லை
வாலிபத்தில் காதலிக்க வழியுமில்லை...

அதுனால கல்யாணம் பண்ணிக்க போற ஆளையே காதலிச்சுக்கலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன்:-)))))) )


பிடித்த நான்கு தலைவர்கள்:

நேதாஜி: தேச விடுதலைக்காக வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தியவர். இவரது தலைமையில் சுதந்திரப்போராட்டத்தை நாம் எதிர்கொண்டிருந்தால் நமது இன்றைய பல துயரங்கள் வராமலே இருந்திருக்கும்.

டாக்டர். அம்பேத்கார்: தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். இந்த சட்ட மேதை மட்டுமரசியல் நிர்ணய சபையில் இல்லாதிருந்தால் இந்தியா இன்று இந்துத்துவ நாடாகி இருந்திருக்கும்.

தந்தைப் பெரியார்: வாழ்நாள் முழுவதும் தமிழர் நலனுக்காகவே சிந்தித்து செயலாற்றிய பெரிய மனிதர். தமிழன் முன்னேற்றத்திற்கு தடையாக எது வந்தாலும் அது தமிழாக இருந்தாலும் சரி ஆன்மீகமாக இருந்தாலும் சரி அதை தூக்கி எறி என்று சொன்ன மாவீரன்.

முத்துலெட்சுமி அம்மையார்: தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டவர்


மோசமான தலைவர்கள்:

மகாத்மா காந்தி
சர்தார் வல்லபாய் பட்டேல்
ராஜாஜி

பிடித்த திரைப்படத்துறையினர்:
கண்ணதாசன்
மொட்டை@ இளையராஜா
இயக்குநர். பாலா
ரஜினிகாந்த். ( நடிப்பு மட்டும், அரசியலில் அல்ல)

மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்கள்.
1.காதல் ஓவியம்
2. முதல் மரியாதை
3. காதலுக்கு மரியாதை
4. சேது

நான் வசித்த நான்கு இடங்கள்:
பள்ள பட்டி, கரூர் - 7 ம் வகுப்பு வரை
திருவரங்கம் - 12ம் வகுப்பு வரை
தர்மபுரி- கல்லூரி முடிய
துபாய்- தற்போதய நொடி வரை

எனக்குப் பிடித்த நான்கு உணவு:

சோறு + ரசம் + உருளைக்கிழங்கு பொறியல்
பழைய சோறு + சின்ன வெங்காயம்
வெண் பொங்கல் + சாம்பார்
கோழி வறுவல்

நான் தினமும் பார்வையிடும் இணையதளம்:

1. தமிழ் மணம்
2. ஜி.மெயில்
3. கூகுள்
4. என்னுடைய வலைப்பூ

நான் அழைக்க விரும்பும் நான்கு முத்துகள்:
1. அப்படிப் போடு
2. மதுமிதா அக்கா
3. J.S. ஞான சேகர்
4. பொட்டீக்கடை ''சத்யா''
*அழைக்க நினைத்த சிவாவையும், பரஞ்சோதியையும் முன்பே அழைத்த ராகவனுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.:-))))))))))))))*

15 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்து(தமிழினி) said...

straight to matter

//மோசமான தலைவர்கள்:

மகாத்மா காந்தி
சர்தார் வல்லபாய் பட்டேல்
ராஜாஜி //

ம்...அப்படி போடு அரிவாளை...

முதல் இடத்தில் இருக்கும் காந்தயையும் கடைசி இடத்தில் இருக்கும் ராஜாஜியையும் வேண்டிய அளவிற்கு அலசி விட்டதால் நடுவில் இருக்கும் வல்லபாய் படேல் பற்றி ஒரு தனிபதிவிட்டு அவரை உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று எழுத வேண்டுகிறேன்.

J.S.ஞானசேகர் said...

மோசமான தலைவர்கள் என்று, 'மோகன் தாஸ் கரம்சந்த், வல்லபாய்' இருவரையும் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஏன் என்று உங்கள் பார்வையில் சொன்னால், நாங்களும் தெரிந்து கொள்வோம்.

அவர்கள் நல்லவர்கள் என்று இத்தனை காலமாக நான் நம்பிக்கொண்டு இருக்கிறேன். என் சந்தேகம் தீர்த்துவைப்பீர்கள் என நம்புகிறேன்.

-ஞானசேகர்

ஜோ / Joe said...

நல்ல முத்துச்சரம் தொடுத்திருக்கிறீர்கள் முத்துக்குமரன்!

முத்துகுமரன் said...

அரசியல் சட்ட நிர்ணய சமையில் வல்லபாய் பட்டேல் செய்த இந்துத்துவ திணிப்பு முயற்ச்சிகளே அவரை மோசமான தலைவராக குறிப்பிட்டி இருந்தேன். இரும்பு மனிதர் என்பதெல்லாம் நம் மீது திணிக்கப்பட்ட்ட ஒன்று. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள இந்துத்துவத்தின் இருள் வெளிகள் - பேராசிரியர் அ. மார்க்ஸ் என்ற புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள். புரியும்

காந்தி தனது வறட்டு பிடிவாதத்தினால் பல்வேறு நியாயமான போராட்டங்களை முடக்கிப் போட்டவர். அவர் ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. எராவடா சிறையில் அவர் இருந்த உண்ணாவிரதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் துரோகமாய் அமைந்தது.

பழூர் கார்த்தி said...

வாழ்த்துகள் முத்துக்குமரன், நன்றாக முத்துகளை அளித்துள்ளீர்கள் !

****

மோசமான தலைவர்கள் என்று நீங்கள் கருதுவதற்கான காரணத்தை சுருக்கமாக பதிவிலேயே சொல்லியிருந்தால் நன்றாயிருந்திருக்கும்..

****

உங்களுக்கு பிடித்ததில் எனக்கும் பிடித்தது

கண்ணதாசன்
முதல் மரியாதை

பரஞ்சோதி said...

வழக்கம் போல் நல்லாவே எழுதியிருக்கீங்க.

ஆமா அது என்ன சங்கிலி பதிவு?, நான் என்ன செய்ய வேண்டும், ஏற்கனவே கீதா சகோதரி வேறு என் பெயரை சேர்த்திருக்கிறார்.

சந்திப்பு said...

முத்துக்குமரன் நீங்கள் குறிப்பிட்டுள்ள மோசமான தலைவர்கள் பட்டியல் பலருக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!

நான் தற்போது ரஜினி பாமிதத்தின் இந்திய வரலாறு படித்துக் கொண்டிருக்கிறேன். இதைப் படிப்பவர்கள் யாராக இருந்தாலும் காந்தியின் மீது துளிகூட மரியாதை வராது. இந்த காந்தி மட்டும் தேசிய இயக்கத்திற்கு தலைமை தாங்காமல் இருந்திருந்தால் இன்னும் 20 வருடத்திற்கு முன்னமேயே சுதந்திரத்தை பெற்றிருப்போம்.

காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய சவர்க்கார் போன்ற இந்துத்துவ தலைவர்கள் தப்பிப்பதற்கு வழிகோலியவர்தான் இந்த பட்டேல்

ராஜாஜி நம்மையெல்லாம் குலத் தொழில் செய்யச் சொன்னவர்...

தங்களது மினி பயோ டேட்டா அருமை!.... வாழ்த்துக்கள்!

G.Ragavan said...

இதென்னய்யா கோத்தா இருக்கு...ஏதோ...நானும் அவங்களக் கூப்பிட்டேன். அதுனால என்ன..முத்துக் குமரன். நீங்களும் அவங்களக் கூப்பிடலாம்.

எதிர் பார்த்த பட்டியல் தான் போட்டிருக்கீங்க.

Pot"tea" kadai said...

நண்பன் முத்துக்குமரனுக்கு,

பெரிய முத்துக்களோடு இந்த பொட்"டீ"கடை "மஸ்ஸெல்"(mussel) ஐயும் சேர்த்தற்கு நன்றி.
மூன்று முத்துக்களையும் முத்துக் குளித்த பிறகு, சிறிதே மஸ்ஸெல் (mussel) ஐயும் இளைப்பாற நம் பொட்"டீ"கடை க்கு வாருங்கள். அது வரை நான் சமைத்துக் கொண்டிருக்கிறேன்!

சோழநாடன் said...

////////
அதுனால கல்யாணம் பண்ணிக்க போற ஆளையே காதலிச்சுக்கலாம்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன்:-)))))) )
//////////
அட நம்ம கேசு. :-) (வக்கில்லன்னா இப்பிடித்தான் சொல்லிகிட்டு திரியனும்:-) )

முத்துகுமரன் said...

நன்றி முத்து(தமிழினி), ஞானசேகர், ஜோ, பரஞ்சோதி, சோம்மேறி பையன், சந்திப்பு, கோ.ராகவன், சோழநாடான், பொட்டீக்கடை...

முத்துகுமரன் said...

நேற்று முந்தினம் இடப்பட்ட பின்னூட்டம் இன்றுதான் திரட்டப்பட்டிருக்கிறது. ஏன் என்று விபரமறிந்தவர்கள் கூறூங்களேன்....

குமரன் (Kumaran) said...

வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

Kanni said...

///டாக்டர். அம்பேத்கார்: தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். இந்த சட்ட மேதை மட்டுமரசியல் நிர்ணய சபையில் இல்லாதிருந்தால் இந்தியா இன்று இந்துத்துவ நாடாகி இருந்திருக்கும்.///

இதை நீங்கள் "முஸ்லிம்" நாட்டிலிருந்து சொல்வதுதான் இடிக்கிறது. எனக்கு உங்களுடைய விரிவான அலசலும், தெளிவான நடையும் பிடித்தால் கூட விசாலமான எண்ணம் உங்களிடம் இல்லாதது வருத்தமே! அம்பேத்கர்,நேதாஜி போல சாதனை செய்ய வாழத்துக்கள்!.

Kanni said...

////காந்தி தனது வறட்டு பிடிவாதத்தினால் பல்வேறு நியாயமான போராட்டங்களை முடக்கிப் போட்டவர். அவர் ஒரு பிளாக் மெயில் அரசியல்வாதி. எராவடா சிறையில் அவர் இருந்த உண்ணாவிரதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரும் துரோகமாய் அமைந்தது.////


அரசியல்வாதியாக உங்களிடம் தோற்றுப்போன மகாத்மா காந்தியை ஒரு நல்ல மனிதராகவாவது பிடிக்குமா? (ஒரு சந்தேகம்தான்!)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP