பூமாலையே தோள் சேரவா....

இன்று ஒரு இனிப்பான நாள் எனக்கு.

எனது அன்பு நண்பன் லட்சுமிநாரயணனுக்கு இன்று திருமணம்.

கல்லூரியில் ஒரே வகுப்பில், ஒரே அறையில் என் கூட இருந்த நண்பன். மிக நெருக்கமான நண்பன். எப்போதும் எல்லோரும் நலமாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். என் மீது தனிப்பட்ட பிரியம் கொண்டவன். அரியர் எனும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த என் மீது கவனம் செலுத்தி, மீள உதவி செய்தவன். தன்னுடைய ரகசியங்களை மற்ற நண்பர்களைவிட என்னிடம் மட்டுமே உரிமையாய் இயல்பாய் பகிர்ந்து கொள்பவன்.

காதலர்கள் என்றாலே கிண்டல் செய்து மகிழ்பவன். அவர்களை கோபப்படுத்தி ரசிப்பவன். இன்று திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறான்.

அவன் திருமணம்!! காதல் திருமணம்!!

நண்பர்கள் குழாம் எல்லாம் மண்டபத்தில் இருக்கிறது. நான் மட்டும் கணினி முன்பே. வெளிநாட்டிற்கு வந்தபின்பு தனிமையை உணர்த்தும் மற்றுமொரு தினம். கடந்த ஆகஸ்டில் திருமணம் வைக்கிறேன் என்று என்னிடம் சொல்லியிருந்தான். நானும் அந்த மாதத்தில் விடுப்பு எடுத்து சென்றேன். ஆனால் திருமணம் தள்ளி போய் விட்டது. இந்த வருடத்தில் இது இரண்டாவது ஏமாற்றம். இன்னொரு உயிர் நண்பன் குப்புசாமி திருமணம் மே மாதம் நடந்தது. இவனுடையது நவம்பர். மூன்று மாத முன் பின்னாக இருவரின் திருமணத்திலும் கலந்து கொள்ள இயலாது போயிற்று.

கல்லூரி படிக்கும்போது சொல்லிக்கொண்டேயிருப்பேன் உங்கள் திருமணத்தில் எல்லா வேலைகளும் நான் பார்ப்பேன் என்று. ஆனால் சொன்ன சொல்லை காக்க இயலாத சூழல் எனக்கு!!

காலையில் தொலைபேசினேன். திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நண்பர்களின் ஆரவார இரைச்சலை கேட்க கேட்க மகிழ்வாய் இருந்தது.

உங்களோடு இணைந்து லட்சுமிநாராயணன் - வளர்மதி தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்க பல்லாண்டு!!
எல்லா வளங்களோடும், நலங்களோடும்

வாழ்க பல்லாண்டு!!

12 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

மதுமிதா said...

கவலையை விடுங்க குமரன்
உங்க திருமணத்தில் அவங்க ரெண்டு பேரும் ஓடி ஓடி வேலை செய்யட்டும்.

அப்ப ஆகஸ்ட் இங்கே வந்தீங்களா
பாக்க முடியலியே:-(

லட்சுமிநாராயணன் - வளர்மதி
தம்பதிகளுக்கு வாழ்த்துகள்

'பூமாலையே தோள்சேரவா'
பாடல் அருமை

லிவிங் ஸ்மைல் said...

லட்சுமிநாராயணன் - வளர்மதி தம்பதியினருக்கு எனது இனிய திருமண வாழ்த்துகள்


மணமக்கள் எல்லா வளங்களோடும், நலங்களோடும் பல்லாண்டு வாழட்டும் என உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்..


// நண்பர்கள் குழாம் எல்லாம் மண்டபத்தில் இருக்கிறது. நான் மட்டும் கணினி முன்பே. வெளிநாட்டிற்கு வந்தபின்பு தனிமையை உணர்த்தும் மற்றுமொரு தினம். //

: (

G.Ragavan said...

உங்கள் அருமை நண்பர் லட்சுமி நாராயணனுக்கும் அவர்தம் துணைவியார் வளர்மதிக்கும் என்னுடைய வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

சரி முத்து...நீங்க எப்போ?

enRenRum-anbudan.BALA said...

வாழ்க பல்லாண்டு!!

எல்லா வளங்களோடும், நலங்களோடும்

வாழ்க பல்லாண்டு!!

Musthafa, Musthafa, Don't worry Musthafa :)))

வடுவூர் குமார் said...

நாங்களும் வாழ்த்துகிறோம்.

Johan-Paris said...

என் இனிய வாழ்த்துக்கள்;
புது மணத் தம்பதிகளுக்கு!
யோகன் பாரிஸ்

முத்துகுமரன் said...

//கவலையை விடுங்க குமரன்
உங்க திருமணத்தில் அவங்க ரெண்டு பேரும் ஓடி ஓடி வேலை செய்யட்டும்//
உங்க ஆசிப்படியே நடக்கட்டும் அக்கா. :-)

வீடு வாங்கும் வேலை இருந்ததால் நிறைய நண்பர்களை சந்திக்கமுடியவில்லை. மதுரையிலிருந்த போதிலும் தருமி அய்யாவை கூட பார்க்க முடியவில்லை. அடுத்தமுறை வரும் போது நிச்சயம் சந்திக்கிறேன்.

நேற்று ஏதேச்சையாக இந்த பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தேன். ரெம்ப பொருத்தமாக இருந்ததால் தலைப்பாக வைத்து விட்டேன்

முத்துகுமரன் said...

வாழும் புன்னைகயின் வாழ்த்து மகிழ்வளிக்கிறது. நன்றி வித்யா

முத்துகுமரன் said...

//சரி முத்து...நீங்க எப்போ? //

சச்சின் விக்கெட்டே இன்னும் விழவில்லை. ஹர்பஜன் சிங் விக்கெட்டு ஆசப்படறீங்களே....

உங்களுக்கு எப்ப அய்யா??? அதைச் சொல்லும் :-)

முத்துகுமரன் said...

//Musthafa, Musthafa, Don't worry Musthafa :)))//

நன்றி பாலா. ஆறுதலுக்கும் வாழ்த்திற்கும் :-)

முத்துகுமரன் said...

தங்கள் வாழ்த்திற்கு நன்றி வடுவூர் குமார், யோகன் பாரிஸ்.

லதா said...

// சச்சின் விக்கெட்டே இன்னும் விழவில்லை. ஹர்பஜன் சிங் விக்கெட்டு ஆசப்படறீங்களே.... //

நாள் இறுதியில் ஷேவாக் ஆட்டமிழந்தால், ஹர்பஜன்சிங் நைட்வாட்ச்மேனாக வர வாய்ப்பிருக்கிறது அல்லவா ? :-)))

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP