இலவசமானவன்

பத்து மாத கருவறை
நீள் துயிலும் கல்லறை
இரண்டுக்கும் இடையே
உயிரூட்டிய காற்று.

வாழ்க்கைப் பாதையெங்கும்
உள்ளும் புறமும்
விலையிட்டு வாங்கிட முடியா
இயற்கையின்
இலவசங்களாலானவன்
மனிதன்

28 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

அமுதன் said...

நல்ல கவிதை... இயற்கையின் இலவசங்களாலானவன் மனிதன்.... நிதர்சனமான உண்மை......

போட்டிக்கான வாழ்த்துக்கள்.....

முத்து(தமிழினி) said...

அருமை.

போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும், உங்கள் வாழ்த்திற்கும் எனது நன்றி.

பள்ளிக்காலத்தில் அமுதன் என்று எனக்கொரு நண்பன் உண்டு. உங்கள் பின்னூட்டம் அவனை நியாபகப்படுத்தியிருக்கிறது எனக்கு. அதற்காகவும் உங்களுக்கு எனது நன்றி

முத்துகுமரன் said...

//அருமை.

போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள் //

செயல்,
உங்கள் அருள்வாக்கிற்கு நன்றி :-)

முத்து(தமிழினி) said...

இது போன்ற கவிதைகள் வெல்லவேண்டும் என்பது என் அவா

C.M.HANIFF said...

Nalla kavithai, vaashtuhkkal vetri pera ;)

பிரதீப் said...

எல்லாரும் இலவசத்துக்காக என்னென்னமோ யோசிச்சுட்டு இருக்க, நீங்க, மனிதனின் பிறப்பே இயற்கை அளித்த இலவசம்னு சொன்னீங்க பாருங்க...

அங்ஙன நிக்குறீங்க...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

பிரதீப் said...

எல்லாரும் இலவசத்துக்கு என்னென்னமோ யோசிச்சுட்டு இருக்கும் போது மனிதனின் பிறப்பே இயற்கையின் இலவசம்னு சொன்னீங்க பாருங்க, அங்ஙன நிக்குறீங்க...

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

குமரேசன் said...

இது கவிதை. இலவசமான வாழ்க்கையை வைத்துத்தான் என்ன ஆட்டம் ஆடுகிறான் மனிதன்.

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும், உங்கள் வாழ்த்திற்கும் நன்றி திரு ஹனிப்

முத்துகுமரன் said...

கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி..
**
பிரதீப் வீட்டில் எல்லோரும் நலமா? ஊருக்கு வந்தும் இந்த முறை உங்களை சந்திக்காதது மிகுந்த ஏமாற்றமே.
கல்யாண சாப்பாடு போடுங்க. வந்திடறேன் :-)

முத்துகுமரன் said...

நன்றி குமரேசன்...

குழலி / Kuzhali said...

நல்ல கவிதை, மொத்த வாழ்க்கையின் சாரம்சமும் அடங்கிவிட்டது....கவிதை நறுக்கென்று சுருக்காக உள்ளது.

ராமசுப்பு said...

கவிதை மிக சுருங்கிவிட்டது போன்ற உணர்வு ஏற்படுகிறது.ஆயினும் நல்ல கவிதையே.

மதுரையம்பதி said...

நச்சுனு இருக்கு முத்துகுமரன்.....

முத்துகுமரன் said...

நன்றி குழலி,

**
வார்த்தைகளை சிக்கனமாக பயன்படுத்துவதே கவிதைக்கு அழகு என்று கருதுபவன் நான். அதனால்தான் அப்படியொரு தோற்றம் இருக்கிறது ராமசுப்பு

முதல் வருகைக்கு நன்றி

முத்துகுமரன் said...

//நச்சுனு இருக்கு முத்துகுமரன்..... //

நன்றி மெளல்ஸ்.

நச்சா இருக்குனு யாராவது சொல்லப்போறாங்க.:-)

நிறைய முதல் வருகையை இந்தக் கவிதை எனக்கு இலவசமாக தந்திருக்கிறது

ஜோ / Joe said...

Muthu,
Surukkamana aazhntha karuththuLla kavithai..Best wishes!

Pot"tea" kadai said...

இலவசமென்பதால் தான்
என் பாட்டனும் பாட்டியும்
பெற்றுக்கொண்டார்களோ
பதினொன்று!

கவிதை நன்று, வெற்றி பெற வாழ்த்துக்கள்!

murali said...

அன்பு முத்து,
முத்தான வரிகள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

கண்ணன் said...

இனிது

luckylook said...

//இரண்டுக்கும் இடையே
உயிரூட்டிய காற்று//

வெற்றி பெற்றதற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....

அருட்பெருங்கோ said...

நச்சுனு சொல்லிட்டீங்க...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

முத்துகுமரன் said...

உங்கள் கவிதைகளை விரும்பி வாசிப்பேன்.

வருகைக்கு நன்றி அருட்பெருங்கோ

பரஞ்சோதி said...

அருமையான கவிதை,

எத்தனை பெரிய விசயத்தை இத்தனை ரத்தின சுருக்கமான கவிதையில் சொல்லிட்டீங்க.

ஆமாம், என்ன போட்டி?

கட்டாயம் வெல்வீங்க, நம்புங்க.

அருட்பெருங்கோ said...

/உங்கள் கவிதைகளை விரும்பி வாசிப்பேன்./

அப்படியா? :)

நீங்க ரொம்ப சீரியசானவர்னு இல்ல நெனச்சேன் :))

முத்துகுமரன் said...

//நீங்க ரொம்ப சீரியசானவர்னு இல்ல நெனச்சேன் :)) //

நேரம் கிடைக்கும் போது இதையும் வாசித்துப் பாருங்கள். உங்கள் முடிவு மாறக்கூடும் :-)
http://deepangalpesum.blogspot.com

மணி ப்ரகாஷ் said...

//உள்ளும் புறமும்
விலையிட்டு வாங்கிட முடியா
இயற்கையின்
இலவசங்களாலானவன்
மனிதன் //

அருமை.., இலவசம் அர்த்தமுற்றது..
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP