சாமி வரும்


சூத்திரன் வீட்டுக்கும்

சாமி வரும்

அரசு அதிகாரம் அவனிடமிருந்தால்...

18 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

G.Ragavan said...

வந்தது சாமியா ஆசாமியான்னே கேள்வி நெறைய இருக்கு. ஆனா கருணாநிதி இவரை நல்லவர்னு ஏத்துக்கிட்டதுதான் உச்சகட்ட நகைச்சுவை. பாவம். அவருக்கும் வயசாயிருச்சுல்ல. முந்தியெல்லாம் நகைச்சுவையாப் பேசுறதுல ஜெயலலிதாவை மிஞ்ச ஆளில்லாம இருந்தது. நடுவுல காங்கிரசு, வைகோ, ராமதாசுன்னு நெறையப் பேரு முயற்சி செஞ்சி பாத்தாங்க. ஆனா ஜெயலலிதாவுக்குச் சரியான போட்டி கருணாநிதிதான்னு நிரூபிச்சிட்டாருங்க. இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன கூட்டோ!!!! கால்ல விழுகிற அந்த அம்மாகிட்ட அவர் சுயமரியாதைன்னா என்னன்னும் சொல்லியிருக்கலாம். பெரியவர்கள் என்று நம்புகிறவர்கள் காலில் விழுவது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால்...ஊருக்கு உபதேசம் செய்து விட்டு....விடுங்கள். ஒரு அரசியல்வாதியிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்றெல்லாம் கணக்கு இருக்கிறதே.

மரைக்காயர் said...

நச்..!

BadNewsIndia said...

தல கீழ இல்ல சொல்லி இருக்கீங்க.

பகுத்தறிவாவது மண்ணாவது, கோடிகள் கொட்டிக் கொடுத்தால்..

என்றல்லவா இருந்திருக்க வேண்டும் ?

:)

லொடுக்கு said...

கொடுமை போங்க!

பரஞ்சோதி said...

அப்படி போடுங்க அருவாளை :)

Hariharan # 26491540 said...

பகுத்தறிவும், சுயமரியாதையும் லாபகரமாக எடைக்கு எடை விற்கப்பட்டிருக்கின்றது!

நடந்திருப்பது ஈவெராசாமி குத்தமுங்கோ!

இதிலிருந்து இன்னும் தெளிவாகும் விசயம் தமிழகத்து அரசியலில் பகுத்தறிவு, சுயமரியாதை என்பவை வெட்டியான பம்மாது உணர்வுகள் தலைவன் நினைத்தால் அது விற்பனை செய்யப்படும் தேர்தல் காலப் பொருள் என்பதே!

கருணாநிதி பாராட்டப் படவேண்டியவர்.
தனது அக்மார்க் திரா"விட"க் கொள்கைகளுக்கு தானே சொ.செ.சூ

கூடுதல் தகவல் பகுத்தறிவு, சுயமரியாதைப் புயல் தயாநிதிக்கும், மந்திரி துரைமுருகனுக்கும் மாயமோதிரம் பரிசு தந்ததாமே பாபாசாமி

கோவி.கண்ணன் said...

அண்ணலும் நோக்கினார் அவரும் நோக்கினார் !
:)))

Anonymous said...

Muthu,
Saibaba is also a Sudra, Kondaraju.
- Another Tamil speaking Kondaraju

Anonymous said...

கூடுதல் தகவல் பகுத்தறிவு, சுயமரியாதைப் புயல் தயாநிதிக்கும், மந்திரி துரைமுருகனுக்கும் மாயமோதிரம் பரிசு தந்ததாமே பாபாசாமி
Was Veeramani absent or did he get a ring in absentia.

Krishnan Konar said...

"தல கீழ இல்ல சொல்லி இருக்கீங்க.

பகுத்தறிவாவது மண்ணாவது, கோடிகள் கொட்டிக் கொடுத்தால்..

என்றல்லவா இருந்திருக்க வேண்டும் ?

:)"

ரிபீட்டு

கிருஷ்ணன் கோனார்

Hariharan # 26491540 said...

//சூத்திரன் வீட்டுக்கும்
சாமி வரும்
அரசு அதிகாரம் அவனிடமிருந்தால்//

முத்துக்குமரன்,

தங்கள் கவிதையில் வரலாற்றுப் பொருள் குற்றம் இருக்கிறதே!

நீங்கள் குறிப்பிட்ட சூத்திரன் கையில் அரசும், அதிகாரமும் கால்நூற்றாண்டாக இருந்து வருகிறது சாமிக்குத் தெரிஞ்சது தானே?

கால்நூற்றாண்டாக இல்லாதது, தற்போது கால்மூட்டு கழண்டு வயது மூப்படைந்தநிலையில் இருக்கும் ஆசாமி கருணாநிதிக்கு, சாமி பாபாவை ஆத்துக்கு அழைச்சு அகமுடையாளை நமஸ்கரிக்கச்செய்து, பேராண்டிக்கு மோதிரம் வாங்கித்தந்தது என்பதெல்லாம், கோபாலபுரத்துக்குச் பாபாசாமியா சேமியாப்பாயசம் சாப்பிட வந்தமாதிரி தெரியக்காணோமே? :-)))

arunagiri said...

//சூத்திரன் வீட்டுக்கும்
சாமி வரும்
அரசு அதிகாரம் அவனிடமிருந்தால்//

இப்படியும் சொல்லலாம்:

அதிகாரம் இருந்தாலும்
ஆன்மீகம் வேண்டிவரும்
ஆட்சியில் உதவும் என்றால்

சதிராட்டம் போட்டாலும்
விதியாட்டம் போடுகையில்
வீழ்ந்திடும் சாமி முன்னால்

சாத்திர எதிர்ப்புகளும்
சாமியிடம் சரணடையும்
சாவின்மேல் அச்சம்வந்தால்

கடவுளே பக்தனிடம்
கைகட்டும் நாடிதனில்
கவிதையிது தேவைதானா?

முற்போக்கு வேஷத்தில்
மூதாட்டி ஒருவரது
பக்தியுமே கேலிதானா?

முத்துகுமரன் said...

ராகவன் பாம்பின் கால் பாம்பறியும். :-). அரசியல்வாதி அரசு இயலின் முக்கியத்துவத்தை வெளியே தெரியவைத்திருக்கிறார். அந்த வகையில் கலைஞருக்கு பாரட்டுகளே.

முத்துகுமரன் said...

மரைக்காயர் நன்றி.

நன்றி பரஞ்சோதி வருகைப் பதிவிற்கும் போட்டது அருவாளால் என்று சொன்னதற்கும்

முத்துகுமரன் said...

//பகுத்தறிவாவது மண்ணாவது, கோடிகள் கொட்டிக் கொடுத்தால்..//

நாடி வந்தது ''கொ''ட்டிக் கொடுத்த கொடைவள்ளல் ஏழைக் கொட்டடிக்கு போகுமா?

நான் நேராகாத்தான் சொல்லியிருக்கிறேன். தலை கீழாக இறங்கியிருப்பதே மாற்றத்தை சொல்லுகிறது.
ரிப்பீட்டு போட்ட அனானி - உங்களுக்கு பதிலும் ரிப்பீட்டே

குமரன் (Kumaran) said...

இந்தக் கவிதையும் அதற்கு இராகவனின் பின்னூட்டமும் நல்ல நகைச்சுவை. நன்கு சிரித்தேன். :-))

bala said...

//நடந்திருப்பது ஈவெராசாமி குத்தமுங்கோ!//

ஹரிஹரன் அய்யா,

"ஈ.வே.ராமசாமி குத்தமுங்கோ" ,செம குத்துங்கோ.

பாலா

வரவனையான் said...

அந்த மகர நெடுங்குழைக்காதன் மேல சத்தியமான வார்த்தைகள்

:))))))

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP