ஆகாயத்திற்கு அடுத்தவீடு

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் தமிழ் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான திரு.மு.மேத்தா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

விருது பெற்ற ''ஆகாயத்திற்கு அடுத்த வீடு'' கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை


''கவிதையின் கதை''

அலங்கார வளைவுகளைத்

தாண்டிய பின்னும்

அரங்கிற்குள் நுழையத்

தயங்கி நின்றது கவிதை!

''உன்னைப்பற்றித்தான்

பேசுகிறார்கள்!

உள்ளே போ''

உபசரித்தார் ஒருவர்!

உள்ளே

நிற்கவும் இடமில்லா

நெருக்கடி!

அலட்டிக் கொள்ளத் தெரியாத

மேடைவரை நடந்துபோய்

மீண்டும் திரும்பி

இருக்கை தேடி

ஏமாற்றமடைந்தது!

சாகித்ய மண்டல

சண்ட மாருதங்கள்..

ஞானபீட

வாணவேடிக்கைகள்..

இசங்களைக் கரைத்து

ரசங்களாய் குடித்தவர்கள்..

தமிழ்

செத்துப் போய்விடக்கூடாதே

என்ற

கருணையால்

பேனாவைப் பிடித்திருக்கும்

பிரும்மாக்கள்...

ஒருவர் கூட

கவிதையை

உட்காரச் சொல்லவில்லை!

இடம் தேடும் கவிதையை

ஏறிட்டும் பார்க்கவில்லை!

சுற்றிச் சுற்றிப் பார்த்து

சோர்ந்த கவிதை

அரங்கிலிருந்து

வெளியே வந்தது!

விமர்சனத்தின்

கிழக்கு மேற்கு அறியாத

கிராமத்து ரசிகர் ஒருவர்

கேட்டார்:

''உன்னைப் பற்றித்தான்

விவாதம் நடக்கிறது..

நீயே வெளியேறுவது

நியாயமா?''

கவிதை அவரிடம்

கனிவுடன் உரைத்தது:

''அவர்களின் நோக்கமெல்லாம்

என்னைப் பற்றி

விவாதிப்பது அல்ல..

தம்மைப் பற்றித்

தம்பட்டம் அடிப்பதே!''

5 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Anonymous said...

தன் கவிதைகளிலும் தோற்றத்திலும் எளிமை;அடக்கம் நிரம்பியவர்.
இவ்விருது பெறும் ஐந்தாவது தமிழ்க்கவிஞர். வாழ்த்தி மகிழ்கிறேன்.

I.H

செந்தழல் ரவி said...

http://tvpravi.blogspot.com/2007/01/blog-post.html

பாருங்க இங்கெ....மகாலட்சுமி விஷயம் ஒரு முடிவுக்கு வந்தாச்சு..

வல்லிசிம்ஹன் said...

நன்றி முத்து குமரன்.
நல்லதொரு பொருளுள்ள கவிதையைப் படிக்கக் கொடுத்தற்கு.

bala said...

//''அவர்களின் நோக்கமெல்லாம்

என்னைப் பற்றி

விவாதிப்பது அல்ல..

தம்மைப் பற்றித்

தம்பட்டம் அடிப்பதே//

முத்துகுமரன் அய்யா,

நல்ல கவிதை,ஆனால் பொருட் குற்றம் உள்ள கவிதை.
கவிதை மஞ்சள் துண்டு போட்டிருக்கும்.மேடையில் அதற்கு அரியாசனம் உண்டு.அதனால் தான் கவிஞர்கள் ,கவிதையே மஞ்ச துண்டு போட்டு உட்கார்ந்திருப்பதாக,ஜால்ரா போட்டு ,பிழைப்பை நடுத்துவாங்க.மஞ்சள் துண்டு கவிதையும், வாயெல்லாம் பல்லாக, கொடுக்கப்படும் பட்டங்களை தன்னடக்கத்துடன் வாங்கிக் கொள்ளும்.அது தான் கவிதையின் நிலை.மு. மேத்தா சொல்வது உண்மையான "கவிதை" அல்ல.போலி.

பாலா

தேவ் | Dev said...

:)

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP