பெண்களுடமையாக

முக்தி பெற வந்து
சதைகளை பார்த்து
மூர்ச்சையாகிப் போகும்
ஆண்களைத் துரத்தி
ஆக்கிடுவோம் ஆலயங்களை
பெண்களுடைமையாக

4 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Hariharan # 26491540 said...

பெண்களுடமையான
உடை சதைகளை
காண என்றே
வரும் போக்கிரிகளது
செயல்கண்டு மெய்பக்தர்கள்
மூர்ச்சையாகுமிடமாக
ஆலயம் அதன் லயமிழந்து
"ஆ"லயம் ஆகிடாதோ

கோவில் பெண்களுடமையாக்குமுன்
நாடாளும் கோ முன்மாதிரியாய்
தான் இருந்து சட்டமன்றத்தில் பாவாடை/நாடா சிலேடைப் பேச்சு தவிர்த்து சமூகத்தில் ஆண்/பெண் பேதம் களைவதல்லவோ

Anonymous said...

வேத நெறிமுறை என்பார்..
உபநிட ஆகமமென்பார் என்பார்..
காட்டுமிராண்டி என்பார்..
தூற்றுகிறார் என்பார்..
வஞ்சனை நெஞ்சமும்...
கொடுங்கோல் மனமும்..
அருவெறுக்கும் புத்தியும்..
ஆதிக்கவெறி சிந்தனையும்..
கொண்ட மனிதர்...

இவர் ஏமாற்றாத ஆட்களில்லை
செய்யாத பாவங்களில்லை
புரியாத கொடுமைகளில்லை
அவனினியிலே

எரிதழல் கொண்டெரித்தால்
எரியும் நெருப்பும் அழுகும்
இந்த இழி பிறவியை
தீண்டினேனேயென்று...

G.Ragavan said...

திருக்கோயிலில்
பெண்ணைக் காண
அவள் கண்ணைக் காண
வருகின்றவன்
பூசாரிப் பெண்ணை மட்டுமா
கண் கொண்டு பார்ப்பான்?
எப்பெண்ணாயினும்
எட்டித்தான் காண்பான்

கோ-மாறி நோய்களும் நோயே
பெண்ணை கோயில் பூசையில் மறுக்கும்
நா-மாறி நோய்களும் நோயே

Anonymous said...

vanakkam
Nice, real lines ..poet's heart bursting words say his fantastic mind throbbing for ladies and this poem is a 'chaataiadi'for all dirty minded guys ,who never ever mind or read ,a lady's heart-throb.REALLY SUPERB!!!!!

SOWPARNIKA

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP