நன்றி நண்பர்களே...

தேன்கூடு - ஜூலை மாதப்போட்டியில் வென்ற நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, பொன்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த பாரட்டுகள்...

அப்புறம் என்னுடைய கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். மொத்தம் 11 ஓட்டுல 1 ஜி.கெளதம் போட்ட தர்ம ஓட்டு ஒண்ணு. அவருக்கு எனது நன்றி. ஒண்ணு யாருன்னு தெரிஞ்சு போச்சு மீதி பத்து ஆளுங்க யாருன்னு தெரியாம மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது. பின்னூட்டத்தில் வந்து தெரியப்படுத்தினால் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல வசதியாக இருக்கும்... :-))

அப்புறம் அற்புதமான தலைப்பைத் தந்த வாத்தி ''இளவஞ்சிக்கு'' நன்றி. கிட்டத்தட்ட இருபது நாட்கள் எடுத்ததெனக்கு ''காற்றுக் குமிழி'' கதையை எழுத. ஆனாலும் மனதில் நினைத்தது எழுத்தில் வரவில்லை. அதில் கொஞ்சம் ஏமாற்றமே. அப்போதய பணிச்சூழலில் அதற்கு மேல் மண்டையை உடைத்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் முக்கிய காரணம். வெற்றிக்கோட்டைத் தொட இன்னும் அதிகம் உழைக்க வேண்டும், எழுதும் கலையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே இந்த போட்டி எனக்கு தந்திருக்கும் பரிசு. அறிவிப்பு கொடுத்தவுடன் பட் பட்டென்று படைப்புகளை எழுதுபவர்களைக் கண்டால் ஆச்சர்யமாக இருக்கிறது. அவர்களின் திறமை வியக்க வைக்கிறது. ஆகஸ்டு மாத போட்டி இன்னும் விறுவிறுப்பாகவும், நல்ல பயிற்சி களனாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அடுத்த மாதம் வெல்ல போகின்றவர்களுக்கு என் முன் தேதியிட்ட வாழ்த்துகள்..

இறுதியாக

வாக்களித்த நண்பர்களுக்கு மீண்டுமொருமுறை

நன்றி! நன்றி!! நன்றி!!!

8 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் said...

//வெற்றிக்கோட்டைத் தொட இன்னும் அதிகம் உழைக்க வேண்டும், எழுதும் கலையை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதே இந்த போட்டி எனக்கு தந்திருக்கும் பரிசு.//

இதுக்காக பரிசு கொடுத்திருக்கலாம். நல்ல தன்னம்பிக்கை சிந்தனைகள். குமரன் வெல்டன். அடுத்த தடவை ஓட்டு கண்டிப்பாக போட்டுவிடுகிறேன். எல்லோருக்கும் வாக்களிக்க முடியும் என்பதே பின்புதான் தெரிந்தது ஹி ஹி

முத்துகுமரன் said...

//எல்லோருக்கும் வாக்களிக்க முடியும் என்பதே பின்புதான் தெரிந்தது ஹி ஹி //

எனக்கும்தான். ஆனால் ஒரு சிறந்த படைப்பிற்குதான் என் வாக்கைச் செலுத்தினேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே...

Pot"tea" kadai said...

//அப்போதய பணிச்சூழலில் அதற்கு மேல் மண்டையை உடைத்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் முக்கிய காரணம். //

பொழப்ப பாரப்பு மொதல்ல...எழுதரது எப்போவேனாலும் எழுதிக்கலாம்...போட்டி மாசா மாசம் நடக்கும்...அதனால அடுத்த மொர கெலிசிக்கலாம்...என்னா புரிதா எதுனா?

பொன்ஸ்~~Poorna said...

// மீதி பத்து ஆளுங்க யாருன்னு தெரியாம மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது. //

நான் இல்லை .. நீங்க என்னிடம் சொன்னது மாதிரி கொஞ்சம் மாற்றி அனுப்புவீங்க, உங்களுக்கு ஓட்டு போட்டுடலாம்னு பாதி மனசோட இருந்தேன்.. இப்படி என்னை ஏமாத்திட்டீங்க..

அடுத்த மாசம் உங்களுக்கு ஓட்டு உண்டுன்னு தோணுது.. பார்க்கலாம் :)

முத்துகுமரன் said...

பொட் டீ ரெம்ப நன்றிப்பா என் மேல அக்கறை எடுத்துகொண்டதற்கு...

முத்துகுமரன் said...

//அடுத்த மாசம் உங்களுக்கு ஓட்டு உண்டுன்னு தோணுது.. பார்க்கலாம் :) //

ரெம்ப நன்றிங்க. எங்க ரெம்ப யோசித்து நம்மலே போய் சேர்ந்துட்டமுனா என்ன பண்றதுனுதான் விட்டுட்டேன். ஆனால் நிச்சயம் சரி செய்து என் சேமிப்பில் வைத்துக்கொள்வேன். எல்லோருக்கும் ஒட்டு போட முடியும்னு தெரிஞ்சு இருந்தா உங்களுக்கும் ஓட்டு போட்டு இருப்பேன்.:-)

மகேந்திரன்.பெ said...

இப்பின்னூட்டம் பதிவு சார்ந்தது இல்லன்னாலும் உங்களுக்கு ஒரு சேதி இருக்கு நம்ம சிவபாலன் அவர்கள் ஆரம்பிச்சு வச்ச நூலகம் தொடர தொடர்ந்து தொடர எத்தன தொடர்? யாராவது நாலுபேர (இதென்னா கணக்கு?) கூப்புடுனுமாம் நீங்களும் உங்கள்ட்ட இருக்கிர புத்தகம் பத்தி எழுதிடுங்கய்யா புண்ணியமா போகும் இல்லன்னா அப்றமா குவாட்டர் கோவிந்தன் பின்னூட்டம் போட்டோ இல்ல மப்புல முழு பதிவும் போட்டோ உங்கள தாக்கி பேச ஆரம்பிப்பார் ஆமா சொல்லிட்டேன் :)
உங்களுக்கு நான் விடுத்த அழைப்பு இங்கே இருக்கு
http://paarima.blogspot.com/2006/07/blog-post_31.html

சிவபாலன் எல்லாருக்கும் விட்ட அழைப்பு இங்க இருக்கு
http://sivabalanblog.blogspot.com/2006/07/blog-post_28.html

Syam said...

எங்க போனாலும் ஒரே நன்றி அறிவிப்பு கூட்டமா இருக்கு...போட்டீல கலந்துகிட்டதுக்கு வாழ்த்துக்கள்...அப்டியே நெக்ஷ்ட் நெக்ஷ்ட் னு போய்டே இருக்கனும்..
:-)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP