நெஞ்சு பொறுக்குதில்லையே

//Why you oppose Brahmins and their duties?can you all opposites be happy if all Brahmins are dead in this world?..it is better to kill them than to seduce them in this way...SORRY...NENJAM PORUKUTHILAYAE.... //


என்னுடைய முந்தைய பதிவான மகாத்மாவின் அரசியல் என்னும் பதிவில் வந்த அனானிப்பின்னூட்டம்தான் மேலே இருப்பது. இது போன்ற வினாக்கள் பலமுறை பலவடிவில் பலரால் கேட்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் திரும்ப திரும்ப பதிலளிக்க வேண்டிய நிர்பந்தங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அனானியாக வந்திருந்தாகும் உங்களின் ஆதங்கம் என்பது புரிந்து கொள்ளக்கூடியது என்பதும் திறந்த மனதோடு கேட்கப்பட்ட கேள்வியாக நான் கருதுவதாலும் உங்கள் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த பதிவை எழுதுகிறேன்.


திறந்த மனதோடும், நேர்மையோடும் நடைபெறும் கருத்துப்பரிமாற்றங்களினால் புரிதல்களில் இருக்கும் முரண்களை நாம் களைந்து கொள்ள இயலும். அத்தைகையதொரு செயல்களை அடுத்த நிலைக்கு நம்மை நகர்த்திச்செல்ல உதவும்.


உங்கள் புரிதலிலே பிழை உள்ளது. என்னுடைய (அ) எங்களுடைய எதிர்ப்பு என்பது பிராமணர்களையோ அவர்களது தனிப்பட்ட கடமைகளையோ அல்ல. சிலருடைய எதிர்ப்பு வெறும் பிராமண எதிர்ப்பாக அமைந்துவிடுவதை மறுப்பதற்கில்லை என்றாலும் என்னுடையது பிராமணர் எதிர்ப்பு இல்லை.


உங்கள் கடமைகள் எதிர்க்கப்படுகிறது என சொல்லியிருக்கிறிர்கள். தனிமனித உரிமைகளோ, அல்லது பழக்க வழக்கங்களோ அவர்களோடு நின்று விடும்போது அதற்குள் யாரும் தலையிடுவது இல்லை. அந்த கடமைகள் சமூகத்தின் மீது தாக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்தும் போது அவைகள் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. மனிதர்களின் மீதான பாகுபாடு உங்களுக்கு புனிதமாக இருக்கும் வேதங்கள் மூலமாகவும் ஸ்மிருதிகளின் மூலமாகவும்தான் பிறர்மீது பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதை மறுத்துவிட இயலாது. உங்களுடைய நம்பிக்கைகள் என்பது உங்களுடைய எல்கைக்களைத்தாண்டி பொதுச்சமூகத்தில் தன் தாக்கத்தினை ஏற்படுத்தும் போது அது விமர்சிக்கப்படுகிறது. எதிர்க்கப்படுகிறது.


சமூகத்தில் ஏற்றத்தாழ்வையும் சகமனிதனிதனிடம் காட்டப்பட வேண்டிய சமத்துவத்தையும் மறுத்து தீண்டாமை என்றும் வர்ணம் என்றும் பேதமைப்படுத்தி அதை நீங்கள் தொடர வேண்டிய கடமையாக ஆக்கிச்சென்றிருக்கும் உங்கள் புனிதங்களை மூர்க்கத்தனமாக எதிர்க்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது, இங்கு நடைபெறுவது தனிமனித எதிர்ப்பு அல்ல,அந்த தனிமனிதன் தான் நம்பிக்கைக் கொண்ட, தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தத்துவத்தையே எதிர்ப்பதாகும்.


பிராமணர்களின் கடமைகள் என்பது பெரும்பான்மை மக்களின் உரிமைகளை நசுக்குவது மேலாண்மை செய்வது என்று வரும்போதுதான் அவை கண்டிக்கப்படுகின்றன. பிராமணர்களை விட பிராமணியமே இங்கு நீக்கமற கலந்திருக்கிறது. ஆகவே பிராமணர்களை அழித்துவிடுவதால் மட்டுமே பிராமணியம் அழிந்துவிடப்போவதில்லை. அது எல்லாச் சாதிகளிலும் மிக ஆழமாக வேருன்றீ இருக்கிறது.


ஒரு பதிவிலோ ஒரு உரையாடலிலோ தீர்வு காணக்கூடிய சாத்தியதை உள்ள பிரச்சனை அல்ல இது. மிக ஆழமாக அதே சமயம் விருப்பு வெறுப்பின்றி, தொடர்ச்சியாக விவாதிக்கக்பட வேண்டிய பிரச்சனை.அத்தகையதொரு விவாதத்திற்கு நீங்கள் தயார் என்றால் முழுமையாக விவாதிக்க நான் தயராகவே உள்ளேன்.


அடக்குமுறைக்குட்பட்ட சமூகம் தன் குரல் அதன் மொழியில் சிறிய அளவில் வெளிப்படுகையிலே நெஞ்சு பொறூக்குதில்லையே என்று வேதனைப்படுகிறீர்கள். இலக்கியரசம் சொட்ட தேர்ந்த மொழியில் வெளிப்படும் வஞ்சத்தை என்னவென்று சொல்ல. நெஞ்சம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான் இருக்கிறது. அவை உரத்து ஒலிக்கத்துவங்கினால் உண்மையின் சூடு தாளாது உங்கள் நெஞ்சம் வெடித்துவிடக்கூடும்.

எனவே தயாராக இருங்கள் .


இது உங்களுக்கான தனிப்பட்ட பதிவு என்றாலும் உங்களைப் போல எண்ணிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் பொருந்தக்கூடியதே.

6 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

இணைய நாடோடி ஓசை செல்லா said...

வழிமொழிகிறேன்.

கண்ணம்மா said...

பிராமணர்களின் கடமைகள் என்பது பெரும்பான்மை மக்களின் உரிமைகளை நசுக்குவது மேலாண்மை செய்வது என்று வரும்போதுதான் அவை கண்டிக்கப்படுகின்றன//

நல்ல காமெடி..

Kohilavani Karthikeyan said...

முத்துக் குமரனுக்கு,
எனக்கு ஒன்று விளங்கவில்லை! இங்கே நீங்கள் எல்லாம் எதிர்ப்பது பிராமணீயமா? இல்லை பிராமணர்களையா? எல்லா பிராமணர்களையுமா இல்லை சிலரை மட்டுமா?

எல்லாரையும் தான் என்றால் அது மிகத் தவறு! ஒரு சிலர் செய்யும் தவறுகளால் அனைவருமே வெறுக்கத் தக்கவர்கள் என்ற முடிவுக்கு நீங்கள் வர வேண்டாம்! அப்படிப் பார்த்தால் எல்லா சமூகத்திலும் எல்லா சாதிகளிலும், எல்லா மட்டத்திலும் நீங்கள் குறிப்பிடும் குணங்கள் கொண்ட மனிதம் நிறைந்து காணப்படுகிறது! அவர்கள் உங்கள் உணர்வினை பங்கு போடத் தயங்குகிறார்கள் என்ற எண்ணம்தான் உங்கள் மனதில் என்றால் , இதோ உங்களுக்காக...

என் தோழியர் வட்டத்தில் ஒரு பிராமணப் பெண்ணும் உண்டு! மற்ற நீங்கள் உயர்வாய்ச் சொல்லும் எல்லா சாதியினரும் எல்லா மத்த்தினரும் உண்டு. இப்படி பத்து பேர் கொண்ட வட்டத்தில் (நான் ஐயர் இல்லை!)எங்கள் இருவர் வீட்டில் எங்கள் தலைமுறை தான் முதன்முதலாக கல்லூரி பக்கம் காலை வைக்கிறோம்! மற்றபடி எல்லா நண்பர்களின் வீடுகளும் 2,3 தலைமுறையாகக் கல்லூரிப் படிப்பினைப் பார்த்துள்ளன. அது மட்டும் இல்லாமல் வசதி வாய்ப்பிலும் நாங்கள் தான் கொஞ்சம் கீழே!
இப்படி ஒரு நிலையில் அவளால் எப்படி பிராமணீய ஆதிக்கம் செய்திருக்க முடியும்? அது மட்டுமல்லாமல் என் கல்லூரியில் உள்ள ஒரு குறிப்பிட்ட மத மாணவிகள் நாம் செய்யும் சில சாதாரணச் செயல்களைக் கூட அவர்கள் மதத்திற்கு விரோதமானது என்று செய்ய மறுத்திருக்கிறார்கள்! (புத்தகம் படித்தல் உட்பட)

எனவே ஆதிக்கம் என்பது எப்போதும் பணத்தினையும் பதவிகளையும் சார்ந்தது!

பிராமணீயக் குணங்கள் என்று நாம் வரையறுத்துக் கொண்ட குணங்கள் எல்லா மனிதர்க்கும் உரியவையே! அதற்காக பிராமணர்கள் பண்ணும் எல்லாவற்றிலும் தீயதை மட்டும் பார்ப்போம் என்ற கண்ணாடியை மட்டும் கழட்டி விடுங்களேன்!

உங்களைப் போன்ற எண்ணத்துடன் இருந்து இப்போது மற்ற சாதியிலும் மற்ற மதத்திலும் உள்ள நரி மனிதர்களுடன் பழகி விட்டுத் தான் இந்த எண்ணம் என்னுள் வந்துள்ளது!

Anonymous said...

முத்துகுமரன்,

கண்ணுல மாட்டியிருக்க்ற மஞ்ச கண்ணாடியை கழட்டுங்க... மத்ததெல்லாம் சரியாய்டும். ( ஓ அது வெங்காய கருப்புக் கண்ணாடியா இருந்தாலும் கழட்டிட்டு சுத்தமான திறந்த மனசோட உலகை பாருங்க )
==
கவுண்டன்
==

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும், வழி மொழிதலுக்கும் நன்றி செல்லா.

**

கருத்திற்கு நன்றி கார்த்தி.

Anonymous said...

Only brahmaneeyam is sin???.then you are totaly wrong,Muthukumaran.Sin is there in all community.You check your own heart.There will be caste sin in you.First make yourself right and then question brahmaneeyam.Sorry..you have to think more and blame others.You hurt others WITH YOUR WORDS AND THOUGHTS.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP