மீள்பதிவு - ஓடுகாலிகள்

பீடங்களின் பிடறிகளில்
விழுந்தன மரண அடிகள்
பெருவலியின் வேதனைகளை
கீரிடங்களைச் சரிசெய்யும் சாக்கில்
சமாளிக்கின்றன.
அக்கம் பக்கம்
யாருமில்லையென்பதை
உறுதி செய்துகொண்டு
வேகமாய் வருகின்றன
வீர முழக்கங்கள்.

எப்போதும் புறமுதுகிட்டு
ஓடத்தயாராயிருக்கும்
ஓடுகாலிகளே...
முதுகெலும்பற்ற
புழுக்களான உம்மோடு
போரிட அல்ல
என் வீரம்

2 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Pot"tea" kadai said...

//முதுகெலும்பற்ற
புழுக்களான உம்மோடு
போரிட அல்ல
என் வீரம் //

இது ஓடுகாலிகளின் செவியில் உரைக்குமா?

முத்து(தமிழினி) said...

//பெருவலியின் வேதனைகளை
கீரிடங்களைச் சரிசெய்யும் சாக்கில்
சமாளிக்கின்றன.
அக்கம் பக்கம்
யாருமில்லையென்பதை
உறுதி செய்துகொண்டு
வேகமாய் வருகின்றன
வீர முழக்கங்கள்.//

எப்படிய்யா...

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP