பெரியார்

நஞ்சாய் தழைத்திருந்த
வேத விருட்சங்களில்
அமிலம் பாய்ச்சியவன்

செல்வங்களை துரத்தி
கோபுரங்களில் வீற்றிருந்த
குப்பைகளை
துடைத்தெறிந்த சூறாவளி

ஆதிக்கத்தின்
ஆணிவேரை சாய்க்க வந்த
கோடாரி

கற்பனைக் கவிதைகளில்
பெண்ணியம் பேசாது
வாழ்வில் பேசிய
மக்கள் கவி

குப்பைக் கழிவுகளே!
உம்
ஆணவ மழையில் கரைந்திட
அவன் உப்புத் துகளல்ல
பகைவர் நடுங்கிடும்
கரும் பாறை!
கரும் பாறை!

36 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Sivabalan said...

முத்துக்குமரன்,

ஒரு கிரேன்ட் சல்யூட்..

வாவ்.. அருமை.. அருமை..

கலக்கல் கவிதை

நன்றி

குழலி / Kuzhali said...

எளிமையான அருமையான கவிதை வாழ்த்துகள் முத்துக்குமரன்

அருண்மொழி said...

தங்களது ஆதிக்கம் பறிபோனதால் ஊளையிடும் பிராணிகளை பற்றி ஏன் கவலை கொள்ளவேண்டும். இப்படி ஊளையிடுவதன் மூலம் அவாள்களின் உண்மை சொரூபத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடிகின்றதே.

பெரியார் என்றும் பெரியார்தான். தன் மீது வீசப்பட்ட மலத்தை பற்றி கவலைப்படாமல் தமிழின முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் அவர். அதுதான் அவர் செய்த மாபெரும் தவறு.

அழகு said...

போட்டியே ஒரு போடு!

அப்படிப் போடு அருவாள!

Gopalan Ramasubbu said...

Good one Muthukumaran :)

வசந்த் said...

முத்துக்குமரன் அவர்களே,

கண்டிப்பாக "ஒரு கிரேன்ட் சல்யூட்" போட்டாக வேண்டிய கவிதை.

நன்றி
வசந்த்

Gopalan Ramasubbu said...

பெருந்தலைவரும் பெரியாரும்

"ஆகட்டும் பார்க்கலாம்" என்ற நூலில் இருந்து.

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருக்கும் சுந்தர வடிவேலுவுக்கும் காமராஜருக்கும் டெல்லியில் ஏற்பட்ட எதிர்பாராத சந்திப்பில்:-

காமராஜர்: நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல்படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும். அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான். கிராமவாசி எங்க போவான்? அவனால மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறதுக்கு கட்டுபடியாகாது. சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விக்க வேண்டியிருக்கு..! மேல்பட்ட படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க..! ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரிய படிப்பு படிக்கட்டும்"

சு.வ: ஐயா உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இப்போ, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள்"

கா: அதைத்தானே நாம் விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா, அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்துடுமில்லையா...?

சு.வ: ஐயா... நன் பெரியார் ஐயாகிட்ட இந்த விவரத்தைச் சொன்னேன். அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு, "இவ்வளவுக்கும் காரணம் காமராசர் ஐயாதான்... அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான்..! அவர் மட்டு இல்லைன்னா 1952லேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழி தோண்டிப் புதைத்திருப்பார்" என்று சொன்னார்

கா: அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் ஐயாவாலதானே நடக்குது..! அவர் சொல்றார். நாம செய்யிறோம்! காரணகர்த்தா அவர்தானே..? இது 1952ல ஆரம்பிச்ச பிரச்சினையா என்ன? ஐயாயிரம் வருஷமா இருக்கிறதாச்சே... தெய்வத்தின் பேராலயும் மதத்தின் பேராலேயும் நம்ம ஒடுக்கி வச்சிட்டானே... இப்படி இருக்குறது உன் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே... இதப்பத்தி யார் கவலைப்பட்டா..? பெரியார் ஒருத்தர் தானே தலையில எடுத்துப் போட்டுகிட்டு பண்ணிகிட்டிருக்கார். அவரு மட்டும் இல்லைன்னா நம்ம புள்ளைங்க கதி என்னவாகியிருக்கும்? அத்தன பேரும் கோவணத்தோட வயல்ல ஏரோட்டிகிட்டிருப்பான்...! இன்னிக்கி டெபுடி கலெக்டராவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்...! நம்மகிட்ட அதிகாரம் இருக்கறதால பெரியார் நெனச்ச காரியத்த ஏதோ கொஞம் பண்ணிக்கொடுக்கறோம். அவரு எந்த அதிகாரத்தையும் கையில வச்சுக்காம ஊர் ஊரா திரிஞ்சி சத்தம் போட்டுகிட்டு வராரு...! அவராலேதான் நமக்கு எல்லாம் பெருமை...!

P.S:

MuthuKumaran,

Since the above article is related to Periyar,I thought of posting it here.If you feel it's deviating from the post, feel free to reject it.Thanks.

ஆசிப் மீரான் said...

கவிஞரே,

வாழ்த்துகள்!!
'கரைந்து போக உப்பு துகளல்ல'
சபாஷ்!!

சாத்தான்குளத்தான்

bala said...

//'கரைந்து போக உப்பு துகளல்ல'//

முத்துக்குமரன் அய்யா,

அருமையான கவிதை. அந்த கரும் பாறையையும் கரைய வைக்கும் கவிதை.

வாழ்த்துக்கள்.

பாலா

Anonymous said...

அந்த கரும் பாறையை ஏன் மாலை போட்டு, வணங்குகிறீர்கள் ?

போற்றிப் பாடுகிறீர்கள் ?

கவுதை எழுவுறீர்கள் ?

கல்லைத் தெய்வமாக்குகிறீர்களா ?

Anonymous said...

பகைவர் நடுங்கிடும்
கரும் பாறை!
கரும் பாறை!

1,Who will be afraid of a rock
2,Are yoi saying that Periyar is
just a rock

ENNAR said...

பெரியார் சிந்தித்தார் பெருந்தலைவர் அதை முடித்தார்

திரு said...

முத்துகுமரன்,

நல்ல கவிதை!

வாழ்த்துக்கள்!

G.Ragavan said...

முத்துக்குமரன், சாதீய ஒழிப்பில் பெரியாரின் பங்கு மிகமுக்கியமானது. மறுக்க முடியாதது. அது தொடர்பாக அவரை நான் மதிக்கிறேன். பெரியாருக்குப் பிறகு அவரது கருத்துகளைக் கொண்டு செல்ல சிறந்த முனைவர்கள் இல்லை என்பதும் எனது கருத்து. இந்த நிலையும் மாற வேண்டும்.

புரோகிதத்தைக் கடவுள் நம்பிக்கையற்ற பெரியார் எதிர்த்தார் என்று அவர் மேல் குற்றமாயச் சொல்கிறவர்களுக்கு ஒரு செய்தி. அவர் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கை நிறைந்த விவேகானந்தரும், அருணகிரியும் தேவாரம் பாடிய மூவரும் இன்னும் பலரும் எதிர்த்திருக்கிறார்கள். மக்கள் இன்னமும் அதில் ஆர்வம் செலுத்துவது வருந்தத்தக்கதே!

G.Ragavan said...

முத்துக்குமரன், கருத்தைப் பற்றி போன பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். கவிதைக்கு வருவோம். இந்தக் கருத்தைக் கவிதைக்கு மட்டும் கொள்ளவும்.

என்னாச்சு முத்து? உங்கள் கவிதைகள் சிறுத்திருந்தாலும் சுறுசுறுப்பாய் இருக்குமே! ஏதோ குறைகிறது இந்தக் கவிதையில். பகைவர் கடும்பாறை கண்டா நடுங்குவார்கள். இப்பொழுதுதான் பெரியார் இல்லை என்பதால் அப்படிச் சொன்னீர்களா என்ன? இல்லை வேறு ஏதேனும் கருத்தை வைத்துச் சொன்னீர்களா?

bala said...

//பகைவர் நடுங்கிடும்
கரும் பாறை!
கரும் பாறை!

1,Who will be afraid of a rock//

அனானி அய்யா,

என்ன சொல்றீங்க?
ஜார்ஜ் புஷ் கூட இந்த கரும்பாறையை வைத்து பகைவர்களான பின் லேடன்/முல்லா ஒமர் கும்பலை நடு நடுங்க வைக்கலாம்னு கேட்டார்.
முத்துக்குமரன் அய்யா தர மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாரு.

பாலா

Thangamani said...

நல்ல கவிதை.

கோபாலன் ராமசுப்புவுக்கும் நன்றி.

அவரது பின்னூட்டத்தைப்படிக்கையில் ஆனந்தவிகடன் ஒருமுறை பெரியரின் வழியிலே நின்று காமாராஜர் கல்விப்பணியைச் செய்திருக்காவிட்டால் தமிழ்நாடு கல்வித்துறையிலே முன்னேறி இருக்காது என்று தலையங்கம் எழுதியிருந்தது. அது நினைவுக்கு வருகிறது.

முத்துகுமரன் said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி.

ராகவன் கவிதைக்கு விளக்கம் சொன்னால் அது கவிதை இல்லை என்றூ நினைப்பவன் நான்.

கரும்பாறை - காரணத்துடனே பயன்படுத்தி இருக்கிறேன். நேரான அர்த்தம் தாண்டியும் அதனுள் இருக்கிறது செய்தி. செய்தியை நேரடியாக சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் கவிதை எதற்கு.

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ராகவன். மத்த கவிதை எல்லாம் சுறுசுறுப்பா இருக்குனு சொல்லீட்டீங்களே :-)

Anonymous said...

முத்து, கவிதை நன்று வாழ்த்துக்கள்.

தேவையான நேரத்தில்

ஆசிப் மீரான் said...

ராகவன்,

//பெரியாருக்குப் பிறகு அவரது கருத்துகளைக் கொண்டு செல்ல சிறந்த முனைவர்கள் இல்லை என்பதும் எனது கருத்து. //

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பெரியார் முன்னெடுத்ததை ஆதாயம் தேடிய அரசியல்வாதிகள் அலங்கோலப்படுத்தி விட்டார்கள்.
உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

சாத்தான்குளத்தான்

தி.ராஸ்கோலு said...

முத்துக்குமரன்

ஈரோட்டுக்கிழவனைப் புகழ்ந்து எழுதினால், இங்கே எத்தனை பேருக்கு அமிலம் பாய்ச்சியது போல இருக்கிறது என இதற்கு வந்துள்ள பின்னூட்டங்களும் ஒரு சிலரின் 'தரமான' வலைப்பதிவுகளுமே சாட்சி!

கவிதைக்கு நன்றி!!

முத்துகுமரன் said...

கோபாலன் ராமசுப்பு உங்களுக்கு எனது சிறப்பு நன்றிகள் உரித்தாகுக..
முக்கியமான செய்தியை இணைத்தமைக்கு நன்றி.

கொட்டாங்கச்சி said...

பெரியாரின் பேரைச் சொன்னாலே ஏன் சிலருக்கு எரிகிறது?

திரு said...

//bala said...
//பகைவர் நடுங்கிடும்
கரும் பாறை!
கரும் பாறை!

1,Who will be afraid of a rock//

அனானி அய்யா,

என்ன சொல்றீங்க?
ஜார்ஜ் புஷ் கூட இந்த கரும்பாறையை வைத்து பகைவர்களான பின் லேடன்/முல்லா ஒமர் கும்பலை நடு நடுங்க வைக்கலாம்னு கேட்டார்.
முத்துக்குமரன் அய்யா தர மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாரு.பாலா//

பாலா என்ற பெயரில் பின்னூட்டமிடும் நண்பரே! ஏன் இவ்வளவு இரத்த அழுத்தம்? உங்கள் சொற்களே உங்களை வெளிப்படுத்தும்.

அன்புடன்,
திரு

பூங்குழலி said...

கவிதை நன்று தோழரே..


பெருந்தலைவரும் பெரியாரும்
பற்றி இங்கே தகவல் தந்த கோபாலன் இராமசுப்பு அவர்களுக்கு நன்றி...

naathigan said...

Appreciable poem by Muthu, Thanks for Ramasubbu's insertion.

Anonymous said...

//நஞ்சாய் தழைத்திருந்த
வேத விருட்சங்களில்
அமிலம் பாய்ச்சியவன்//

vedas always remained as the lights from the heaven.
they are not poisoned and the mind of human brain is poisoned.
no one can poise the vedas for ever. it is light itself as sun.

G.Ragavan said...

// முத்துகுமரன் said...
ராகவன் கவிதைக்கு விளக்கம் சொன்னால் அது கவிதை இல்லை என்றூ நினைப்பவன் நான். //

கரும்பாறை - காரணத்துடனே பயன்படுத்தி இருக்கிறேன். நேரான அர்த்தம் தாண்டியும் அதனுள் இருக்கிறது செய்தி. செய்தியை நேரடியாக சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால் கவிதை எதற்கு.//

சரிதான் முத்துக்குமரன். ஆனால் பிரச்சனையே கவிதை புரியவில்லை என்பதுதானே. புரியாமல் போகுமானால் கவிதை எதற்கு? புரியும் விதமாக இருந்திருந்தால் நான் ஏன் கேட்கப் போகிறேன் முத்து. :-)

// உங்கள் விமர்சனத்திற்கு நன்றி ராகவன். மத்த கவிதை எல்லாம் சுறுசுறுப்பா இருக்குனு சொல்லீட்டீங்களே :-) //

பின்னே. உள்ளதை உள்ளதென்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. கருத்தை விடுங்கள். வழக்காம உங்கள் கவிதைகளில் சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகச் சொல்லும் வன்மை இருக்கும். அது கண்டிப்பாகப் பாராட்டுக்குரியதே.

முத்துகுமரன் said...

பழஞ்செய்யுள்களுக்கு இனிய தமிழில் விளக்கஞ் சொல்லிவரும் உங்களுக்கு நான் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொல்வது சரியாக வருமா. சூரியனுக்கு நெருப்பை காட்டலாமா?:-)

கொட்டாங்கச்சி said...

உண்மையைச் சொல்லனும்னா கவிதை சுமார்தான். வார்த்தை அடுக்குகள்தான் அதிகம்.
பெரியார் அடிநாதம் 'சுயமாரியாதை'. அதற்கான தடைகளை மூர்க்கமாக உடைத்தெறிந்தார். அது இக் கவிதையில் வெளிப்படவில்லை.

குமரன் (Kumaran) said...

இராகவன். எளிய கவிதை தானே இது. நன்றாகப் புரிகிறதே.

முத்துகுமரன் said...

//இராகவன். எளிய கவிதை தானே இது. நன்றாகப் புரிகிறதே.//

ரெம்ப நன்றி குமரன் :-)

luckylook said...

//குப்பைக் கழிவுகளே!
உம்
ஆணவ மழையில் கரைந்திட
அவன் உப்புத் துகளல்ல
பகைவர் நடுங்கிடும்
கரும் பாறை!
கரும் பாறை!//

இந்த வார்த்தைகளை வாசிக்கும்போது என் மயிர்க்கால்கள் பெருமிதத்தால் கூச்செரிகிறது.

நல்ல கவிதைக்கு நன்றி முத்து.

பரஞ்சோதி said...

முத்துகுமரன், நல்ல கவிதை,

சொல்ல வேண்டிய நேரத்தில் மிகச்சரியாக சொல்லியிருக்கீங்க.

பெரியாரைப் பற்றிய விழிப்புணர்வு மீண்டும் தமிழகத்தில் வருவது மகிழ்ச்சி கொடுக்கிறது.

காமராஜர், பெரியார் பற்றிய சம்பவம் பெரியார் படத்தில் இடம் பெற்றார் சிறப்பாக இருக்கும். சமீபத்தில் கூட தமிழக காங்கிரஸ் தலைவர் கேட்டதற்கு பொருத்தமான சம்பவம்.

G.Ragavan said...

// முத்துகுமரன் said...
பழஞ்செய்யுள்களுக்கு இனிய தமிழில் விளக்கஞ் சொல்லிவரும் உங்களுக்கு நான் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொல்வது சரியாக வருமா. சூரியனுக்கு நெருப்பை காட்டலாமா?:-) //

ம்ம்ம்..சொல்ல மாட்டேங்குறத இப்படியும் சொல்லலாம் போல. :-(

// குமரன் (Kumaran) said...
இராகவன். எளிய கவிதை தானே இது. நன்றாகப் புரிகிறதே. //

அது சரி. முத்துக்குமரன் கவிதைக்குக் குமரன் சாட்சி. :-) நான் மட்டுந்தான் மடையன் போல!

முத்துகுமரன் said...

புன்முறுவல் பூக்கச் செய்துவிட்டது உங்கள் பின்னூட்டம். :-))

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP