காலம் சொல்லுமெந்தன் உயிர்ப்பை...

வார்த்தைகளின் தயவில்
மறைந்தொதுங்கி
வேடந்தரித்துகொண்டு
ஓலமிடும் அற்பமே

நாங்களியங்குவதும்
எழுதுவதும்
முகங்காட்டித்தான்
ஒளிந்தல்ல..

நீ கோமியம் தெளித்து
புனிதப்படுத்த
வாயிலில் காத்துக்கொண்டிருக்கும்
எழுத்துகளல்ல எமது.

காலம்
உரத்துச் சொல்லுமதன்

உயிர்ப்பை..

7 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

பரஞ்சோதி said...

அனல் தெறிப்பது எதனால் ?

வழக்கம் போல் புரியாமல் கேட்கிறேன்.

neo said...

>> அனல் தெறிப்பது எதனால் ? >>

எரிமலையின் சீற்றம் இயற்கையானதே! 'அனல்' தெதிக்க வேண்டிய நேரத்தில் தெறிக்கத்தான் வேண்டும் :)

குழலி / Kuzhali said...

//அனல் தெறிப்பது எதனால் ?//
ஒரு வேளை இதனாலோ?


http://mugamoodi.blogspot.com/2006/05/blog-post_16.html

முத்துகுமரன் said...

///
//அனல் தெறிப்பது எதனால் ?//
ஒரு வேளை இதனாலோ?


http://mugamoodi.blogspot.com/2006/05/blog-post_16.html//


ஆமாம்.

வாய்சொல்வீரன் said...

ஒருவேளை இவர்களாலோ என்று நினைத்தேன்

http://karuppupaiyan.blogspot.com/
http://vittudhusigappu.blogspot.com/

குமரன் (Kumaran) said...

//குமரன் உங்களது பின்னூட்டம் கடைசியாக இருக்காது என்று நம்புகிறேன்:-).

உங்கள் கேள்விகள் நியாயமானவை. அதற்கு இயக்கத்தின் சார்பான பதில் நிச்சயம் சொல்லப்படும்.

தனிப்பட்ட முறையில் ஒரே ஒரு சிறு விளக்கம்..

ஆண்களில் யாரும் முழு பெண்ணுரிமைவாதிகள் கிடையாது.அதாவது 100 விழுக்காடு பெண்ணுரிமைவாதிகள் கிடையாது. இயற்கையின் நியதின் காரணமாக ஆக்கிரமிக்க நினைக்கும் கூறுகள் சிறிதளவேனும் இருக்கும். இது உங்களுக்கு எனக்கு என அனைவருக்கும் பொருந்தும்.

முத்துவின் வார்த்தைகளில் ஆணாதிக்க கூறுகளை உணர முடிந்த உங்கள் நுண்ணிய பார்வையால் மாடு லோன் கொடுக்கும் முத்து என்று தொழிலால் அடையாளப்படுத்திய வர்ணாசிரம கூறூகளை உணர முடியாது போனது ஆச்சர்யம் அளிக்கிறது.
//

முத்துகுமரன்,

கட்டாயம் என்னால் உணர முடிகிறது. அதனை என் நண்பர்கள் என்று நான் எண்ணிக்கொண்டிருப்பவர்கள் செய்திருந்தால் கட்டாயம் கேட்டிருப்பேன். நண்பர்களுக்கு மட்டும் ஏன், மற்றவருக்கும் உங்கள் கருத்தினைச் சொல்லுங்கள் என்று நீங்கள் சொல்லலாம். கட்டாயம் செய்வேன். செய்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

அரசியல் அபார்ட்,
எனக்கு இந்தக் கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது.

//காலம்
உரத்துச் சொல்லுமதன்
உயிர்ப்பை..//
நல்ல வரிகள்....

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP