முகம் மறைத்து

சிலவற்றில் அதீத வெளிச்சத்துடன்
சிலவற்றில் மங்கலாக
அடர்த்தியான
கருப்பு வெள்ளை நிழற்படமாக
வரையத் தொடங்கிய கோடுகளாக
ஓவியமாக
அறையெங்கும் நிறைந்துகிடக்கிறது
பிம்பங்கள்
எதில் நீயாக இருக்கிறாய் என
தேடிய பொழுதில்
உன் முகம் மறைத்துப் பறந்தது
காற்றில் ஒரு
வெள்ளைத் தாள்

3 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் said...

கொலை வெறி கவிதையா ?

சும்மா நச்சின்னு இருக்கு !

delphine said...

இந்த மாதிரி கவிதை எழுதினா ரொம்ப serious ஆன ஆளு என்று நினைக்க தோணுது.

முத்துகுமரன் said...

என் குடிலுக்கு முதன்முறையாக வந்திருக்கும் உங்களுக்கு என் நன்றி.
//இந்த மாதிரி கவிதை எழுதினா ரொம்ப serious ஆன ஆளு என்று நினைக்க தோணுது//
கவிதை வேணும்னா serious ஆ இருக்காலாம். நான் சாதரண ஆள்தான்.

வருகைக்கு நன்றி

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP