மீண்டும்

அப்பாடா

மறுபடியும் அமீரகம் வந்து சேர்ந்தாகிவிட்டது. இந்த விடுமுறை மிக பரபரப்பான விறுவிறுப்பான விடுமுறையாக இருந்தாலும் மனநிறைவானதொரு விடுமுறையாக அமைந்துவிட்டது.
எத்தனை அலைச்சல், எத்தனை குடைச்சல்கள் என ஓடிக்கொண்டே இருந்தாலும் ஒருவழியாக 14ம் தேதி துபாய்க்கரையோரம் ஒதுங்கிவிட்டேன்.

ஆம். நிறைய மனநிறைவுகள் இந்த விடுமுறையில்

1.சொந்த வீடு வாங்கி குடியேறியாகிவிட்டது.

2. ஒப்புதல் கிடைத்துவிட்ட அண்ணா- அண்ணி காதல்

3. வலை நண்பர்கள் உடனான சந்திப்பு(டோண்டு முதல் சந்திப்பு வரை)

4. திராவிட தமிழர்களுடனான சந்திப்பு.

5.லிவிங் ஸ்மைல் உடனான சந்திப்பு

6. அறிவுமதி அண்ணனுடனான சந்திப்பு (கொளத்துர் மணியுடன்)

6.புலவர். கலியபெருமாளின் மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்தேசிய சிந்தனையாளர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் ஒருங்கே காணும் வாய்ப்பு பெற்றது

7. சுப.வீ அவர்களுடனான சந்திப்பு

8. முத்து தமிழினியுடன் சென்று அய்யா. பழ. நெடுமாறனுடன் கழித்த அந்த ஒன்றரை மணி நேரம்

9. குமுதம் உதவியாசிரியர் கடற்கரய் மற்றும் ஓவியர் கண்ணாவுடன் கழித்த மணித்துளிகள்

10. மதுரை புத்தகக்கண்காட்சியில் கவிஞர்.பிரான்சிஸ்கிருபாவுடன் செலவிட்ட மணித்துளிகள், புத்தகங்கள் வாங்கசெலவழித்த 4 மணி நேரங்கள்

இடைவிடாத ஒட்டத்தில் மனதிற்கு இதமளித்த சந்திப்புகள் புத்துணர்வைத் தந்தன. ஓடிக்கொண்டே இருந்ததால்தான் என்னவோ வீட்டை விட்டு பிரியும் போது மனம் வலித்தது. வெறுப்புடன் மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு ஏக்கப் பெருமூச்சோடு சென்னை புறப்பட்டேன். துபாய் வந்தும் சேர்ந்தேன்.

சந்திப்புகளை நேரம் கிடைத்தால் விரிவாக எழுதுவேன்.

எனவே மக்களே

மத்தபடிக்கு

கச்சேரி

மீண்டும் ஆரம்பம்..

28 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

dondu(#4800161) said...

I have posted about our meeting. Please give your comments therin.

Regards,
dondu N.Raghavan

கோவி.கண்ணன் [GK] said...

முத்துகுமரன்...!
எல்லாமே மகிழ்வான விசயம் பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்.

பதிவர் சந்திப்புப் பற்றியும் எழுதுங்கள்.

Leo Suresh said...

நிறைவான காரியங்கள் செய்துவிட்டு வந்தமைக்கு வாழ்துக்கள்
லியோ சுரேஷ்
துபாய்

S. அருள் குமார் said...

//கவிஞர்.பிரான்சிஸ்கிருபாவுடன் செலவிட்ட மணித்துளிகள்//
வாழ்வின் யதார்த்தங்கள் பேச அருமையான மனிதர். நல்ல அனுபவமாக இருந்திருக்கும் ன நம்புகிறேன்.

luckylook said...

ம்.... கோதாவுல குதிச்சாச்சா? இனிமே அமர்க்களம் தான்.....

Sivabalan said...

குமரன்

விடுமுறையை நல்ல உபயோகமாகத்தான் களித்திருக்கிறீர்கள்.. நல்ல விசயம்..

ஆவி அம்மணி said...

வெல்கம் பேக் டூ த பெவிலியன்!

தம்பி said...

வருக! வருக!

முத்து(தமிழினி) said...

வாருங்கள்...

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகள் முத்துகுமரன். எப்போது அண்ணன் திருமணம்? அடுத்து உங்களுக்கா? எப்போது? சொந்த வீடு வாங்கிக் குடியேறுதல் மிக மகிழ்ச்சியானதொன்று. மீண்டும் வாழ்த்துகள்.

G.Ragavan said...

வாங்க முத்துக்குமரன் வாங்க....வழக்கம் போல உங்க பதிவுகளை இடுங்க.

புதுமனை புகுந்ததிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். அண்ணனுக்கும் அண்ணிக்கும் எனது வாழ்த்துகள்.

SK said...

பகிர்ந்தமைக்கு நன்றி.
புள்ளியாய்க் கேட்கையிலேயே இனிப்பது....
விரித்துக் கேட்கின் இன்னமும் சுவைக்கும்!

வெற்றி said...

முத்துக்குமரன்,
தமிழின உணர்வாளர்களையெல்லாம் சந்தித்திருக்கிறீர்கள். நல்ல மகிழ்ச்சிகரமான விடுமுறையாக இருந்திருக்கிறது. மகிழ்ச்சி. மதிப்பிற்குரிய நெடுமாறன் ஐயா, மற்றும் சுப.வீ ஆகியோருடனான சந்திப்பு அநுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமாயின் பதிவாக இடுங்களேன்.

முத்துகுமரன் said...

வரவேற்பளித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கடந்த இருதினங்களாக இகலப்பை வேலை செய்யாததால் பதிலளிக்க இயலவில்லை. தாமதமான பதிலுக்காக நண்பர்கள் மன்னிக்கவும்.

முத்துகுமரன் said...

டோண்டு சார் உங்களுடனான சந்திப்பு மிக மகிழ்வான ஒன்று. உங்கள் வலைப்பூவில் வந்து பின்னூட்டம் இடுகிறேன்.

முத்துகுமரன் said...

என் விடுமுறை காலத்தில் வலையுலக கதாநாயகனாக வலம் வந்த கோவியாரே உங்கள் வரவேற்பிற்கு நன்றி

முத்துகுமரன் said...

நன்றி லியோ சுரேஷ். நீங்களும் துபாய் என்பதறிந்து மகிழ்கிறேன். விருப்பப்பட்டால் உங்கள் தொலைபேசி எண்ணை தனிமடலில் தெரிவிக்கவும்

முத்துகுமரன் said...

//வாழ்வின் யதார்த்தங்கள் பேச அருமையான மனிதர். நல்ல அனுபவமாக இருந்திருக்கும் ன நம்புகிறேன். //

நீங்கள் சொல்வது உண்மைதான் அருள்.அவரோடு செலவிட்டது மிக குறைந்த நேரமே என்றாலும் மிகச்சிறப்பான அனுபவம் அது.

முத்துகுமரன் said...

லக்கி

ஆமாப்பா ஆமா :-)

முத்துகுமரன் said...

நன்றி சிவபாலன்.

அமானுஷ்ய ஆவி - முதல் வருகைக்கு நன்றி..

ஏன் ஆவியாக உலவ வேண்டும். மனிதனகாவே உலவலாமே :-)

முத்துகுமரன் said...

நன்றி தம்பி, முத்து(தமிழினி)

முத்துகுமரன் said...

குமரன்,
எனது அடுத்த விடுமுறையில் திருமணத்தை வைக்க சொல்லி அண்ணன் அண்ணியிடம் கோரிக்கை மனு சமர்பித்திருக்கிறேன். பார்க்கலாம்.

அண்ணன் திருமணத்தின் போது எனக்கு பெண் தேடுவதாய் உத்தேசம் :-)

முத்துகுமரன் said...

கோ.ராகவன் உங்களை சந்திக்க முடியாமல் போனது ஏமாற்றமே. உங்கள் வாழ்த்திற்கு நன்றி

முத்துகுமரன் said...

விரித்து சொல்ல முயற்சி செய்கிறேன் எஸ்.கே.

வருகைக்கு நன்றி

முத்துகுமரன் said...

நன்றி வெற்றி.

இந்த விடுமுறையின் மிக மனநிறைவான ஒன்று நெடுமாறன் அய்யாவுடனான சந்திப்பு. நிச்சயமாக அது குறித்து பதிவிடுகிறேன்.

போலிஸ்காரன் said...

மீண்டும் வந்ததற்கு வாழ்த்துக்கள் முத்துக்குமரன்.

ஆனால் பின்னூட்டக் கயமை நடைபெறாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதர் மற்றும் அனானி ஆப்ஷன்கள் வைத்துக் கொள்ளுங்கள்.

முத்துகுமரன் said...

சரிங் போலிஸ்காரர்

முத்துகுமரன் said...

//ramachandranusha said...
முத்துகுமரன்,
ஒரு சந்தேகம் அண்ணனுக்கு திருமணம் ஆகவில்லை, ஆனாலும் அவர் காதலிக்கும் பெண்ணை நீங்கள் அண்ணி என்று அழைக்கிறீர்களா?

5:24 PM
//

ஆமாம். அவருடனான முதல் சந்திப்பிலேயே அண்ணி என்று சொல்லிவிட்டேன்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP