வீட்டுச் சாப்பாடு!!!

ஆமா!
நினைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. ஒரு மாதம் அம்மா கைச்சமையல். வருட விடுமுறைக்காக வருகின்ற 11ம் தேதி தமிழகம் செல்கிறேன். அடுத்த மாதம் 13ம் தேதி வரை இருப்பேன். இந்த பயணம் மகிழ்ச்சிகரமாக அமையவிருக்கிறது. ஆமாம். என்னுடைய சம்பாத்தியத்தில் சொந்த வீடு வாங்க இருக்கிறேன். என் பெற்றோருக்கு இது என் அன்பு பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன்!!.

சென்றமுறை போல் இல்லலமல் விடுமுறையின் பெரும்பகுதியை அவர்கள் உடனே கழிக்க வேண்டும் என ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் முடிந்தவரை வலை நண்பர்களை, சந்திக்கவிரும்புகிறேன் சென்னையிலோ, மதுரையிலோ. சந்திக்க விரும்புவர்கள் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். இன்னும் சில நாட்களுக்கு வலைப்பதிவுகளில் செலவிடும் நேரம் குறைவாகவே இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.( இப்ப மட்டும் என்ன வாழுதானு மனசாட்சி இடித்த போதிலும் :-) ).

திராவிடத் தமிழர்களளின் முதல் தமிழக மாநாடு நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நண்பர்களின் ஒத்துழைப்பை பொறுத்து இது அமையும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

வீட்டில் எ-கலப்பை இறக்கி உங்களை தொல்லை செய்தாலும் செய்வேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.:-)

வரட்டா!!!

26 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

பரஞ்சோதி said...

வாங்கய்யா வாங்க, நாமலும் ஊருக்கு போகிறோமுல்ல.

அம்மா கையால் சாப்பிட நானும் உங்க வீட்டுக்கு வருகிறேன், கிடா வெட்டுவீங்க தானே :)

மாநாட்டில் எனக்கு ஒரு இருக்கைக்கு துண்டு போட்டு வையுங்க.

dondu(#4800161) said...

தனி மின்னஞ்சல் இட்டுள்ளேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

துபாய்வாசி said...

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

ஒரு மாதம் வெப்பத்திலிருந்து தப்பித்து, நிம்மதியாய் வீட்டுச்சாப்பாட்டை உண்டு மகிழ்ச்சியாய் இருங்கள்.

(துபாய்) ராஜா said...

இனிய பயணத்திற்கும்,எண்ணியுள்ள காரியங்கள் ஈடேறவும் வாழ்த்துக்கள்.

நன்மனம் said...

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

முத்துகுமரன் said...

பரஞ்சோதி,

வாங்க வாங்க! கிடாதானா அடிச்சிடுவோம். மாநாட்டுக்கு துண்டு என்ன ஜமுக்காளமே போட்டிடுறேன் உங்களுக்கு..வந்து சேருங்க:-)

முத்துகுமரன் said...

//ஒரு மாதம் வெப்பத்திலிருந்து தப்பித்து,//
இல்லையா பின்ன! தமிழகம் குளிராக இருப்பதாக எதுவும் செய்தி இல்லையே. நம்ம ராசி அங்கயும் சூடு கிளம்பிடக்கூடாது.

வாழ்த்திற்கு நன்றி துபாய்வாசி

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி மன்னரே...

ஊருக்கு போய் வந்த பின் சந்திப்போம்:-).

முத்துகுமரன் said...

நன்றி நன்மனம்.

கோவி.கண்ணன் said...

//என்னுடைய சம்பாத்தியத்தில் சொந்த வீடு வாங்க இருக்கிறேன். என் பெற்றோருக்கு இது என் அன்பு பரிசாக இருக்கும் என்று நம்புகிறேன்!!.

சென்றமுறை போல் இல்லலமல் விடுமுறையின் பெரும்பகுதியை அவர்கள் உடனே கழிக்க வேண்டும் என ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது//

முத்துக்குமரன் சின்ன வயசிலேயே வீடு எல்லாம் வாங்கி திட்டமிட்டு வாழ்கையை அமைத்துக் கொள்கிறீர்கள். பெற்றோர் மீதும் அளவற்ற அன்பு வைத்திருக்கிறீர்கள் ... உங்கள் பெற்றோரும் நீங்களும் கொடுத்துவைத்தவர்கள்.

சும்மா வீட்டிலேயே இருக்காமல் அம்மா அப்பாவை 'கோவில், குளம்' என்று அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் அவர்கள் கூடவே இருந்த நிறைவு ஏற்படும். :)

உங்கள் பயணம் மகிழ்ச்சியாக இருக்க 'ஆண்டவனை' வேண்டுக் கொள்கிறேன்
:)

G.Ragavan said...

வீட்டுச் சாப்பாடுதான...சொல்லாதீக. இங்க சென்னைக்கு வந்தாலும் வந்தேன்....வீட்டுச் சாப்பாடுதான். ஒடம்பு பூசுனாப்புல ஆயிருச்சு. ஒன்னும் பண்ண முடியல. ஹ ஹ

புதிய வீடு வாங்குவதற்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். முருகன் அருளால் எல்லா நலமும் பொலியட்டும். நல்ல முடிவு செய்திருக்கிறீர்கள்.

யாஹூவுல உங்களுக்கு ஒரு ஆஃப்லைன் மெசேஜு விட்டிருக்கேன். அதுல சென்னை ஃபோன் நம்பரு இருக்குது. வந்ததும் கூப்புடுங்க. சந்திப்போம்.

முத்து(தமிழினி) said...

//திராவிடத் தமிழர்களளின் முதல் தமிழக மாநாடு நடக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. நண்பர்களின் ஒத்துழைப்பை பொறுத்து இது அமையும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்//

செம்டம்பர் முதல் ஞாயிறு அல்லது திங்கள் தினம் இது நடைபெறலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல் தலைவர்

முத்துகுமரன்,

வருக வருக

முத்துகுமரன் said...

ராகவன் எண்ணை குறித்து கொண்டேன். நானும் யாகூ தூதுவனில் பதில் சொல்லி இருக்கிறேன். ஞாயிறு அழைக்கிறேன். :-)

முத்துகுமரன் said...

//செயல் தலைவர்

முத்துகுமரன்,

வருக வருக //

இடைவெளி சரியா விடனும் செயல். பாக்குறவங்க தப்பா நினைச்சுக்ககூடாதுல்ல.

சிவமுருகன் said...

பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

luckylook said...

தலைவரே!

மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுல பேனர், கீனர் எதாவது கட்டணுமா?

Pot"tea" kadai said...

இனியதொரு பயனமாக இருக்கட்டும்...

கூடுமானவரை பசி எடுக்காமல் இருக்க வாழ்த்துக்கள் :-))))

முத்துகுமரன் said...

நன்றி சிவமுருகன்.

லக்கி வேணாமய்யா வேணாம். இந்த சினிமாக்காரங்கதான் பேனர் அது இதுன்னுட்டு.....

:-) வரவேற்பிற்கு நன்றி. சந்திக்க ஆவலாக உள்ளேன்

முத்துகுமரன் said...

//கூடுமானவரை பசி எடுக்காமல் இருக்க வாழ்த்துக்கள் :-)))) //

ஹி ஹி வயித்தெரிச்சல் :-)

நான் எல்லாம் பொழுது போகலனாவே சாப்பிடக்கூடிய ஆள். உம்ம சாபம் எல்லாம் பலிக்காது. கல்லூரி தேர்வு விடுமுறைகளுக்கு வரும் போது ஏறக்குறைய ஆறுவேலை சாப்பிடுவேனாக்கும். :-))

G.Ragavan said...

// முத்துகுமரன் said...
//கூடுமானவரை பசி எடுக்காமல் இருக்க வாழ்த்துக்கள் :-)))) //

ஹி ஹி வயித்தெரிச்சல் :-)

நான் எல்லாம் பொழுது போகலனாவே சாப்பிடக்கூடிய ஆள். உம்ம சாபம் எல்லாம் பலிக்காது. கல்லூரி தேர்வு விடுமுறைகளுக்கு வரும் போது ஏறக்குறைய ஆறுவேலை சாப்பிடுவேனாக்கும். :-)) //

ஏய்யா...புளுகுறதுக்கும் அளவு வேண்டாமா! அப்படியெல்லாம் சாப்பிட்டதுக்கு ஆதாரம் ஒடம்புல இருக்காய்யா? மத்தவகள ஏமாத்தலாம் என்னைய ஏமாத்த முடியுமா!

சனி ஞாயிறு பிரதீப்பும் சென்னைக்கு வாராரு. ஞாயிறு சாந்தரம் பொறப்படுறாரு. அதுக்குள்ள கூப்டீகன்னா அவரையும் பாக்கலாம்.

நாகை சிவா said...

//நான் எல்லாம் பொழுது போகலனாவே சாப்பிடக்கூடிய ஆள். உம்ம சாபம் எல்லாம் பலிக்காது. கல்லூரி தேர்வு விடுமுறைகளுக்கு வரும் போது ஏறக்குறைய ஆறுவேலை சாப்பிடுவேனாக்கும். :-))//
படத்த பார்த்தா அப்படி தெரியலை. :)
சரி, நல்லாபடி ஊருக்கு போயிட்டு வாங்க.
அம்மா கைமணம் கொடுத்து வச்சு ஆளு. ஹும் நமக்கு இன்னும் எத்தனை மாசமோ.....

முத்துகுமரன் said...

கோ.ரா. நம்பினாலும் நம்பாட்டியும் அதான் நிஜம்.ஆனா என் உடம்பு வாகு அப்படி அப்பா பாட்டி மாதிரி. தேவையில்லாம உடம்புல எதையும் வச்சுகிடறது இல்லை:-).

படத்தை பார்த்து ஏமாற வேணாம் சிவா:-). சீக்கிரமே உங்களுக்கு அந்த யோகம் அமைய வாழ்த்துகள்...

பிரதீப் said...

முத்துக்குமரன்,
உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன், பாருங்கள். கண்டிப்பாச் சந்திச்சிருவம்யா!

ராகவா, ஞாயிற்றுக் கிழமை திருச்சிக்குப் போய்விட்டு அப்புறம் மதுரைக்குத் தான் போறேன். ஒரு வாரம் விடுமுறை!

முத்துகுமரன் said...

//மதுரைக்குத் தான் போறேன். ஒரு வாரம் விடுமுறை!//

பிரதீப், பலே பலே. கண்டிப்பா சந்திச்சிடுவோம். அம்மாவும் மதுரை வருகிறார்களா??. தனியாக மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

Karthik Jayanth said...

முத்து குமரன்,

முதலில் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்!

மதுரை எப்படி இருக்குன்னு ஒரு ரிப்போர்ட் தருமாறு கேட்டுகொள்கிறேன். ஊர் பக்கம் போய் எவ்வளவு நாள் ஆச்சி அதான் ;-)

குமரன் (Kumaran) said...

இனிய பயணமாக அமையட்டும். புது வீடு வாங்குவதற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் முத்துகுமரன். பத்திரமா போயிட்டு வாங்க. திரும்பி வந்த பிறகு நம்ம ஊரு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. போன வருடம் ஜூனில் சென்றது.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP