
சமீபத்தில் மறைந்த தமிழ் கணிமை கொடையாளர் திரு. உமர்தம்பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அமீரகத்தில் வரும் வியாழன்(27.07.2006) மாலை 8 மணி அளவில் துபாய், கராமா சிவ்ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற இருக்கிறது. அமீரகத்தைச் சேர்ந்த இணைய நண்பர்களை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்புக்கு
பரத் வெள்ளைச்சாமி - 050 -5581859
முத்துகுமரன் - 050-6243115
4 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:
முத்துகுமரன், என்னால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் அவரது தமிழ்க்கொடைகளை நினைவில் கொள்கிறேன்.
நன்றி வெங்கட்ரமணி. மீண்டுமொருமுறை அமீரகத்தில் இருக்கும் நண்பர்களை இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ள அழைக்கிறேன்.
நண்பர் முத்துக்குமரன் அவர்களுக்கு,
அதிரைக்காரர்கள் துபாயில் நிறைய பேர் இருந்தாலும் இந்தச் செய்தியை கொண்டு செல்ல வாய்ப்பு கிட்டவில்லை. காரணம் மாத இறுதி வேலைப்பழு.
நிகழ்சியில் எத்தனை நண்பர்கள் கலந்து கொண்டார்கள், வேறு ஏதேனும் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டதா? என்ற விபரத்தை மடலாகவோ அல்லது பதிவாகவோ செய்தால் எங்களூர் தளத்தில் செய்தியாக வெளியிட வசதியாக இருக்கும்.
தமிழ் வாழ்க!
முத்துக்குமரன்,
என்னால் அஞ்சலியில் நேரடியாக கலந்து கொள்ள முடியாவிடினும் அன்னாரின் சேவைகள் என்றும் நினைவில் நிற்கும்.
வாழ்க நீவிர் உமர்தம்பி!
Post a Comment