தேவைப்படுகிறது

தேசபக்தி வளர்க்க
தேவைப்படுகிறது
தீவிரவாதம்...

22 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

கிரிகெட்-ம் சேர்த்திருக..
:-))))))))

G.Ragavan said...

முத்துக்குமரன், இன்றைய சூழ்நிலையில் தேசபக்தி மட்டுமல்ல மதம், மொழி, இனம் என்று பலவற்றை வளர்க்க தீவிரவாதம் எளிதாக உதவுகிறது.

நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை விடுங்கள். சொல்லியிருக்கும் தொனி தேசபக்தியே கூடாது என்பது போல இருக்கிறது. அல்லது தேசபக்தி இருப்பவர்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்பது போல இருக்கிறது. அதைத்தான் சொல்கின்றீர்களா? இல்லை என்று நான் நம்புகிறேன்.

முத்துகுமரன் said...

//சொல்லியிருக்கும் தொனி தேசபக்தியே கூடாது என்பது போல இருக்கிறது//

ராகவன் இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

Samudra said...

//மதம், மொழி, இனம் என்று பலவற்றை வளர்க்க தீவிரவாதம் எளிதாக உதவுகிறது.//

இதில் மதம், மொழி, இனம் ஆகியவை தீவிரவாதத்தை கொண்டு வளர்க்கபடுகின்றன.

மதங்களுக்கு அல்-உம்மா-பஜ்ரங் தள், மொழிக்கு-இனங்களுக்கு நெடுமாறன்களும் வைகோக்களும்.

Vajra said...

தீவிரவாதம் வளர்க்க
தேவைப்படுகிறது
கம்யூனிசம்...

In a way its because of the commies only nationalists are growing.

bala said...

வஜ்ரா சொன்னது,

"In a way its because of the commies only nationalists are growing."

காம்மிகளால் நக்சலைட்ஸ் அதிகமாக உருவாகுவது சரி..நேஷனலிஸ்ட்ஸ்?

பாலா

bala said...

சமுத்ரா சொன்னது,

"மதங்களுக்கு அல்-உம்மா-பஜ்ரங் தள், மொழிக்கு-இனங்களுக்கு நெடுமாறன்களும் வைகோக்களும்."

நெடுமாறன்..புரிந்து கொள்ளக்கூடியது..வைகோ?

பாலா

செந்தில் குமரன் said...

தேச பக்தி வளர்க்க அல்ல காண்பிக்கவே தேவையாய் இருக்கிறது தீவிரவாதம்.

இயற்கையின் சீற்றங்களின் பொழுது வந்து குவியும் உதவித் தொகைகளைப் போலத்தான் இதுவும்.

அப்பொழுது மட்டும் தான் அவர்களுக்கு கருணை என்பது வருகிறதா? இல்லை கருணை இருக்கிறது ஆனால் இயற்கையின் சீற்றம் ஏற்படும் சமயம் அது வெளியே தெரிகிறது.

அது போலத்தான் தேச பக்தியும் எல்லா சமயங்களில் இருப்பது தான் ஆனால் அது ஒரு தீவிரவாத செயல் நடைபெறும் சமயம் வெளிப்படுகிறது.

தலைவர் ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்றால்

இருக்கிறது வெளிப்படாம போகாது
இருக்காததது வெளிப்படவே படாது

என் அளவில் பொறுத்த வரை தேச பக்தி என்பதும் ஒரு அளவில் தொல்லைதான்.

பாகிஸ்தானில் இருந்து வரும் தீவிரவாதி செயல் படுவது தேச பக்தியால் தான்.

உயிர்களுக்கு அன்பு பின்பு தேச பக்தி என்று எல்லோரும் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் ஆனால் சிலர் மதம் நாடு இனம் என்று எதேதோ உயிர்களிடத்தில் அன்புக்கு முன் வைத்து விடுகிறார்கள்.

இதில் என்ன நகைச்சுவை என்றால் மதம் என்பது உயிர்களிடத்தில் அன்பு செய்யச் சொல்கிறது.

அதாவது மதம் உயிர்களை எல்லாவற்றிர்கும் முன் வைக்கச் சொல்கிறது.

ஆனால் மதம் பிடித்தவர்கள் தன் மதம் சார்ந்த உயிர்களை எல்லாவற்றிர்கும் முன் வைத்து விடுகிறார்கள் :-)))).

எதோ பெருசா பின்னூட்டம் அடிச்சிட்டேன் உங்க கருப்பொருளோட முழுமையா ஒத்துப் போகலேன்னா கண்டுக்காதீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.

Vajra said...

//
காம்மிகளால் நக்சலைட்ஸ் அதிகமாக உருவாகுவது சரி..நேஷனலிஸ்ட்ஸ்?
//

commies encourage naxals, and anti-nationals, and, terrorists, then right minded people will become more nationalistic...!!

பொன்ஸ்~~Poorna said...

back? :)

முத்துகுமரன் said...

கருத்து சொன்ன நண்பர்கள் பாலபாரதி, கோ.ராகவன், சமுத்ரா, வஜ்ரா, பாலா, குமரன் எண்ணம், பொன்ஸ் ஆகியோருக்கு நன்றி

முத்துகுமரன் said...

வஜ்ரா,

சுயநலவதிகளுக்கும், மேலாதிக்க மனோபாவமும் இருப்பவர்களுக்கு கம்யூனிசம் புரியவும் செய்யாது. புடிக்கவும் செய்யாது.

நாளைக்கு குழந்தைச்''செல்வம்'' இல்லையென்றால் அதற்கும் கம்யூனிசம்தான் காரணம் என்ரு சொல்லிவிடாதீர்கள். :-)

முத்துகுமரன் said...

சமுத்ரா உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு பாராட்டுகள்.

பாலா உங்களுக்கும்தான்.

முத்துகுமரன் said...

குமரன் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

*
எல்லாம் கவிதை சொல்ல வந்ததிற்கு பக்கத்தில் வீடு, குடிசை, மாளிகை கட்டுகிறார்கள்.

அவர்கள் விருப்பம் போல் கட்டிக் கொள்ளட்டும்

முத்துகுமரன் said...

//back? :) //

அப்படியென்றும் சொல்லலாம்.

வருகைக்கு நன்றி

Vajra said...

//
சுயநலவதிகளுக்கும், மேலாதிக்க மனோபாவமும் இருப்பவர்களுக்கு கம்யூனிசம் புரியவும் செய்யாது. புடிக்கவும் செய்யாது.
//

மிக்க நன்றி.

நான் சுய நலவாதி என்று சொல்லிக் கொள்வதில் எந்த வெட்கமும் எனக்கில்லை.

மேலாதிக்க மனோபாவாம் என்றால் என்ன? அப்ப, கீழாதிக்க மனோபாவம் என்று ஒன்று இருக்கிறதா?

//
நாளைக்கு குழந்தைச்''செல்வம்'' இல்லையென்றால் அதற்கும் கம்யூனிசம்தான் காரணம் என்ரு சொல்லிவிடாதீர்கள். :-)
//

கம்யூனிச நாடுகளில் குழந்தைச் செல்வத்தை பிறக்கவிடாமல் அரசே செய்கிறதே... Population control என்கிற பெயரில்.

சீனா வில் இது மிகப் பிரபலம்.

எனக்கு என்ன, நான் ஐந்து கூட பெற்றுக் கொள்வேன் நான் சுய நலவாதி.

ஏன், இந்தியாவில் ஜனத்தொகை அதிகமாதலால், கம்யூனிஸ்டுகளான நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் அனாதைகளை தத்தெடுத்து வளர்க்க "வாக்கு" கொடுக்க முடியுமா? பொது நலம் கருதி?!!

அந்த வாக்கு தவறாமலும் இருந்து காட்டவேண்டும்...!!

உங்கள் வாழ்க்கை உங்கள் கையில், இது போன்று புத்தகக் கொளகைகளை நம்பி வாழ்க்கையை தொலைக்காதீர்கள்.

கம்யூனிசம் ஒரு நல்ல கொள்கை Full Stop.

முத்து(தமிழினி) said...

//நான் சுய நலவாதி என்று சொல்லிக் கொள்வதில் எந்த வெட்கமும் எனக்கில்லை//

என்னங்க இது?

:)) சரிசரி..நல்ல கவிதை

குழலி / Kuzhali said...

ஏகப்பட்ட உள்குத்தா இருக்கே, 3 வரியில் இத்தனை பொருள் இருக்கா, கவிதையின் பலமே அது தான்.

கும்பிட மட்டுமல்ல
அரசு கட்டிலை
பிடிக்கவும் தேவைப்படுகிறார்
ராமர்
-------------
பாபர் மசூதியை
சேதப்படுத்தி
வளர்க்கின்றார்கள்
தேசபக்தியை
--------------
குஜராத் கொலை
பத்தாயிரமாம்
ஆட்சி கலைத்து
தேர்தல் வை
இன்னும் ஐந்து
வருட ஆட்சிக்கு

கார்கில் போர்
ஜெயிச்சாச்சி
ஆட்சி கலைத்து
தேர்தல் வை
இன்னும் ஐந்து
வருட ஆட்சிக்கு

வச்சாங்க ஆப்பு
ஐந்து வருசத்துக்கும்
சேர்த்து

முத்துகுமரன் said...

உயிர்களுக்கு அன்பு பின்பு தேச பக்தி என்று எல்லோரும் வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் ஆனால் சிலர் மதம் நாடு இனம் என்று எதேதோ உயிர்களிடத்தில் அன்புக்கு முன் வைத்து விடுகிறார்கள்.

//இதில் என்ன நகைச்சுவை என்றால் மதம் என்பது உயிர்களிடத்தில் அன்பு செய்யச் சொல்கிறது.

அதாவது மதம் உயிர்களை எல்லாவற்றிர்கும் முன் வைக்கச் சொல்கிறது.

ஆனால் மதம் பிடித்தவர்கள் தன் மதம் சார்ந்த உயிர்களை எல்லாவற்றிர்கும் முன் வைத்து விடுகிறார்கள் :-)))).//

ஆழமான கருத்துகள் குமரன் எண்ணம்.
நன்றி

G.Ragavan said...

// முத்துகுமரன் said...
//சொல்லியிருக்கும் தொனி தேசபக்தியே கூடாது என்பது போல இருக்கிறது//

ராகவன் இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. //

வியப்புற என்ன இருக்கிறது முத்துக்குமரன். நான் எழுதியதை முழுவதும் படியுங்கள்.

====================================
நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தை விடுங்கள். சொல்லியிருக்கும் தொனி தேசபக்தியே கூடாது என்பது போல இருக்கிறது. அல்லது தேசபக்தி இருப்பவர்கள் எல்லாரும் தீவிரவாதிகள் என்பது போல இருக்கிறது. அதைத்தான் சொல்கின்றீர்களா? இல்லை என்று நான் நம்புகிறேன்.
====================================

இதுதானே நான் சொன்னது. என்னுடைய கேள்விக்கு உங்களது விடை இல்லையே.

எல்லாரும் பொதுமைப்படுத்துகிறார்கள் எனச் சொல்லி நாமும் அதையே செய்தல் சரியில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.

முத்துகுமரன் said...

ராகவன்,

உங்கள் முதல் கேள்விக்கு, கவிதையில் எங்கு தேசபக்தி கூடாது என்று சொல்லியிருக்கிறது.(தொனி). கவிதையை மறூபடியும் வாசியுங்கள். தேசபக்தி வளர்க்க/ தேவைப்படுகிறது/ தீவிரவாதம். கவிதையைஒருவன் வாசிக்கையில் அது அவனுக்கான பிரதியாகிறது. அதன் பொருள் அவன் புரிதல்களுக்கேற்ப அமைகிறது. இந்தக் கவிதை தேசபக்தியில் தீவிரவாதத்தின் பங்கு என்னவென்பதை பேசுகிறது. எப்படி எவ்வாறு என்பதற்கான விடைகளை வாசகனை தேடச் சொல்லியிருக்கிறது. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்து கொள்ளலாம்.

பொதுமைபடுத்துதல் என்ற தளத்திற்குள்ளே நான் போகவில்லை.

G.Ragavan said...

// முத்துகுமரன் said...

ராகவன்,

உங்கள் முதல் கேள்விக்கு, கவிதையில் எங்கு தேசபக்தி கூடாது என்று சொல்லியிருக்கிறது.(தொனி). கவிதையை மறூபடியும் வாசியுங்கள். தேசபக்தி வளர்க்க/ தேவைப்படுகிறது/ தீவிரவாதம். கவிதையைஒருவன் வாசிக்கையில் அது அவனுக்கான பிரதியாகிறது. அதன் பொருள் அவன் புரிதல்களுக்கேற்ப அமைகிறது. இந்தக் கவிதை தேசபக்தியில் தீவிரவாதத்தின் பங்கு என்னவென்பதை பேசுகிறது. எப்படி எவ்வாறு என்பதற்கான விடைகளை வாசகனை தேடச் சொல்லியிருக்கிறது. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்து கொள்ளலாம். //

நன்றி முத்து. :-) வாசகன் விடை காணுறது இருக்கட்டும். நீங்க சரியான விடையைத்தான் கண்டுட்டீங்கன்னு நம்புறேன்.

// பொதுமைபடுத்துதல் என்ற தளத்திற்குள்ளே நான் போகவில்லை. //

சரி விடுங்கள். அதுக்குள்ள ஏன் போய்க்கிட்டு.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP