என் பங்கிற்கு ஒரு அறிவிப்பு

வேற எதாயாச்சும் எதிர்பார்த்து வந்து இருந்தீங்கனா நான் பொறுப்பு அல்ல:-)

இன்று தமிழ்மணத்தின் அறிவிப்பு பகுதியில் இடம் பெற்றிருந்த
பதிவில் வாசித்த போது என்னுடைய பெயரும் இருந்தது. அங்கே பின்னூட்டமிட வசதியில்லாததால் என் பதிவிலே என் எண்ணத்தை சொல்லிச்விடுகிறேன்.

//தமிழ்மணத்திலே திரட்டப்பட்ட ஒரு பதிவிலே சொல்லப்பட்டதுபோல, தமிழ்மணம் நியோ, பாலச்சந்தர் கணேசன், முத்துக்குமரன், வரனையான் ஆகியோரின் பதிவுகளை நீக்கவோ ஓரம் கட்டவோ எத்தருணத்திலும் முயலவில்லை என்பதைத் தெளிவாக இவ்விடத்திலே தெரிவிக்க விரும்புகிறது. //

நான் எந்த தருணத்திலும் தமிழ்மணத்தால் ஓரங்கட்டப்படுவதாக உணரவில்லை. வலைபதிய தொடங்கிய சில மாதங்களிலேயே நட்சத்திர வாய்ப்பை வழங்கியது தமிழ்மணம்தான் என்பதை இன்றும் நினைவு கூற விரும்புகிறேன்.

பொதுவாக அவதூறுகளை நான் பதிலளிப்பதில்லை என்பதோடு அதற்கு எதிர்வினை புரியாதிருப்பது அதனை நான் நிராகரிக்கிறேன் என்பதால்தான். என் பதிவுகள் விதிகளுக்குட்படாததாக இருந்தால் அதை நீக்க அவர்களுக்கு இருக்கும் உரிமையையும் மதிக்கவே செய்கிறேன்.

என்னுடைய நூறாவது பதிவில் சொன்னது போல் பதிவொழுக்கம் என்பது தனிமனித விடயம். அதற்கு திரட்டிகளோ இன்ன பிற அமைப்புகளோ பொறுப்பாகாது. எப்போதும் போல ''தமிழ்மணத்தில்'' தொடர்கிறேன் என்று தெரிவித்து கொள்கிறேன்.

11 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

பொன்ஸ்~~Poorna said...

// முத்துக்குமரன்//

அது நீங்க இல்லைன்னு நான் நினைச்சேன் ;) :))

குமரன் (Kumaran) said...

இப்பத் தான் தமிழ்மண அறிவிப்பு பதிவைப் படிச்சுட்டு வந்தேன். அதனால நான் என்ன எதிர்பார்த்துக்கிட்டு இந்தப் பதிவுக்குள்ள வந்தேனோ அதைத் தான் நீங்க சொல்லியிருக்கீங்க. :-)

G.Ragavan said...

உங்களது கருத்தைத் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பங்களிப்பு.

luckylook said...

:-))))

தலைவரே....

ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி நம்பளையே சில பேர் கடிச்சி வெச்சிட்டதால வந்த வினை....

எப்போதும் போல பங்களிப்பைத் தொடருங்கள்.....

Anonymous said...

உங்களையல்ல்ல முத்து (தமிழினி) பற்றிச் சொல்ல வந்தார்கள் போலும். இங்கே பாருங்கள்
கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் பின்னூட்டம். விடாது கருப்பு பதிவை கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ் மகேந்திரன் பதிய இருக்கையிலே வீண்தொல்லை வேணாமேயென தமிழ்மணம் யோசிக்கிறதுபோலும்

Anonymous said...

கரெக்ட் லிங்க்
http://kilumathur.blogspot.com/2006/12/blog-post_09.html#116568963652989075

Anonymous said...

I am not sure if Thamizmanam response is due my comment. But I am supposed to clarify my original comment. It was not directed towards current Thamizhmanan.

<< உண்மையில் தமிழ்மணம் மேல் எனக்கு வருத்தமில்லை.
>>
But, I have concrete evidences about the 'tricks' employed by centuries old Fascist Forces,

<< ஆனாலும், இன்னும் ஒருமுறை மேலாதிக்க உத்தியிடைய கோரமுகமும், அதன் இருப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. >>

(not Thamizhmanam, except for the fact they were forced to follow the lead).
<< விடாது கருப்பின் சமீப பதிலடிகளை வரன் கடந்த ஒன்று என பிண்ணனி காரணியாக தமிழ்மணம் நிறுத்தியிருப்பது மிக வலுவான தாங்கியாக இருப்பதால, மேலாதிக்க உத்தியின் நஞ்சு அவரை உசுப்பி விட்டது எனற உண்மை தொய்விழந்து விட்டது.
>>

I am reproducing my comment to avoid any confusions:

அன்பான திராவிட உள்ளங்களே,

விஷம் தோய்ந்த மேலாதிக்க உத்தி எவ்வளவு நளினமாக எல்லா இடங்களிலும் வேர் பரப்பி, தன்னுடைய நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்ளுகிறது என்பதனை இன்னும் ஒருமுறை பார்க்கிறோம்.

இந்த உத்தி ஒரு நேர்க்கோடு போல செவ்வனே அமைந்திருப்பதை தமிழ்மண வரலாற்றை நெடுங்காலமாக அறிபவர்கள் உணர முடியும்.

பெயர் குறிப்படுவது முறையல்ல என்றாலும், சில நேரங்களில், பெரிது வாய்ந்த நன்மையை கருதி அதை செய்ய வேண்டியிருக்கிறது.

நண்பர் பாலசந்தர் கணேசன் அவமானப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தட்டார்.

தோழர் நியோ திட்டமிட்டு கழிக்கப்பட்டார்.

துடிப்பான தமிழர் நண்பர் முத்து (தமிழினி) விரட்டியடிக்கப்பட்டார் (இது குறித்து எனக்கு ஐயப்பாடு உண்டு. அவர் இன்னும் உணர்வோடு இருக்கிறார் என்று நம்புகிறேன்)

இப்போது, செயலாற்றல் மிகுந்த விடாது கருப்பும் பலியாக்கப்பட்டு விட்டார்.

உண்மையில் தமிழ்மணம் மேல் எனக்கு வருத்தமில்லை. விடாது கருப்பின் சமீப பதிலடிகளை வரன் கடந்த ஒன்று என பிண்ணனி காரணியாக தமிழ்மணம் நிறுத்தியிருப்பது மிக வலுவான தாங்கியாக இருப்பதால, மேலாதிக்க உத்தியின் நஞ்சு அவரை உசுப்பி விட்டது எனற உண்மை தொய்விழந்து விட்டது.

ஆனாலும், இன்னும் ஒருமுறை மேலாதிக்க உத்தியிடைய கோரமுகமும், அதன் இருப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எஞ்சியுள்ள திராவிட உணர்வுகளுக்கு சுண்ணாம்பு தடவப்பட்டிருக்கிறது.

சேதுக்கரசி said...

(off-topic) மறுமொழிகளை வாசிக்கும்போது தமிழ் பயணி நாட்காட்டி இடையிடையே வந்து இடையூறு செய்கிறது.

Kuppusamy Chellamuthu said...

நீங்க சொன்ன மாதிரியே தான்.. புது வீடு..புது ........ கலக்கறே முத்துக்குமரன்னு சொல்லலாம்னு வந்தா ஏமாத்திப் புட்டீகளே அப்பு..

SK said...

முத்தான முத்துகுமரனின் பதிவில்லத தமிழ்மணமா!

இதுல பொன்ஸ் வேற வந்து காமெடி பண்றாங்க!
:))

விடாதுகருப்பு said...

பெரிய ஆள்ன்னா நாலு சொல்லடி இருக்கத்தான் செய்யும்.

கவலைப்படாதீங்க சார்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP