நிலவுநண்பனுக்கு திருமணம்..

மகிழ்ச்சியான செய்தியோடு உங்கள் முன்னே....

கவிதைகளாலும், கருத்துகளாலும் மென்மையான உணர்வுகள் மூலமாகவும் நம் இதயம் நனைக்கும் நண்பர் நிலவுநண்பன் (ரசிகவ் ஞானியார்) தன் மனம் நிறைந்த நிலவை(ஜஹான்) கரம்பிடிக்கவிருக்கிறார். **காதல் திருமணம்**. :-)

திருமணம் வருகிற ஜுலை இரண்டாம் தேதி 02.07.2006, திருநெல்வேலி பாளையங்கோட்டை அன்னை திருமண மண்டபத்தில், காலை 10 மணியிலிருந்து 12 மணிக்குள் நடைபெற இருக்கிறது. அவரின் சார்பாகவும் அவர்களிருவரின் குடும்பத்தார் சார்பாகவும் அனைவரையும் திருமணத்தில் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறேன்.

* நிலவு நண்பன் இன்று இரவு இந்தியா செல்லவிருப்பதால் கொஞ்சம் பரபரப்பாக இருக்கிறார். வலைப்பூ அன்பர்களுக்கான அவரின் தனிப்ப்பட்ட அழைப்பும் விரைவில் வரும். **

மணமக்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்.

அன்புடன்
மு.முத்துகுமரன்

35 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

துபாய்வாசி said...

நிலவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

சொல்லாமல் கொள்ளாமல் விமானம் ஏறுகிறாரா?

paarvai said...

ஞானியார்,நிலவுக்குப் போகிறாரா?,
வாழ்த்துக்கள்.
யோகன் பாரிஸ்

பொன்ஸ்~~Poorna said...

நிலவு நண்பனுக்கும் சகோதரி ஜஹானுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

முத்து(தமிழினி) said...

நிலவு நண்பனுக்கு என் வாழ்த்துக்கள்.

கவிதை எல்லாம் எழுதும்போதே நினைத்தேன்.காதல் அது இது என்று வருவார் என்று :)

முத்துகுமரன் said...

//கவிதை எல்லாம் எழுதும்போதே நினைத்தேன்.காதல் அது இது என்று வருவார் என்று :)//

:-)). அது என்ன தெய்வ குத்தமாயா ??

சிவராமன் கணேசன் said...

நிலவு நண்பனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நல்ல தகவல் சொன்ன உங்களுக்கு என் நன்றிகள்.

அருட்பெருங்கோ said...

நிலவு நண்பனுக்கு என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்கப்பா!!

முத்து(தமிழினி) said...

:-)). அது என்ன தெய்வ குத்தமாயா ?? //


இந்த கேள்வி யாருக்கு? எனக்கா?:)

முத்துகுமரன் said...

//இந்த கேள்வி யாருக்கு? எனக்கா?:)//

நான் பொதுவாச் சொன்னேன்.

உங்கள் கேள்வியிலிருந்து நானொன்று அறிந்து கொண்டேன் :-)

நன்மனம் said...

ரசிகவ் ஞானியாருக்கு எனது வாழ்த்துக்கள்.

நாகை சிவா said...

ரசிகவ் ஞானியாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செந்தழல் ரவி said...

வாழ்த்துக்கள் நிலவு...

Pot"tea" kadai said...

நிலவின் நண்பனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

//:-)). அது என்ன தெய்வ குத்தமாயா ??//


அன்பே சிவம்...

காதல் வயப்பட்டது
அன்பின் குற்றம்


;-)

ப்ரியன் said...

:) தெரியுமா?நான் நிலவு நண்பனை வாழ்த்த நேரா போறேன் :)

பரிசு கொடுக்க நினைப்பவர்கள் என்னிடம் கொடுத்து அனுப்பலாம்.இலவச கொரியர் சர்வீஸ் செய்யப்படும் :)

கோவி.கண்ணன் said...

என்னது நிலவு பிறைனிலவைப் பிடிக்க செல்கிறாரா ? வாழ்த்துக்கள்

கோபி(Gopi) said...

நிலவு நண்பனுக்கு என்னோட வாழ்த்துக்கள்

அப்டிப்போடு... said...

நிலவு நண்பனுக்கு வாழ்த்துக்கள். இது போல் இன்னும் பல நல்ல செய்திகள் மேலும் சொல்ல முத்துக் குமரனுக்கும் வாழ்த்துக்கள் :). ஆஸி பக்கமும் பாத்து சீக்கிரம் முடிச்சு வையுங்க...:).

Dubukku said...

தகவலுக்கு நன்றி முத்துகுமரன்

ஞானி ...யோவ் நீரு ஃபீலிங்காய் கவிதை எழுதும் போதே நினைச்சேன்யா...மாட்டிக்கிட்டீர்ன்னு...:))))
இப்போ கன்பார்ம் ஆகிடிச்சு..

மனமார்ந்த வாழ்த்துக்கள் ரசிகவ்..!!

manasu said...

முத்துகுமரனும் தெய்வகுத்தம் செய்றாப்ல இருக்கு...

நல்ல இருங்கடே

Karthik Jayanth said...

முத்துகுமரன்,

நிலவு நண்பனுக்கு என்னுடைய வாழ்த்துகளை சொல்லிடுங்க :-)

***

//:-)). அது என்ன தெய்வ குத்தமாயா ?? muthukumaran said

//இந்த கேள்வி யாருக்கு? எனக்கா?:) - Muthu said

//உங்கள் கேள்வியிலிருந்து நானொன்று அறிந்து கொண்டேன் :-) - muthukumaran said in reply

நானும்தான் :-)

//அன்பே சிவம்...

காதல் வயப்பட்டது
அன்பின் குற்றம் - Pot"tea" kadai said

இந்த பதிவிலிருந்து பல உண்மைகள் தெரிய வரும் போலயே ;-)

ஜோ / Joe said...

நிலவுநண்பனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

நெல்லை காந்த் said...

நிலவு நண்பனுக்கும் சகோதரி ஜஹானுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். :)

துளசி கோபால் said...

மணமக்களுக்கு இதயம் கனிந்த வாழ்த்து(க்)கள்.

நல்லா இருக்கட்டும்.

கைப்புள்ள said...

இல்லற வாழ்வில் இணையும் ரசிகவ்-ஜஹான் அவர்களது இல்லறம் இனிதே அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

யாத்திரீகன் said...

நிலவின் நண்பனுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...முன்னரே தெரிந்திருந்தால் ப்ரியனுடன் சேர்ந்திருக்கலாம்..

நாகு said...

நிலவுநண்பனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்!

இளவஞ்சி said...

காதலியைக் கரம்பிடிக்கும் ரசிகவ்வுக்கும், மனம்போல் மாங்கல்யம் பெறும் சகோதரி ஜஹானுக்கும் மனமுவந்த திருமண வாழ்த்துக்கள்!

sivagnanamji(#16342789) said...

வாழ்க! வாழ்க!

பரஞ்சோதி said...

நண்பர் நிலவாருக்கும் சகோதரி ஜஹானுக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துகள்.

அனைத்து வளங்களும் பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ இறைவன் அருள் புரிவாராக.

(ஓய், நீரு எப்பவோ செய்தி கொடுக்க இருக்கீரு, நான்தாம்லே செய்தி போடுவேன் :) )

Pot"tea" kadai said...

கார்த்திக் ஜெயந்த்,

//இந்த பதிவிலிருந்து பல உண்மைகள் தெரிய வரும் போலயே ;-)//

இது நண்டு கதை இல்லை ஐயா..:-))

நா அப்பீட்டுடுடுடுடுடு.........

தாணு said...

நண்பரின் திருமணத்துக்கு சிங்.செயகுமார் ஏற்கனவே தமிழகம் வந்தாச்சு.நானும் நேரில் செல்ல பிரயாசைப் பட்டுக் கொண்டிருக்கிறேன்

நெல்லை சிவா said...

நிலவுக்கு வாழ்த்துக்கள்! நிலவு இன்னும் அதிபிரகாசிக்கும் என்று, எதிர்பார்க்கலாம். வாழ்த்துக்கள்!

chinthamani said...

நிலவுக்கு வாழ்த்துகள்

SK said...

நிலவைப் பாம்பு விழுங்கும் என்பார்கள்!

பாம்பு இரத்தினத்தை கக்கும் என்பார்கள்!!

இங்கு இரத்தினமே[ஜஹான்] நிலவை அள்ளியதா!!!?

பலே! பலே!!

மணவாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகள்!

இந்தப் பதிவின் மூலம் பலரையும் பல உண்மைகளைக் கக்க வைத்த நண்பர் முத்துகுமரனுக்கும்['க்' இல்லை!] எனது வந்தனங்கள்!

இரத்தினத்தைப் பற்றி 'முத்து' சொன்னதும் பொருத்தமே!

முத்துகுமரன் said...

எஸ்.கே என்ன இப்படி அநியாயத்துக்கு நெளிய வச்சுட்டீங்களே :-)

முத்துரத்தினம் உங்கள் தமிழ்தானய்யா

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP