மதுரை வலைப்பதிவர் கூடல் - 29.07.2007

மதுரை வலைப்பதிவர் கூடல் - 29.07.2007.
சென்னை, கோவை, பெங்களூர், அமீரகம், அமெரிக்கா என பதிவர் சந்திப்புகளும், பதிவர் பட்டறைகளும் நடைபெற்று வருவது மகிழ்ச்சியான ஒன்று. வலைப்பதிவுகள் சரியான மாற்று ஊடகமாக வளர இது போன்ற ஒன்றுகூடல்களும் கூட்டு முயற்சிகளுமே துணை புரிகின்றன. அனைவரும் ஆகஸ்ட் 5 தேதி சென்னையில் நடக்கும் பதிவர் பட்டறையை பற்றி அறிந்திருப்பீர்கள். அதற்கு முன்பாக வருகிற 29ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை மதுரையில் வலைப்பதிவர் சந்திப்பு ஒன்று தருமி அவர்களின் ஒருங்கிணைப்பில் நடக்கவிருக்கிறது. மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டை சேர்ந்த பதிவர்களை சந்தித்து உரையாட வாய்ப்பாக இந்த அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்று மதுரை வரக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து வலைப்பதிவர்களையும் கட்டாயம் வாருங்கள் என் அன்புடன் அழைக்கிறேன்.

மதுரை வலைப்பதிவர் கூடல்

நாள்: 29.07.2007
நேரம்: மாலை 4மணி முதல் 7 மணி வரை
இடம் அமெரிக்கன் கல்லூரி, தமிழ்த்துறை அருகே உள்ள சிறிய கூடம்


அமெரிக்கென் கல்லூரி வரைபடம்.

1.அமெரிக்கன் கல்லூரி முகப்புமுகப்பிலிருந்து நேராக வந்து வலது புறம் திரும்ப வேண்டும்10. சந்திப்பு நடைபெறும் தமிழ்துறை கட்டிடம்நிகழ்வில் கலந்து கொள்ளவிரும்பும் நண்பர்கள் நிகழ்ச்சி நிரல் குறித்தான ஆலோசனைகளையும் பதிவிலோ அல்லது தனிமடலிலோ தொடர்பு கொண்டால் நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற ஏதுவாக இருக்கும்.

*
பி.கு: வேற ஒன்னும் இல்லை மக்கா வரும் 27ம்தேதி விடுமுறைக்கு ஊருக்கு வர்றேன்.

7 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

இராம் said...

முத்துகுமரன்,

வாங்க... வாங்க... சந்திக்கலாம்.... :)

எனக்கு 30'ம் தேதி லீவு அப்ளை பண்ணிருக்கேன்... கிடைச்சா 7 மணி வரைக்கும் இருக்கலாம்... இல்லன்னா உடனே கிளம்புறமாதிரி இருக்கும்... :(

தருமி said...

ராம்,
மதுரக்காரரே இப்படி சொன்னா எப்படி? பேருந்து 9 மணிக்கு மேலதான கிளம்பும்..

நிலவு நண்பன் said...

வந்தவுடன் வலைபதிவு சந்திப்பா...கலக்குங்க... முடிந்தால் வருகின்றேன்...

பொன்ஸ்~~Poorna said...

நல்லா நடத்துங்க.. அப்படியே நம்ம தாத்ஸை பட்டறைக்கும் இழுத்துட்டு வந்திடுங்க.. புண்ணியமா போகும் ;)

முத்துகுமரன் said...

நல்லது ராம்.

//மதுரக்காரரே இப்படி சொன்னா எப்படி? பேருந்து 9 மணிக்கு மேலதான கிளம்பும்.. //

அதானே:-)

கண்டிப்பா வாங்க நிலவுநண்பன்

முத்துகுமரன் said...

//நல்லா நடத்துங்க.. அப்படியே நம்ம தாத்ஸை பட்டறைக்கும் இழுத்துட்டு வந்திடுங்க.. புண்ணியமா போகும் ;) //
நன்றி நன்றி...

பட்டறைக்கு இழுத்து வரப்புடாது! அழைத்து வரவேண்டும் :-)

அபி அப்பா said...

சபாஷ்! அடுத்தது மதுரையா! கலக்குங்க!

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP