இதம்தரும் காதல்கவிதைகள் எழுதிடும் நேரம்

04-05-06 வெறும் எண்களாகத் தெரியலாம் பலருக்கு.

ஆனால் ஒரு நீண்டகாதல் திருமணமாக மலர்ந்திருக்கிறது இன்று. என் கல்லூரித்தோழன் குப்புசாமி- ராஜேஸ்வரியின் திருமணம் இன்று. நான் மிக மிக மிக விரும்பிய ஒரு நாள். பக்கத்தில் இல்லாவிட்டாலும் என் மகிழ்ச்சியில் எள்ளவிலும் குறைவில்லை. எங்கள் நண்பர்கள் அத்தனை பேரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு அற்புதத் திருநாள். அவர்களின் பத்தாண்டு அன்பின் புதிய பரிணாமம். புதிய உறவில் அதே இனிமையான காதலோடு பயணிக்க இருக்கிறார்கள்.

எப்படி ஆரம்பித்தது எங்களுக்குள் நட்பு...

1997 அக்டோபர் மாதம் கல்லூரியில் சேர்ந்து எல்லோரும் விடுதிக்கு போகிறோம். மொத்தம் 16 பேர் இருவர் ஆந்திரா, ஒருவன் டில்லி, ஒருவன் மலையாளி ஒருவன் சென்னை, மீதி பதினொன்றும் மதுரை, மதுரைக்கு தெற்கே. விடுதிக்கு நான் என் தந்தை தாயாரோடு,குப்புசாமி அவன் அப்பாவோடு, சாரி வாங்க காலர நடந்திட்டு வருவோம்னு எங்க அப்பா சொல்ல நடக்க ஆரம்பித்தோம். என் கையில் குடை,பெரியவர்கள் பேசிக்கொள்ள நாங்கள் இருவரும் பேசத் தொடங்கினோம்.

நான் முத்துகுமரன்..

நான் குப்புசாமி, வீட்ல கூப்பிடறது கணேஷ்.

குப்புசாமி உங்க சொந்த ஊர்

திருநெவேலி

நான் வத்திராயிருப்பு ஆனா இப்ப மதுரை...

லைப்ல என்ன செய்ய ஆசை முத்து

நல்லா படிக்கணும்... படிச்சி முடிச்சோன வேலைக்கு போகனும்... போனவுடனே மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்( எதுவும் சரியா நடக்கலை என்பது உபரித் தகவல்)

நிசமா முத்து

ஆமா

நான் ஒரு வருசம் இம்புரூவ்மெண்ட் எழுதி வந்திருக்கேன்... உன்னை மாதிரி ஆளுங்களோட இருக்கணும்( ஆனா நடந்த கதை வேற)

முன்னேறனும்..

நாம ரெண்டு பேரும் ரெம்ப நெருங்கிட்டோம்
எப்படி குப்ஸ்
நானும் மாமா பொண்னை லவ் பண்றேன்..
நீங்க ட்புள் சைடா??
ஆமா!!
இங்க சிங்கிள் சைட்... ஒரு தலை ராகம்....

கவலைப்படாத நிச்சயம் நடக்கும்..
ம். உன் வார்த்தை பலிக்கட்டும்
பத்து நண்பர்களிலும் இவன் மேல் எனக்கு கொஞ்சம் கூடுதல் பிரியம்... காதல் பற்றி பேசலாம், நம்ம ஜாதி என்று..
இப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு...

குப்ஸ் நாம எப்பவும் மச்சினன் உறவுதான்.. நான் பொண்ணு வீட்டுகாரந்தான்.
டேய் இப்பதான் பழக ஆரம்பிச்சே இருக்கோம். அதுக்குள்ள அந்தப்பக்கம் போயிட்ட:-))

அதுதாண்டா பாதுகாப்பு... பொண்ணு வீட்டுகாரங்கனா எப்பவும் சாப்பாடு கிடைக்கும். நமக்குள்ள பிரச்சனை வந்தாலும் வீட்டுக்கு வர்றதுக்கு ஒரு சாக்கு வேணும்ல

முத்து இதுதாண்டா உன்கிட்ட பிடிச்சது.

இப்படியாக தொடங்கியது..

அடுத்த ஒராண்டிலே எங்களிருவருக்கும் சண்டை
அதுவும் காதல் விசயத்திற்காகதான்...
விளையாட்டுதனமாக என் காதலை கிண்டல் பண்ண எனக்கு கோவம் வந்துவிட்டது. பேசுவதை குறைத்து கொண்டேன்..
பொதுவாக வேறு வழியின்றி கல்லூரியில் பேசும் சூழல்களில் மட்டும் பேசிக் கொள்வோம்.. ஆனால் வெளியாட்களிடம் எப்போதும் விட்டுக்கொடுத்ததே கிடையாது...

ஆனால் அவன் காதல் பற்றி பேசும் போது மட்டும் விதிவிலக்கு. ஏனோ அவனும் என்னிடம் மட்டும்தான் மனம் விட்டு பேசுவான்...

ஒருமுறை அவர்களுக்குள் ஊடல்...

மிகவும் மனம் நொந்து பேசினான். சரி வா நான் போன் பண்ணி பேசுறேன் சிஸ்டர்கிட்ட...

பேசினன்

அண்ணா அவர்கிட்ட கொடுங்க.

பேசினான்...
குப்ஸ் மன்னிச்சிக்கடா?
எதுக்குடா
உன்கிட்ட சரியா பேசமா இருந்ததுக்கு...

அதன் பிறகு இன்று வரை நெருக்கம் இறூக்கமாகவே இருக்கிறது.
எங்கள் நண்பர் குழாமின் மற்றொரு முக்கிய அங்கம் லஷ்மிநாரயணன்.. அவனுக்கு பொழுது போக்கே குப்ஸை வம்பிழுப்பதுதான்..
காதாலாம் காதல்... முன்னேற பாருடா குப்பா?
இன்னும் மாமா பொண்ணுன்னு....

பயங்கரமாக வெறுப்பேத்துவான். அப்ப நாங்க ரெண்டு பேரும் நகர்ந்திடுவோம். எங்களுக்குள்ள பேசி உற்சாகப்படுத்திகிட்டு அவன கலாய்ப்போம்...

எங்கள் குழுவிலே வெற்றி பெற்ற காதல் என்பது அவனுடையதுதான். மத்த பத்து பேருக்கும் கல்லூரி கால சுபயோக சுபதினத்திலேயே ஆப்பு மற்றும் சங்கூதப்பட்டு விட்டது.

சகோதரி குப்ஸ்ற்கு மிகப்பொருத்தமானவர். அமைதி. அவன் மேல் அளவு கடந்த அன்பு. ஆனால் வெளிக்காட்டிக்காத குணம்.

என்ன செய்ய நம்மாள் கொஞ்சம் ரொமாண்டிக் டைப்....

முத்து காதல் வசனம் பேசுனா எந்த உணர்ச்சியும் காட்டாம தேமேனு இருக்காடா... எப்பிடி காலத்த கடத்த போறேனோ

கல்யாணம் பண்ணுடா, அப்புறம் பாரு பிரியமா நடந்துக்குவாங்க

அது தெரியும்டா

மனுசனுக்கு லவ்வுனா ஒரு திரில் வேணாமா?

திரில் வேணூமா கல்யாணம் பண்ணு..

டே எனக்காக பேசவே மாட்டியா...

நிச்சயம் மாட்டேன்.
**
கல்லூரி முடிந்து மேற்படிப்புக்காக ஜெர்மனி போனான். இப்போது அங்கு ஆராய்ச்சியாளனாக இருக்கிறேன்.
இந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் அதிகம் பேசியதும் காதலைப்பற்றியும் அவன் திருமணத்தை பற்றியும்தான்....
மனசு சங்கடமாய் இருக்கும் போதெல்லாம் என்னோடு பேசுவான். சின்ன சின்ன அழுத்தங்களை என்னோடு பரிமாறி இளைப்பாற்க் கொள்வான். அப்படிப்பட்ட ஒரு நண்பனாய் இருப்பதே எனக்கு அதிகப்படியான மகிழ்ச்சி...
**
இன்று திருமணம்...

ஆனால் நான் இங்கு துபாயில்...

ஆனால் திருமண நிகழ்வத்தனையும் என் கண்களுக்குள்.

பொண்ணு வீட்டுகாரன் இல்லையா.. அதுனால கொஞ்சம் பரபரப்புதான்...

திருமண மண்டபம்.. காலையில்
குப்புசாமி அப்பா: வாடா முத்து... ஆளே மாறிட்டியே..
நரம்பா இருந்த.. ம்ம்ம் சதையெல்லாம் வச்சு அசத்துற
கிண்டல் பண்ணாதீங்கபா.
நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்க...
உங்க 60ம் கல்யாணம் எப்பப்பா
அதை ஏன்பா ஞாபகப்படுத்திற... மறுபடியும் அதே பொண்ணுன்னு சொல்றாங்க்... மனசனுக்கு ஒரு மாற்றம் வேணாமா??
இருங்க அம்மாகிட்ட சொல்றேன்.. புதுப்பொண்ணு கேக்குறீங்கனு...
வேண்டாம்டா சரினு வேறொருத்தியை கட்டி வச்சாலும் வச்சிடுவா... அவளே போதும்...
அது...
குப்பன் சாதிச்சிட்டன்லாபா...
என் பையன்ல. அதான்..
குப்புசாமி அப்பாதான் எனக்கு ரெம்ப நெருக்கம்... தடலாடி ஆனால் அணுகிபார்த்தால் மென்மையானவர்..

அப்பாவை சந்தித்துவிட்டு வந்தால் நண்பர்கள் படை....

வழக்கமான நலம் விசாரிப்பகளோடு அவனவனுக்கு எப்போது திருமணம் என்ற அதிமுக்கியமான விசாரணைகள்..வேலை சூழல் பற்றிய செய்திகளோடு அடுத்த திருமணம் யாருக்கு என்பதை உறுதி செய்து கொள்கிறோம்.அவன் லஷ்மி நாரயணன்....( மகனே ஊருக்கு வரும் போது கல்யாணம் வைக்கல மாறுகால் மாறுகைதான்!!!).
சடங்குகள் ஆரம்பிக்கிறது.

மணமேடையில் குப்பனுடைய ஒவ்வொரு செய்கைக்கும் ரன்னிங் கமெண்டரி நடக்கிறது..
அங்க பாரு மாப்பிள்ளைய
என்னா பவ்யம்.. என்னா பொறுப்பு....
பொறில மாட்டுன எலிகதைதாண்டா இனிமே அவன் வாழ்க்கை...
லக்ஸ்(லஷ்மி) அடுத்த எலி நீங்கிறத மனசுல வச்சுகிட்டு பேசு... அதே மாதிரி நான் சொன்ன பட்டு வேட்டி விவகாரமும் ஞாபகம் இருக்கடும்
அய்யர் சொல்றதை வரி மாறாம ஒப்பிக்கிறான் பாரு... குப்ஸ் எங்கயோ போயிட்டாண்டா!!!

மாங்கல்யம் தன்ந்துனானே........

கெட்டி மேளம் கெட்டி மேளம்.........


எல்லோருடய அட்சதைகளோடு என்னுடையதும்.....
ஒவ்வொருத்தாராய் வாழ்த்து சொல்ல நண்பர்கள் முறை வரும் வரை காத்திருந்தோம்...

மாப்ள... வாழ்த்துகள்
ஒருவழியா எல்லாம் நல்லபடியா முடிஞ்சது... உண்மையிலே சாதிச்சிட்டடா... எல்லாரும் இதைப்பாக்கத்தான ஆசப்பட்டோம்... நல்ல நினைப்புக்கு எப்பவும் நல்லதேதான் நடக்கும்..

சிஸ்டர் எங்க கண்ணையே ஒப்படைக்கறோம்.. கண்ணீர் வராமா பார்த்துக்குங்க....:-)))

கிண்டல்கள்... கேலிகள்....................................


வழக்கம் போல பந்தி பறிமாறலிலும் பந்தியிலும் எங்கள் குழாம் பட்டையை கிளப்பியது......


இதுதான் நடந்திருக்கும்...
என்ன இந்த ஜீவன் அங்கில்லாம் இங்கிருக்கிறது......

குப்பா
இனிய திருமண வாழ்த்துகள்டா!!!!


லே ஞாபகம் இருக்கா? உன் கல்யாணத்துக்கு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து எடுத்து கொடுக்கிற புகைப்படம்தான் என் அன்பளிப்புனு சொன்னனே...
நிறைவேத்த முடியலடா....


எல்லாம் முடிஞ்சிட்டா எப்படி,,,,


வாழ்க்கை முழுக்க உங்களுக்கு ஒருவகையில நான் கடன்பட்டுத்தான் இருக்கறதவே இருக்கட்டும்....
அடைக்கும் வரைக்கும் தொடரலாமே... அதனாலா சந்தோசம்தான்.


உங்களுக்கான கவிதை உங்களுக்காக மட்டுமே...


அஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்


அன்புடன்

முத்துகுமரன்23 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Pot"tea" kadai said...

முத்துக்குமரன்,
நெகிழ்ச்சியாக இருந்தது...கண்களில் கொஞ்சம் கண்ணீரும் கூட...
" i donno why "

குப்பனுக்கு எனது வாழ்த்துகள்!

பொன்ஸ்~~Poorna said...

//முத்துக்குமரன்,
நெகிழ்ச்சியாக இருந்தது...கண்களில் கொஞ்சம் கண்ணீரும் கூட...
" i donno why "//

இது வரைக்கும் உங்க பதிவு பக்கம் நான் வந்ததில்லீங்க.. இப்போ முதல் முதலா வந்துட்டு.. எனக்கும் ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு..:(

பரவாயில்லை.. கல்யாணத்துக்குத் தானே வந்துருக்கோம்.. உங்க நண்பனுக்கு வாழ்த்துக்கள்.. :)

saravanan said...

அருமையான பதிவு திரு.முத்துகுமார்,
வெளிநாட்டில் வேலைபார்பதில் இருக்கும் பிரச்சினையே இது தான், எனக்கும் இது போல் ஒரு நண்பன் இருக்கிறான், நல்ல வேளை நான்
ஊருக்கு போகும் பொழுது அவனுக்கு கல்யாணம். என்னிடம் அடிக்கடி சொல்லி கொண்டு இருப்பான்
மாப்பிள நீதான் டா எங்க அப்பா கிட்ட சொலனும் என்று, அது மட்டும் இங்கு வந்ததால் முடியாமல்
போய்விட்டது அதில் தான் கொஞ்சம் வருத்தம், எப்படி இருந்தாலும் முடிவு சுபம் என்று ஆனதில் மிக்க மகிழ்ச்சியே!

உங்கள் நண்பருக்கு வாழ்துக்கள்..

அன்புடன்
சரவணன்.இரா

முத்து(தமிழினி) said...

//அதுவும் காதல் விசயத்திற்காகதான்...
விளையாட்டுதனமாக என் காதலை கிண்டல் பண்ண எனக்கு கோவம் வந்துவிட்டது//

கிண்டல் பண்ற விசயமே இல்லை இதுஃஃஎனக்கும் ஒரு அனுபவம் உண்டு...

மற்றபடி குப்பனுக்கு என் வாழ்த்துக்கள்

நிலவு நண்பன் said...

உங்களுடைய கல்லூரி நேர காதல் அனுபவத்திலும் அந்த கல்யாண வீட்டின் திருமண கிண்டல்களிலும் நாங்களும் ஒரு ஓரமாய் இருந்து கவனித்த மாதிரி இருந்தது முத்துக்குமரா..

தங்களது நண்பருக்கு எனது திருமண வாழ்த்துக்கள்..


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

srishiv said...

அன்பின் முத்துக்குமாரன்,
வணக்கம், வாழிய நலம், ஏறத்தாழ ஒரு 4,5 மாதங்களுக்கு முன்பு இதேபோல் ஒரு பதிவினை என் தோழன் ஞானியின் பதிவில் பார்த்தேன், அடுத்து உங்கள் பதிவில், இப்படி எத்தனையோ அட்டெண்ட் செய்ய முடியாமல் தவறிப்போகும் திருமணங்கள், பத்திரிக்கை வந்ததை கல்யாணம் முடிந்தபின்னர் தொலைபேசியில் அழைத்து தகவல் தருவர், காதலி வீட்டிற்கு வந்து பத்திரிகை கொடுத்துச்சென்றிருப்பாள் அதனை அம்மாவே தொலைபேசியில் அழைத்து சொல்வார், இப்படி எத்தனையோ தவறிய திருமணங்களை மீண்டும் நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி முத்துக்குமரன், உங்களுக்காக நாங்களும் திரு.குப்புசாமி, ராஜேஸ்வரி அவர்களுக்கு பிரார்த்தனை செய்து வாழ்த்திக்கொள்கின்றோம்...:) எப்படியோ, என் நெருங்கிய தோழனின் திருமணத்தினை தவறாது ஒரு வருடம் முன்பிருந்தே திட்டம்போட்டு விடுப்பு எடுத்து அட்டெண்ட் செய்தது நினைவில் இருக்கின்றது, இன்று அவனுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது, திருமணத்தன்று பார்த்தது, அதன்பின் தாயகம் செல்லவே இல்லை, அடுத்தமுறை குழந்தையுடன் காணப்போகின்றேன், அதுதான் வித்தியாசம்..இதுவும் கடந்து போகும் காலங்கள்...:)
நினைவுகளுடன்,
ஸ்ரீஷிவ்...:)

முத்துகுமரன் said...

முதல் வாழ்த்துச் சொன்ன பொட்டீகடை ரெம்ப நன்றியா...

உங்கள் வாழ்த்துகளோடு நானும்..

முத்துகுமரன் said...

//பரவாயில்லை.. கல்யாணத்துக்குத் தானே வந்துருக்கோம்.. உங்க நண்பனுக்கு வாழ்த்துக்கள்.. :) //
கல்யாணம் என்றாலே சில மகிழ்ச்சியான புது சந்திப்புகள் நிகழ்வதுதானே...

வாழ்த்திற்கு நன்றி சகோதரி

முத்துகுமரன் said...

தங்கள் வாழ்த்திற்கு நன்றி இரா.சரவணன்

முத்துகுமரன் said...

முத்து(தமிழினி),
இப்போது நினைத்து பார்த்தாலும் அவனோடு சண்டை போட்டதை நினைத்து சிரிப்புதான் வருகிறது. அந்த சண்டை சிறுபிள்ளைதனமான சண்டை...

முத்துகுமரன் said...

என்னோடு துணை நின்று வாழ்த்தியதற்கு நன்றி நிலவுநண்பன்

manasu said...

போயிருந்திங்கன்னா கல்யாண கூட்டத்தில உங்களுக்கும் ஒண்ணு ஏற்பாடு பண்ணிருக்கலாம். என்ன பண்றது பாலைவன வாழ்க்கையில் தான் அந்த கொடுப்பினை இல்லையே...

வாழ்த்துக்கள். (ஆமா மதுரை ல எந்த காலேஜு....)

முத்துகுமரன் said...

ஸ்ரீஷிவ்,

நானும் முன்பிருந்தே ஆயத்தமாகத்தான் இருந்தேன். கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டுமென்று. ஆனால் இன்னொரு நண்பன் ஆகஸ்ட் மாதம் திருமணம் வைத்திருக்கிறான். ஆகையால் யாராவது ஒருவருடைய திருமணத்தில்தான் கலந்து கொள்ளும்படியாக அமைந்துவிட்டது. இரண்டு முறை விடுப்பென்பது சாத்தியமில்லாமல் போனதென் துரதிர்ஷ்டமே...

ஆனால் என் சார்பில் என் பெற்றோர் இருவரையும் அனுப்பி வைத்திருக்கிறேன். அது அவனுக்கு மகிழ்வைத் தரும். நான் வாழ்த்துகள்தான் சொல்ல முடியும். பெற்றோர் சென்றிருப்பதால் அவர்களுக்கு ஆசிர்வாதங்களும் கிடைக்கும்...

மற்றபடி மிக மகிழ்ச்சியாகவே இன்றைய பொழுதை கழித்து கொண்டிருக்கிறேன்

நன்றி நண்பரே

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி மனசு..

நாங்கள் எல்லோரும் தர்மபுரி சப்தகிரி பொறியியல் கல்லூரி..

கல்லூரியில் எங்களுக்கு பெயர் SS Gang( South Side Gang)

நீங்க மருதையா:-))))

செந்தில் குமரன் said...

பதிவின் மூலம் உங்கள் உணர்வுகளை பகிர்ந்துள்ளீர்கள்.

குப்பனுக்கு வாழ்த்துக்கள். கல்யாணம் தவறினால் என்ன குழந்தை பிறப்புக்கு நண்பனுடன் இருக்கலாம் கவலை கொள்ளாதீர்கள்.

சிங். செயகுமார். said...

பிளைட் கொஞ்சம் தாமதம் அதனால லேட். எனிவே மனம் நிறைந்த வாழ்த்துக்கள் குப்புசாமி-ராஜேஸ்வரி. தலைவர் எப்போ எல போட போராரு!:)

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி செந்தில்குமரன்

முத்துகுமரன் said...

//தலைவர் எப்போ எல போட போராரு!:)//

பாராளுமன்ற தேர்தலப்ப:-))))))))

srishiv said...

சப்தகிரியா? என் தோழன் திருமாவளவன் 1995-96அவுட் பேச் மெக்கானிக்கல் என்னுடன் அருணை பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்தான், செந்தில் ராஜா எனும் என் ஊரைச்சேர்ந்த என் தாயாரின் மாணவன் 98 அவுட் பேச்மின்னனுவியல், தெரியுமா யாரையாவது? ;)
ஸ்ரீஷிவ்...:)

முத்துகுமரன் said...

ஸ்ரீஷிவ் நீங்கள் சொன்ன இருவரையும் தெரியாதே:-(((

சிவன்மலை said...
This comment has been removed by a blog administrator.
தேவ் | Dev said...

:)

முத்துகுமரன் said...

புன்னகையால் வாழ்த்து சொன்ன தேவ் உங்களுக்கு என் நன்றிகள்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP