இறுகிக்கிடக்கும் தனிமை

மெளனத்திற்கும் வாய்ப்பின்றி
இறுகிக்கிடக்கிறது தனிமை
உயிரோடு
ஏதேனும் ஒரு கூட்டில்
அடைந்துவிட தேடுகிறது
நீண்டகாலமாக.

எனக்கானதில் நிரம்பாமல்
எல்லாப் பிரதிகளிலும்
எல்லாக் கூடுகளும்
நிரம்பி வழிந்துதான்
கொண்டிருக்கின்றன.

மெளனத்திற்கும் வாய்ப்பின்றி
மிதக்கிறதென் தனிமை
எண்ணைய்திவலைகளாய்

1 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

முத்து(தமிழினி) said...

அய்யா,

ஒரு கவிதையை பத்தி நான் பதிவு போட்டது என்னமோ வாஸ்தவம்தான்.

அதுக்காக ??? ஒரு வாரம் ஆகும்போலயெ புரிய

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP