மறைந்த நிலா

இரவின் பனி தலைநனைக்க
நின்று கொண்டிருந்தேன்
பேருந்து நிறுத்தமொட்டிய
பூங்காவில் .

இங்குமங்கும்
சிறகடித்துத் திரியும் பட்டாம்பூச்சிகளாக
பல மொழிகளில் மழலைகளின்
இசை மழை.
இதயம் நகராது நிற்க
வந்துவிட்ட கடைசிப் பேருந்தில்
ஏறிக்கொண்டேன்.
ஏதோ யோசனையிலிருந்தவனை
கலைத்துப்போட்டது ஒரு பெரும்சிரிப்பு.

முன் இருக்கையில்
காதலன் வேண்டாமென்று
மறுத்தும்
விழுந்துவிட்ட தூசியை
ஊதி எடுத்துக்கொண்டிருந்தாள்
காதலி


ஒரு புன்னகை உதிர்த்து
இருக்கையில் சாய்ந்து கொண்டேன்
வானில் மேகத்திற்குள்
தன்னை மறைந்து கொண்டது
நிலா

13 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Anonymous said...

HELLO SIR,
very crisp lines.sweet and short which shows the loneliness of a romantic heart and matured mind....nice.
MOOKAMBHIKA

நிலவு நண்பன் said...

நல்ல வரிகள் முத்துக்குமரன்... வாசித்து முடித்ததும் ஏதோ மனசை செய்கிறது

மிதக்கும் வெளி said...

/முன் இருக்கையில்
காதலன் வேண்டாமென்று
மறுத்தும்
விழுந்துவிட்ட தூசியை
ஊதி எடுத்துக்கொண்டிருந்தாள்
காதலி
/

நல்ல பதிவு.

வெற்றி said...

முத்துகுமரன்,
அருமையான கவிதை.

/* முன் இருக்கையில்
காதலன் வேண்டாமென்று
மறுத்தும்
விழுந்துவிட்ட தூசியை
ஊதி எடுத்துக்கொண்டிருந்தாள்
காதலி */

/*ஒரு புன்னகை உதிர்த்து
இருக்கையில் சாய்ந்து கொண்டேன்
வானில் மேகத்திற்குள்
தன்னை மறைந்து கொண்டது
நிலா*/

அருமையான கற்பனை. படிக்கச் சுவைத்திடும் அழகு தமிழ். ஆகா, நல்ல ஒரு கவிதையைப் படித்த திருப்தி.மிக்க நன்றி.

bala said...

முத்துகுமரன் அய்யா,

மிகவும் சிறப்பான வரிகள்.தமிழ் கலாசாரத்தில் காதல் எவ்வளவு சிறப்பானதாக கருதப்படுகிறது என்பதை,இயற்க்கையிலேயே நாணம் உடைய தமிழ் நங்கை,காதலனுடைய கண்ணுக்கு தூசினால் பாதகம் வந்த போது,நாணத்தை மறந்து,பதறிப் போவதை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.காதலிக்கு பதிலாக நிலா மடந்தை நாணுவதாக காண்பித்துள்ளீர்கள்.அது சரி,அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?கிண்டலா?

பாலா

தேவ் | Dev said...

முத்து ரசிக்க வைத்த வரிகள்.. உங்கள் அனுபவத்தை வரிகளின் வாசிப்பின் வாசிப்பவரையும் உணர வைத்து விட்டீர்கள்

முத்துகுமரன் said...

கவிதையினை சரியாக உள்வாக்ன்கிய மூகாம்பிகா உங்கள் வருகைக்கு நன்றி.

தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

முத்துகுமரன் said...

மனதை என்ன செய்தது என்று சொல்லுங்க நிலவு நண்பன்.

முத்துகுமரன் said...

மிதக்கும் வெளி உங்கள் முதல் வருகைக்கு நன்றி. உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் சொல்லுங்கள்

முத்துகுமரன் said...

அன்பான விமர்சனத்திற்கு நன்றி வெற்றி.

முத்துகுமரன் said...

பாலா நாமும் இணைந்து ரசிக்க உதவிய இந்த கவிதைக்கு நன்றி. உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கும் நன்றி.

//இயற்க்கையிலேயே நாணம் உடைய தமிழ் நங்கை,காதலனுடைய கண்ணுக்கு தூசினால் பாதகம் வந்த போது,நாணத்தை மறந்து,பதறிப் போவதை அருமையாக சொல்லியுள்ளீர்கள்//

அந்த காதலர்கள் தமிழர்கள் அல்ல. பிலிப்ப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். காதல் உலகப்பொதுமறை ஆயிற்றே. அதனால்தான் பிலிப்பைன்ஸ் என்று கவிதையில் குறிப்பிடவில்லை.

//காதலிக்கு பதிலாக நிலா மடந்தை நாணுவதாக காண்பித்துள்ளீர்கள்.அது சரி,அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்?கிண்டலா?//

இந்த வினாவிற்கான பதில் இந்த கவிதையை வகைப்படுத்தியிருப்பதிலேயே தெரியப்படுத்தியிருக்கிறேன். அது தனிமை.

முத்துகுமரன் said...

ரசனையான பின்னூட்டத்திற்கு நன்றி தேவ்.

பட்டணத்து ராசா said...

அருமை

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP