மகாத்மாவின் அரசியல்

சாதி மதத்தோடு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாதது. சாதி ஒரு நடைமுறை வழக்கமே. சாதியின் மூலம் எதுவென்று எனக்குத் தெரியாது.
என் ஆன்மீக வேட்கையைத் தணித்துக்கொள்ள சாதியின் மூலத்தை நான் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் சாதி ஆன்மிக வளர்ச்சிக்கும், தேச வளர்ச்சிக்கும் கேடு விளைவிக்க கூடியது என்பது எனக்குத் தெரியும். வர்ணம், ஆசிரமம் ஆகிய நிறுவனங்கள் சாதிகளோடு சிறிதும் தொடர்பு இல்லாதவை.

வருணச்சட்டம் நமக்குக் கற்பிப்பது என்ன?

பரம்பரைத் தொழிலை மேற்கொண்டு ஒவ்வொருவருவரும் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வேண்டும் என்பதுதானே. வர்ணச்சட்டம் நம் உரிமைகள் என்ன என்பதைக் கூறவில்லை. கடமை என்ன என்பதையே கூறுகிறது. மனித குலத்திற்கு நன்மை செய்வதற்கான தொழில்களைப்பற்றியே அது பேசுகிறது. வேறு எதையும் அல்ல. மிகவும் உயர்ந்த தொழில் அல்லது மிகவும் தாழ்ந்த தொழில் என்று எந்த தொழிலும் இல்லை என்பதும் இதனால் விளங்கும்.

எல்லாத் தொழில்களும் நல்லவைதான். சட்டத்திற்கு உட்பட்டவைதான். ''எல்லா வகையிலும் சம அந்தஸ்து கொண்டவைதான். ஆன்மீக குருவாக இருப்பது என்னும் பிராமணனின் தொழிலும் கோட்டி ஒருவனின் தொழிலும் சமமானவையே. தத்தமக்குரிய கடமைகளைபிராமணனும் கோட்டியும் சரிவரச் செய்து ஒரு காலத்தில் கடவுளின் கண்களுக்கு சமமான சிறப்பு உடையதாகவே காட்சியளித்தது. மனிதனிடமுருந்தும் ஒரே மாதிரியான ஊதியத்தையே பெற்று வந்ததாக தெரிகிறது.பிராமணன் ஆனாலும் சரி கோட்டி ஆனாலும் சரி வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்வதற்காகவே அவர்கள் அத்தொழிலை மேற்கொண்டார்கள். வேறு எதற்காகவும் இல்லை. இன்றுங்கூட கிராமங்களில் இந்த சட்டம் சிறப்பான முறையிலே செயல்பட்டு வருகிறது என்பதற்கு சில அடையாளங்கள் காணப்படுகின்றன. 600 பேரே உள்ள சீகன் என்ற ஊரில் பிராமணர்கள் உள்ளிட்ட பலவேறு தொழிலாளிகளின் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.


சீரழிந்த இந்தக்காலத்திலும் நான் உண்மையான பிராமணர்களைப் பார்க்கிறேன். அந்தப் பிராமணர்கள் அவர்களுக்குப் பிறர் மனமுவந்து இடும்பிச்சையால் உயிர்வாழ்ந்து வருகிறார்கள். தங்களுடைய ஆன்மிக அறிவு, அனுபவம் என்கிற அரிய சொத்தை மனமுவந்து பிறருக்கு வழங்குகிறார்கள். தாங்கள் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தை சேர்ந்தவர்கள் எனக்கூறிக் கொண்டு அதே நேரத்தில் அந்த வர்ணத்திற்குரிய ஒரே ஒரு செயல்பாட்டு விதியையும் வெளிப்படையாக மீறி நடக்கிற மனிதர்களின் வாழ்க்கையில் காணப்படும் கேலிக்கூத்துகளை கொண்டு வர்ண சட்டத்தை ஆராய முற்படுவது பிழையானது. முற்றிலும் முறையற்றது. மற்ற எந்த வர்ணத்தை விடவும் தங்கள் வர்ணமே உயர்ந்த அந்தஸ்து கொண்ட வருணம் என்று எந்த வருணத்தாரும் உரிமை கொண்டாடுதல் கூடாது. அவ்வாறு செய்வது வர்ணச் சட்டத்தை மறுப்பதே ஆகும்.


தீண்டாமையை நம்பச் சொல்கிற எந்த அம்சமும் வருணச் சட்டத்தில் இல்லை. ( சத்தியமே கடவுள், அகிம்சையே மனித குலத்தின் சாரம் என்பது இந்து மதத்தின் சாராம்சம்)

டாக்டர் அம்பேத்கார் மட்டும் அல்ல இந்து மதம் பற்றி நான் தந்திருக்கிற இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து இன்னும் பல தலைவர்கள் எதிர்வாதம் புரிவார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இவர்களின் எதிர்வாதத்தால் என் நிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது. இந்த விளக்கத்தின் படிதான் கடந்த 50ஆண்டுகளாக நான் வாழ்ந்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு என் வாழ்க்கையை அந்த விளக்கத்திற்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன்.

-''மகாத்மா'' காந்தி - 'ஹரிஜன்', ஜூலை 18, 1936. *

விடுதலை கோரி
போராட்டம்- ஆங்கிலேயனிடம்
தன்னைத் தக்கவைக்க
அடமானம் ஆரியனிடம்

ஹே ராம்!!! *

17 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

வடுவூர் குமார் said...

முத்துகுமரன்
என்ன ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் தெளிவு நம் தாத்தாவுக்கு.
இழக்ககூடாத பலவற்றில் முன்கூட்டியே இழந்தது, இவரை-பாரதம்.
தொகுத்து,மொழிமாற்றம் செய்து போட்டதற்கு நன்றி.

Anonymous said...

வடுவூர் குமாருக்கு உ.கு பிரியலையா?
அல்லது அவரது பின்னூட்டதடதிலும் உ.கு உள்ளதா?

Anonymous said...

//என்ன ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் தெளிவு நம் தாத்தாவுக்கு.
//

:-)

வரவனையான் said...

இவ்வளவு தூரம் சனாதானத்திற்கு ஜால்ரா அடித்த காந்தியையே தேவையில்லை என்ற உடனே சுட்டுக்கொன்றது பார்ப்பனியம் - சனாதானதிற்கும் வருனபேததிற்கும் துணை நிற்கும் யாருக்கும் காந்தியின் நிலைதான் என்பது உண்மை


நல்ல சவுக்கடி முத்து வாழ்த்துக்கள்

சுந்தர். said...

//இவ்வளவு தூரம் சனாதானத்திற்கு ஜால்ரா அடித்த காந்தியையே தேவையில்லை என்ற உடனே சுட்டுக்கொன்றது பார்ப்பனியம் -//

உண்மை. அவர் எப்போது தேவையற்றவரானார் என்பதில் இருக்கின்றன ஆதிக்க முகங்களின் அரசியலும் குயுக்திகளும்.

bala said...

முத்துகுமரன் அய்யா ,

வரவனையான் உளறியது உங்களுக்கு புரிந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி அய்யா
காந்தி சொன்னதில் என்னங்கய்யா தவறு இருக்கிறது


பாலா

bala said...

முத்துக்குமரன் அய்யா.

காந்தியை சுட்டுக் கொண்டவன் பிராமணன்னு தெரிஞ்சும் எதுக்கு அய்யா பெரியார் அய்யா அதை தமிழ்நாட்டிலே மறைச்சிட்டார்.

பெரியார் அய்யாவும் ஆரியத்துக்கு அடிமை ஆயிட்டாரா அய்யா?

சிநேகிதன் said...

காந்தியடிகள் துளுக்கர்களுக்கு ஆதரவாக பேசியதால் அவரை சுட்டு கொன்றது ஒரு பார்ப்பனன். இதை பார்ப்பனர்கள் எல்லோரும் இன்றைக்கு பெருமையாகவே நினைக்கிறோம். இதை மறைக்கவும் நாங்கள் விரும்புவதில்லை. தேசத்தை பார்ப்பனர்கள் காத்தார்கள் என்று சொல்லி கொள்வதில் எங்களுக்கு பெருமையே.

rajavanaj said...

//''எல்லா வகையிலும் சம அந்தஸ்து கொண்டவைதான். ஆன்மீக குருவாக இருப்பது என்னும் பிராமணனின் தொழிலும் கோட்டி ஒருவனின் தொழிலும் சமமானவையே. //

வரலாற்றில் எப்போதாவது இவர்களிருவரும் தங்கள் தொழில்களை தங்களுக்குள் மாற்றிக் கொண்டிருக்கிறார்களா?????
என்ன ஒரு அயோக்கியத்தனமான கருத்துக்கள்..

முத்து, காந்தியினுடைய பல கருத்துக்களைத் தான் இன்று இந்துத்துவ சக்திகள் பிரதிபலிக்கிறார்கள்.

அதே இந்து ராஷ்ட்ரம், அதே ராம ராஜ்ஜியக் கனவு.. என்ன அவர் சொல்லிய விதம் வேறு இவர்கள் சொல்லும் விதம் வேறு அவ்வளவு தான். காந்தி இந்துத்துவ சக்திகளால் கொல்லப்பட்டதும் கூட ஒன்றும் ஆச்சர்யமானதில்லை - வேலை முடிந்தால் கழட்டி விடுவது பார்ப்பன மனோபாவம் தான்.

காந்தியின் தோலை உரித்துக் காட்டியதில் அம்பேத்கரின் எழுத்துக்களுக்கு சிறப்பான இடம் உண்டு.

தொடர்ந்து இது போன்ற புனித பிம்பங்களை அம்பலப் படுத்தும் விதமான பதிவுகளை இடுமாறு வேண்டுகிறேன்

வாழ்த்துக்கள்

ராஜாவனஜ்

Hariharan # 26491540 said...

//வரலாற்றில் எப்போதாவது இவர்களிருவரும் தங்கள் தொழில்களை தங்களுக்குள் மாற்றிக் கொண்டிருக்கிறார்களா?????
என்ன ஒரு அயோக்கியத்தனமான கருத்துக்கள்..//

ஏனில்லை ராஜாவனஜ்,

பிராமணக் குடும்பத்தில் பிறந்தாலும் ஷத்ரிய போரிடுதல்-வைசிய பொருளீட்டுதல் குணமோங்கியதால், வீட்டார் எவ்வளவு வற்புறுத்தியும் ஆசிரியராகாமல் எனது சுபாவப்படி 52 டிகிரி வெய்யிலில் உழைத்து பொருளீட்ட என வந்திருக்கும் என்மாதிரியானவர்களைப் பாருங்கள்.

வரலாற்றை ஏன் பக்கத்திலேயே என்மாதிரி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். உங்களுக்குக் கண் இருந்தாலும் அரசியல், அதிகாரம்,ஆட்சி என்பதற்காக பார்க்க மறுக்கின்றீர்கள்.

சாத்வீக பிராமண குணம் என்பது எல்லோர்க்கும் இருந்திடாது அது வளர்த்தெடுக்கப்படவேண்டும்.

நான் சாத்வீகமாக மாற வேதநெறிப்படி வாழ முயற்சிக்கிறேன்.

செந்தில் குமரன் said...

காந்தியும் பல பழமைவாத கொள்கைகளில் ஊறி இருந்தார் என்பதை தெளிவுபடுத்துகிறது இந்தப் பதிவு.
///
தன்னைத் தக்கவைக்க
அடமானம் ஆரியனிடம்
///
இந்தப் பதிவைப் படித்துப் பார்த்தால் உண்மையோ என்று தோன்றினாலும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இதே ஆரியர்களைத்தான் எதிர்த்தார் என்பதும் உண்மை.

காந்தி ஒரு பெர்பெக்ட் மனிதர் இல்லை ஆனால் யார் தான் பெர்பெக்ட்?

ஹரிஹரன் எதிராளியின் கண் நொள்ளையாகப் போகட்டும், அவன் குடும்பம் அழிந்து போகட்டும் என்று சொல்லும் வேதங்கள்படியா சாத்வீகமாய் இருக்கப் போறீங்க? சாத்வீகம் என்றால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். உங்க ஆட்கள் மூலமாகவே நீங்களே உங்களை உயர்வாக எழுதி நாங்கள் மட்டுமே உயர்வானவர்கள் அதனால் உயர்வானவர்களின் உயிர்களுக்கு மட்டுமே அன்பு செலுத்துவதன் மூலம் சாத்வீகனாகிறேன் என்று சொல்லக் கூடாது.

ஸ்மைலி போட்டுக்கிறேன் :-))))).

Hariharan # 26491540 said...

//ஹரிஹரன் எதிராளியின் கண் நொள்ளையாகப் போகட்டும், அவன் குடும்பம் அழிந்து போகட்டும் என்று சொல்லும் வேதங்கள்படியா சாத்வீகமாய் இருக்கப் போறீங்க?//

இப்படி எந்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது செந்தில்குமரன்?

//சாத்வீகம் என்றால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும். உங்க ஆட்கள் மூலமாகவே நீங்களே உங்களை உயர்வாக எழுதி நாங்கள் மட்டுமே உயர்வானவர்கள் அதனால் உயர்வானவர்களின் உயிர்களுக்கு மட்டுமே அன்பு செலுத்துவதன் மூலம் சாத்வீகனாகிறேன் என்று சொல்லக் கூடாது.//

கி.கி (கிழிஞ்சுது கிருஷ்ணகிரி)
தமிழகத்தில் உரத்துச் சொல்லப்படும் கோயபல்ஸ் பிரச்சாரத்தினை எதிரொலிக்கின்றீர்கள்.

நீங்கள் என்னைப் பழித்துச் சொன்னாலும் நான் சாத்வீகனாக அமைதி காக்கிறேன் :-))

செந்தில் குமரன் said...

ஹரிஹரன் அது போல வேதங்களில் இல்லைன்னு சொல்லப் போறீங்களா?

உங்களோட வேத விசாரம் செய்ய எனக்கு விருப்பம் இல்லை.
///
நீங்கள் என்னைப் பழித்துச் சொன்னாலும் நான் சாத்வீகனாக அமைதி காக்கிறேன் :-))
///
:-))))

பகுத்து அறிந்தவன் said...

//வரலாற்றில் எப்போதாவது இவர்களிருவரும் தங்கள் தொழில்களை தங்களுக்குள் மாற்றிக் கொண்டிருக்கிறார்களா?????
என்ன ஒரு அயோக்கியத்தனமான கருத்துக்கள் //

rajavanaj ஏன் நீங்க அந்த வரலாறு படைக்கலாமே. உங்க Linux admin தொழிலை ஒரு கோட்டி ஒருவனுக்கு கொடுத்துவிட்டு, நீங்க அந்த தொழிலை செய்து வரலாறு படையுங்க, யாராவது எதிர்த்த என்கிட்ட சொல்லுமா அவனை பிச்சுப்புட்டேன்ங்கிறேன் :))

Anonymous said...

Why you oppose Brahmins and their duties?can you all opposites be happy if all Brahmins are dead in this world?..it is better to kill them than to seduce them in this way...SORRY...NENJAM PORUKUTHILAYAE....

Muse (# 5279076) said...

முத்துகுமரன்,

தங்களின் கருத்துக்களை ஆமோதிக்கிறேன்.

வேதங்கள் சொல்லும் வர்ண தர்மமானது குணத்தின் தன்மையில் மட்டுமே அமைவது. பிறப்பின் தன்மையில் அமைவது இல்லை. வேதங்கள் பற்றிய லேசான புரிதல் உள்ளோருக்கும் இது தெள்ளெனத் தெரியும்.

இருப்பினும் காந்தி வர்ணத்தை பிறப்பின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்கின்ற வகையில் தன் நடவடிக்கைகளை அமைத்தார். இதற்குக் காரணம் அவரது அறியாமை என்று விட்டுவிடுதல் இயலாது. வினோபா பாவே போன்ற பாண்டிதர்கள் அருகிருந்தும் அவருக்கு இந்த விஷயத்தில் ஒரு மழுப்பலான போக்கு இருந்தது போன்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. கொள்கை அடிப்படையில் அவர் வர்ண தர்மம் குணத்தின் அடிப்படை என்று கூறினாலும், அவரது செயல்கள் பிறப்பினடிப்படையில் அமைந்து தொலைத்துவிட்ட சமுதாய அவலத்தை அவ்வளவு கடினமாக எதிர்க்கவில்லை. ஒருவேளை நேர்மறை நடவடிக்கைகளான ஹரிஜன முன்னேற்றம், கலப்புத் திருமணம் போன்றவை இந்த நிலையை மாற்றிவிடும் என்று அவர் அவதானித்திருக்கலாம்.

இந்த மென்மை போக்கிற்கு அவரது மனப்போக்கை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவர் எக்காலத்தும் பலம்பெற்றுவிட்ட கருதுகோள்களை வன்மையாக எதிர்க்கவில்லை. அதற்குப் பதிலாக அவற்றை ஆதரிப்பதன் மூலமும், உதவி செய்வதன்மூலமும் அந்த கருதுகொள்கள் பற்றிய புரிதலை மக்கள் மனத்தில் ஏற்படுத்திவிடலாம் என்று நம்பினார்.

அந்த வகையில்தான் அவரது ஆங்கிலேய எதிர்ப்பு, தீவிரவாத இஸ்லாத்திற்கான ஆதரவு, பிறப்பினடிப்படையில் அமைந்துவிட்ட வர்ண பேத ஆதரவு ஆகியவற்றை புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறின்றி நமது சொந்த கருத்துப் பெட்டிக்குள் (அது ஹிந்துத்துவாவாகவோ, கம்யூனிஸமாகவோ, அல்லது மதவெறிவாதமாகவோ இருக்கலாம்) காந்தியை திணிக்க முயல்வது எந்தவித புரிதலும் இன்றி ஒரு விஷயத்தைப் பற்றிய முன்முடிவிற்கு இட்டுச் சென்றுவிடும்.

அந்த வகையில் காந்தியினுடைய பார்வை தவறான விஷயங்களை ஆதரிப்பதன்மூலம் திருத்திவிடலாம் என்கின்ற ஒரு கருத்தின் அடிப்படையில் எழும்பியது. மற்ற எல்லா விஷயங்களையும் இந்த ஒரு தத்துவத்தின்மீது எழுப்ப அவர் முயன்றார். இந்த கருத்தின் அடிப்படையில் அமைந்த எந்த விஷயங்களும் வெற்றி பெறவில்லை. இந்த கருத்தின் அடிப்படையில் அமையாது அவர் செய்த மற்ற விஷயங்கள் மிக்க தொலைநோக்குப் பார்வையும், நல்ல புரிதலும் கொண்டவை. இதை மறுக்க இயலாது.

அவர் இந்தியாவின் மிகச் சிறந்த தவப் புதல்வர்களுள் ஒருவர். ஆயினும், அண்ணல் அம்பேத்காரிடம் இருந்த கருத்துத் தெளிவும், நடைமுறை புரிதலும் அவரிடம் இல்லை. எல்லா வகையிலும் அண்ணல் அம்பேத்கார் சிறந்து விளங்குகின்றார் - ஒன்றே ஒன்றைத் தவிர. அது, அவர் காந்தியைப் போல தற்கொலை செய்துகொண்டுவிடுவேன் என்று பயமுறுத்தி பயமுறுத்தி காரியம் சாதிக்காமல் போனது மட்டுமே.

தலித்துக்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்கின்ற அண்ணல் அம்பேத்காரின் வேண்டுதலை எதிர்த்து காந்தி தனது தற்கொலை மிரட்டலை ஆரம்பித்தார். அப்படி காந்தி இறந்தால் அந்த கொலைப்பழி அம்பேத்காரின்மேல் விழும். இதனால் நன்மை எதுவும் ஏற்பட்டும் விடாது. அதனால் வேறு வழியின்றி அண்ணல் அம்பேத்காரும் விட்டுக்கொடுத்துவிட்டார். அதற்குப் பதிலாக காந்திக்கு பக்கத்தில் இன்னொரு கட்டிலை போட்டுக்கொண்டு அம்பேத்கார் தானும் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கலாம். அதற்குத் தேவையான சிறுபிள்ளைத்தனமான பிடிவாதப் போக்கு அம்பேத்காரிடம் இல்லாததால் காந்தியின் வெற்றி நியாயத்தின் வெற்றியாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்த சிறுபிள்ளைத்தனமான பிற்போகு ஜாதி போக்கை அம்பேத்கார் பார்ப்பனீயம் என்கின்ற வார்த்தைக்குள் அடக்கி எதிர்த்தார்.

அந்த வகையில் அவர் ஒரு சிறந்த ஹிந்துத்துவவாதியே.

செந்தில் குமரன் said...

Museன் புரிதலை எவ்வாறு பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை. மிக சிறப்பாக அடிப்படையான காந்தீயக் கொள்கைகளை சிறப்பாக விளக்கி இருக்கிறார்.

The Last temptation of christ படத்தில் ஜூதாஸீம், ஜான் தி பாப்டிஸ்டும் புரட்சியாளர்களாக காட்டப்பட்டிருப்பர். அந்தப் படத்தில் ஜூதாஸ் கிறிஸ்துவிடம் சொல்லுவார் புரட்சி மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று. கிறிஸ்து அதற்கு பதிலளிப்பார் புரட்சி செய்து இந்த ரோமானியர்களுக்கு பதில் உன்னால் ஆதரிக்கப்படும் தலைவருக்கு அதிகாரத்தைக் கொடுக்கலாம். ஆனால் அது ஒரு சர்வாதிகாரியை இறக்கி வைத்து விட்டு மற்றொரு சர்வாதிகாரியை அரணில் வைப்பது போலத்தான் இருக்கும்.

Muse சொல்வது போல தவறை தவறால் திருத்த முடியாது ஒரு தவறை சரி செய்ய வேண்டுமெனில் அதனை சரியான முறையில் சென்றே சரி செய்ய வேண்டும் என்பதே காந்தி கொள்கையாக இருந்தது.

ஆனால் இதனை புரிந்து கொள்வோர் மிகச் சிலர். மேலும் உடனடி தீர்வு கிடைக்காததால் Fast food யுகத்தில் இதனை யாரும் விரும்புவதுமில்லை, இதனை புரிந்து கொள்ள முயற்சிப்பதுமில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் இது மிக மோசமான ஒன்றாகவே இது வெளிப்படும் அதற்காக பல விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால் அவருடைய அடிப்படை அன்பு அகிம்சை மூலமாகவும் புரிதல் அறிதல் அறிய வைத்தல் மூலமாகவும் எதனையும் சரி செய்ய வேண்டும் என்ற அவருடைய கொள்கைகள் எவ்வளவு தேவை எவ்வளவு அவசியம் என்பதை இன்றைய உலகு சென்று கொண்டிருக்கும் போக்கில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

மீண்டும் முன் சொன்ன ஒரு கருத்தை முன் வைக்கிறேன் காந்தி ஒரு பெர்பெக்ட் மனிதர் இல்லை ஆனால் யார் தான் பெர்பெக்ட்?

இவ்வளவு தெளிவாக பேசும் Muse கொண்டிருக்கும் முஸ்லீம் வெறுப்பு, பார்ப்பனீய தவறுகளை மூடி மறைக்கும் விதமாக பேசுவதைப் பார்க்கும் சமயம் வேதனையாக இருக்கிறது.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP