அப்பா அம்மாவிற்கு இன்று 30ம் ஆண்டு மணநாள்.

அப்பா அம்மாவிற்கு இன்று 30ம் ஆண்டு மணநாள்.

அப்பா - அம்மாவிற்கு இன்று முப்பதாம் ஆண்டு மணநாள்(7-6-76). தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக இந்த நாளில் அவர்களோடு இருந்து வாழ்த்துகளைப் பெறமுடியவில்லை. அவர்கள் இன்று போல் என்றும் உடல் ஆரோக்கயத்தோடும், மன மகிழ்வோடுமிருந்து எங்களை வழிநடத்த வேண்டிக்கொள்கிறேன். அவர்களின் ஆசிர்வாதங்களுடன் என் மகிழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

30 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Chandravathanaa said...

அவர்களுக்கு வாழ்த்துக்கள்

ஜோ / Joe said...

அப்பா அம்மாவுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்!

(துபாய்) ராஜா said...

முத்துகுமரன்!முப்பதாம் ஆண்டு ம்ணநாள் கொண்டாடும் தங்கள்
பெற்றோருக்கு உள்ளம் கனிந்த முத்தான வாழ்த்துக்கள்.

அன்புடன்,
(துபாய்)ராஜா.
http://rajasabai.blogspot.com/

பரஞ்சோதி said...

என்னவோய், முன்னமே ஏன் சொல்லலை?

அப்பா, அம்மாவுக்கு என் வாழ்த்துகள்.

ஊருக்கு போய் நேரில் வாழ்த்தி, ஆசிர்வாதம் வாங்கிட வேண்டியது தான்.

கைப்புள்ள said...

முப்பதாம் ஆண்டு மணவிழா கொண்டாடும் அப்பா, அம்மாவிற்கு என் வாழ்த்துகள்.

மாயவரத்தான்... said...

முப்பதாம் ஆண்டு மணவிழா கொண்டாடும் அப்பா, அம்மாவிற்கு என் வணக்கங்கள்.அவர்கள் இன்று போல் என்றும் உடல் ஆரோக்யத்தோடும், மன மகிழ்வோடுமிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

முத்துகுமரன் said...

நண்பர்களின் வாழ்த்துகள், அன்பான வார்த்தைகள் என்னை நெகிழச் செய்கிறது. வாழ்த்து சொன்ன சந்திரவதனா, ஜோ,துபாய் ராஜா, பரஞ்சோதி, கைப்புள்ள, மாயவரத்தான் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...

பரஞ்சோதி எனக்கே நேற்று நள்ளிரவுதான் ஞாபகம் வந்தது. இந்த மாதத்தில் முக்கியமானதொரு நாளிருக்கிறதே என்று. கடந்த சில நாட்களாக அதிகரித்திருக்கும் பணிப்பளுவில் சுத்தமாக மறந்தே போய்விட்டேன். ஆனால் என் உள்ளுணர்வு மறக்காதிருந்தாதால் இன்று அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க முடிந்தது. என்னதான் இருந்தாலும் அப்பா அம்மாவை பிரிந்திருப்பது ஒரு வகையில் வாட்டுகிறது.

நன்றி

luckylook said...

அம்மா, அப்பாவுக்கு என் வாழ்த்துக்களையும் சேர்த்து கடிதத்தோடு அனுப்பி விடுங்கள் குமரன்....

paarvai said...

அப்பா அம்மாவுக்கு வாழ்த்துக்கள்!
அவர்களுடன் வாழ ;அவர்களை வாழ்த்தக் கொடுப்பனவு இருக்க வேண்டும்.
நீங்கள் கொடுத்து வைத்தவர்.
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

முத்துகுமரன். தங்களின் பெற்றோருக்கு என் வணக்கங்கள் வாழ்த்துகளுடன்.

ஆசிப் மீரான் said...

அன்பின் முத்துகுமரன்,

முப்பதாம் ஆண்டு மணவிழா கொண்டாடும் அப்பா, அம்மாவிற்கு என் வணக்கங்களும் வாழ்த்துகளும்.. அவர்கள் இன்று போல் என்றும் உடல் ஆரோக்யத்தோடும், மன மகிழ்வோடுமிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

அன்புடன்
ஆசிப் மீரான்

SK said...

உளங்கனிந்த நல்வாழ்த்துகள்!

வாழ்க பல்லாண்டு,...வளமுடன்!

Karthik Jayanth said...

முத்துகுமரன்,

அப்பா, அம்மாவிற்கு என் வாழ்த்துகள், வணக்கங்களுடன்.

SK said...

உளங்கனிந்த நல்வாழ்த்துகள்!
வாழ்க பல்லாண்டு,...வளமுடன்!

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. [குறள்:60]

முத்து(தமிழினி) said...

வாழ்க பல்லாண்டு

குழலி / Kuzhali said...

மணவிழா கொண்டாடும் அப்பா, அம்மாவிற்கு என் வாழ்த்துகள்.

இளவஞ்சி said...

முத்துகுமரன்,

அப்பிடியே என்னுடைய வாழ்த்துக்களையும் அவங்களிடம் சேர்த்து விட்டு, அவிங்க ஆசிகளை கொஞ்சம் இங்க தள்ளுங்க! :)

நிலவு நண்பன் said...

உங்க ம்மாவுக்கும் வாப்பாவுக்கும் இறைவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் மன அமைதியையம் தருவானாக என்று வேண்டிக்கொள்கின்றேன்..

நீங்க அடுத்த 31 வது ஆண்டுல அவர்களுடனும் உறவினர்குளுடன் மணவிழா கொண்டாட வாழ்த்துக்கள். ( அப்படின்னா கேன்சல்ல போயிடுவீங்களா..? :) )

Rajamohan.C said...

அன்பு முத்துக்குமரன்

உங்கள் பெற்றோரின் 30ம் மணநாள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

துளசி கோபால் said...

முத்துக்குமரன்,

பொண்ணு மாப்பிள்ளைக்கு எங்கள் வாழ்த்து(க்)கள்.

நல்லா இருக்கணும்.

செல்வன் said...

அவர்களை வாழ்த்தும் தகுதியும் வயதும் எனக்கு இல்லை.அவர்கள் ஆசிர்வாதத்தை மட்டும் வேண்டி நிற்கிறேன்

கோவி.கண்ணன் said...

//இந்த நாளில் அவர்களோடு இருந்து வாழ்த்துகளைப் பெறமுடியவில்லை//

மகன் தந்தைக் காற்றும் உதவி ...

பேசுங்க பேசுங்க, எல்லாம் கல்யாணம் ஆகிறவறைக்கும் தான் சொல்லுவிக அப்பு

முத்துகுமரன் said...

நன்றி லக்கிலுக். கடிதம் எழுதுவது கிடையாது. வார வாரம் யாகூ தூதுவனில் உரையாடுவேன்.
உங்கள் அத்தனை பேரின் வாழ்த்துகளையும் படித்து காண்பிப்பேன்

முத்துகுமரன் said...

யோகன் உண்மையாகவே நான் மிகவும் கொடுத்து வைத்தவன்தான். வாழ்த்திற்கு நன்றி..

முத்துகுமரன் said...

நன்றி குமரன், ஆசிப் அண்ணாச்சி,

முத்துகுமரன் said...

குறாலோடு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி. அவர்களே என் வாழ்வின் ஈரடிகள்...

முத்துகுமரன் said...

நன்றி கார்த்திக் ஜெயந்த். முத்து(தமிழினி)

முத்துகுமரன் said...

நன்றி குழலி

இளவஞ்சி இந்தா வாங்கிங்க ஆசிர்வாதத்தை.. இப்பத்தான் அவர்களோடு பேசினேன். வாழ்த்து சொன்னவர்களுக்கு நன்றியையும், ஆசிகளையும் அன்பையும் தெரிவித்தார்கள்...

சிங். செயகுமார். said...

அப்பா அம்மாவுக்கு நம்ம வாழ்த்த சொல்லிடுங்க ! அப்பிடியே கையோட கொஞ்சம் ஆசீர்வாதம் வாங்கிட்டு வாங்க ..

பிரதீப் said...

அடடே.
மன்னிச்சிக்கிருங்கய்யா, கொஞ்ச நாளா வலைப்பூப் பக்கம் வரலை.
அம்மா அப்பாவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளைச் சொல்லுங்க. அடுத்த தடவை நீங்க வரும்போது நான் நேரிலேயே வந்து சொல்லுவேன்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP