உனக்கான கவிதைகளோடு...


சூல் கொண்டிருக்கிறது
பூந்தோட்டத்தில் புதுமலர்.
காதுகள் நனைய கேட்டேன்
கண்ணே!
பூமிதொட நீ வரவிருக்கும் செய்தியை..

பூரித்திருக்கும் மகிழ்வோடு
நான் யாரென்று சொல்லி
அறிமுகப்படுத்திக் கொள்ளுமந்த
தருணத்திற்காக
தேன்நிரப்பி காத்திருக்கிறேன்
கண்கள் நிறைய அன்போடு
உயிர்மலரே,


உறவற்றவனாகி போனதால்
காத்திருக்கிறேன்
ஓர் அனுமதிக்காக


இல்லையென்றாலும்
வாழ்த்திக் கொண்டேயிருப்பேன்
உனக்கான கவிதைகளோடு...

9 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

KARTHIKRAMAS said...

முத்துகுமரன் அப்படியா சேதி? வாழ்த்துக்கள்.

முத்துகுமரன் said...

கார்த்திக் தவறாக புரிந்து கொண்டுவிட்டீர்கள்...

இப்போதைக்கு இது மட்டும்தான் சொல்ல இயலும் நண்பரே. இதற்கு முந்தைய பதிவை வாசித்தால் இந்த கவிதையை பற்றி புரியும்.

முத்துகுமரன் said...

கவிதையில் முன்பு ஏற்பட்ட குழப்பத்திற்கு வருந்துகிறேன்.
கார்த்திக்ரமாஸ், சிங்.செயகுமார். இப்போது கவிதையில் மாற்றம் செய்திருக்கிறேன். அதனால் உங்கள் முந்தைய பின்னூட்டங்களை பதிக்கவில்லை.
நன்றி

பொன்ஸ்~~Poorna said...

//உறவற்றவனாகி போனதால்
காத்திருக்கிறேன்
ஓர் அனுமதிக்காக
//

இது தாங்க எனக்குப் புரியலை :(
போன பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்கும் போல இருக்கு.. ஆனா என்னான்னு தான் புரியலை :(

முத்துகுமரன் said...

நன்றி பொன்ஸ்...

//எங்கள் குழுவிலே வெற்றி பெற்ற காதல் என்பது அவனுடையதுதான். மத்த பத்து பேருக்கும் கல்லூரி கால சுபயோக சுபதினத்திலேயே ஆப்பு மற்றும் சங்கூதப்பட்டு விட்டது.//

இது உங்கள் குழப்பம் தீர்க்கும் என்று நினைக்கிறேன்....

பொன்ஸ்~~Poorna said...

//இது உங்கள் குழப்பம் தீர்க்கும் என்று நினைக்கிறேன்.... //

ஓகே ஓகே.. வரப் போகும் மலருக்கு வாழ்த்துக்கள் :)

முத்துகுமரன் said...

நன்றி பொன்ஸ்...

மகிழ்வை பகிர்ந்து கொள்ளும் போது இரட்டிப்பாவதாலே இப்பதிவைப் பொட்டேன்.

பிரதீப் said...

நீங்க சொன்ன மாதிரி முந்தையப் பதிவைப் பாத்தாதாங்க நம்மள மாதிரி கேசுகளுக்குப் புரியுது. :D :D
வாழ்த்துகள் மலருக்கு.

முத்துகுமரன் said...

நன்றி பிரதீப்

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP