அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்

இளவஞ்சி என்பீல்ட் புல்லட் பதிவை எழுதிய போது எழுத நினைத்த பதிவு இது. வழக்கம் போல மிக காலத்தாமதமாக இன்று எழுது நேரம் அமைந்திருக்கிறது. பழைய நினைவுகளை அசைபோடுதல் என்பது எப்போது மனதிற்கு இதமாகவும், ஒரு உற்சாகத்தையும் தரக்கூடியது. இதோ என் பங்கிற்கு

அப்பா, அட்லாஸ் சைக்கிள், நான்..

அப்பா பற்றி கொஞ்சம்,

அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் அப்பா. மருந்தாளுநர் சங்கத்தில் மாநில அளவில் முண்ணனித் தோழராக பணியாற்றியவர். சங்கத்தின் மாவட்டத்தலைவராக தொடர்ந்து இருந்தவர். அவர்களுடைய சங்கத்தில் தொடர்ந்து 90 விழுக்காடுகளுக்கு மேலான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஒரே நபர். கம்யூனிசவாதி.
இறை நம்பிக்கை உடையவர். இயல்பாக எளிமையாக பழகக்கூடிய மனிதர்.

அப்பாவின் பலகூறுகளை நான் உள்வாங்கி இருக்கிறேன். அப்பாவுடன் பணிபுரிந்த பலர் என்னை அப்பாவின் நகல் என்று கூறுவார்கள். கொஞ்சமே கண்டிப்பைக் காட்டி ஒரு தோழனாகவே இருப்பவர் இன்று வரை. அறிவுரைகளாக சொல்லாமல் வாழ்ந்து காட்டுபவர். எதிலும் எங்கும் நேர்மையோடு இருக்க வேண்டும், வெளிப்படையாக பேசுதல் வேண்டும், உண்மை என்று மனதிற்கு பட்டதை தயங்காமல் வெளிப்படுத்த வேண்டும், மனித நேயத்தோடும், சமூக அக்கறையோடும் வாழ்தல் வேண்டும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர் அதன்படியே இருப்பவரும் கூட.

அப்பாவை பற்றி நிறைய எழுத இருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அவரது எழுத்து நடையிலே அவருடைய பணிகளை, அனுபவங்களை பதிவு செய்யுங்கள் என்று பலமுறை வற்புறுத்தி வருகிறேன். கையெழுத்துப் பிரதியாகவோ அல்லது இணையத்திலோ எழுதுங்கள் என்று சொல்லி வருகிறேன். பிறதொரு சமயத்தில் எழுதுகிறேன் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்.

இப்போ அட்லாஸ் சைக்கிளுக்கு வருவோம்.

என்னுடைய முதல் சொத்து இந்த சைக்கிள் என்பேன்.ஏறக்குறைய 12 வருடங்களுக்கு முன் எனக்கு கிடைத்த சொத்து. பத்தாம் வகுப்பு படித்த போது கிடைத்தது. நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது மிகத் தாமதமாகத்தான். ஏழாம் வகுப்பு படிக்கும் போதுதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அப்போது அப்பா BSA சைக்கிள் பெரிய வண்டி வைத்திருந்தார். அந்த வண்டி இப்போது எங்களிடம் இல்லை. பழுதடைந்துவிட்டதால் சைக்கிள் கடைக்காரனிடமே கொடுத்து விட்டோம். அதன் மாதிரி


அப்பாவின் வண்டியெடுத்து ஓட்டத் தொடங்கிவிட்டாலும் உயரம் அதிகமாக இருந்ததால் மிகவும் சிரமப்பட்டேன். ஆனாலும் ஒருமுறை கூட வாய்திறந்து எனக்கு புது வண்டி வாங்கித் தாங்க என்று கேட்டதில்லை. இப்போதும் கூட இது வேண்டும் என்று எதையும் கேட்க மாட்டேன்.
பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள், வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன். காலை அலுவலகப்பணியை முடித்துவிட்டு நேராக கடைக்குச் சென்று புதுவண்டியை வாங்கிக் கொண்டு, நான்தான் முதன் முதலில் ஓட்ட வேண்டும் என்று திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்கு உருட்டிக் கொண்டே வந்திருக்கிறார். பாவம் அப்பாவின் நண்பர் புகழேந்தி மாமாவும் கூடவே நடந்து வந்திருக்கிறார்.

அப்போது என் வயதை ஒத்தவர்களுடைய பெரும்பகுதி தேர்வு BSA SLR ஆக இருக்கும். ஆனால் அதை விட அட்லஸ் கொஞ்சம் உயரம் குறைவு என்பதால் அதை வாங்கி வந்தார். புதுவண்டி, நல்ல சிவப்பு நிறம் என ராஜா போல இருந்தது. நான் பள்ளியிலிருந்து வர அப்பா வாசலிலே காத்துக் கொண்டிருந்தார். நான் வரும் போதே பார்த்துவிட்டேன். புது வண்டி நிற்கிறதே யாருடையாதாக இருக்கும் என்று. ஏனெனில் அது எட்டு குடும்பங்கள் தங்கியிருந்த ஸ்டோர் வீடு. அதிகம் சபலப்படாமால், நமக்கேற்ற உயரத்தில் வண்டி இருக்கிறதே என்று யேசித்தவாறே மாடியேறி வீட்டுக்குப் போனேன். சைக்கிள் நல்லா இருக்குதாடா என்றூ அப்பா கேட்க எனக்கு ஆனந்த அதிர்ச்சி. அட எனக்கா புது வண்டி என ஆர்வத்தில் சாவி தாங்கப்பா என்றேன். முதல்ல சாப்பிடு அப்புறம் ஓட்டலாம் என்று சொல்ல வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு திருவரங்கம் முழுவதும் ஒரு சுற்று சுற்றினேன்.

என்னுடைய வண்டி - இப்போதைய தோற்றம் :


1995லிருந்து என்னோடு இருந்து வரும் சொத்து இதுவென்றே சொல்லுவேன். இந்த வண்டியில்தான் முதன் முதலில் டபுள்ஸ் அடிக்க கற்றுக் கொண்டேன். கற்றூக் கொண்டது முதல் அப்பாவை மருத்துவமனையில் காலையில் கொண்டு போய் விடுவது எனது அன்றாடபணியாகும். முதுகுத் தண்டுவட தேய்மானம் காரணமாக அப்பாவை அவ்வளவாக ஓட்ட விடுவது கிடையாது. பள்ளிக்கு அருகே வீடு என்பதால் பெரும்பாலும் பள்ளிக்கு கொண்டு செல்ல மாட்டேன். வீட்டுக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டு அப்பாவையும் கூப்பிட்டு வந்து விடுவேன். மதிய நேர பணியாக இருந்தால் அப்பாவை விட்டுவிட்டு சைக்கிளோடு பள்ளிக்கு வந்துவிடுவேன். அப்போது சக நண்பர்கள் தங்களுடைய வண்டிகளை வித விதமாக அலங்கரித்து வருவார்கள். நானும் அது போல ஆசைப்பட்டு வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு முன் மக்கார்டில் பச்சை வண்ணத்தில் என் பெயரை எழுதினேன். எழுதியது அசிங்கமாகத் தெரியவே அந்த பகுதி முழுவதையும் பச்சை வண்ணத்தால் நிரப்பிவிட்டேன். சிகப்பு வண்டியில் பச்சை மின்னியது. :-)

1997 ஆண்டு 12 ம் வகுப்பு முடித்து கல்லூரி போகவிருந்த சமயம்தான் என்னுடைய வண்டியோடும் அப்பாவோடும் மிக அதிக நேரம் செலவிட்டேன். 12வது வகுப்பு இறுதித் தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதால் பொறியியல் கிடைக்காது என்ற நிலை, அப்பாவின் முன் இரண்டே வாய்ப்புகள். ஒன்று ஏதேனும் இளங்கலை பாடப்பிரிவில் சேர்த்துவிடுவது அல்லது பணம் செலவழித்து பொறியியல் படிக்க வைக்க வேண்டியது.நேர்மையான அரசு ஊழியராக இருந்துவிட்டபடியால் சேமிப்பு என்று பெரிய அளவில் கிடையாது. சங்கத்தில் ஈடுபாடுடன் இருந்ததால் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளாலும் கையிருப்பு இல்லாத நிலை. ஆனால் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை. சொந்தக்காரர்கள் பெரும்பாலனவர்கள் ''அகலக்கால்'' வைக்கிற, உன் சத்துக்கு இதெல்லாம் முடிகிற காரியமா முத்து என அப்பாவிடம் என்று சொன்னபோதிலும் அப்பா உறுதியாக இருந்தார். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என. அம்மா தன்னிடமிருந்த நகைகளை கழட்டிக் கொடுத்து முதலில் இதை அடகு வைத்து பணம் கொண்டு வாருங்கள் மீதித் தொகைக்கு வேறெங்காவது கடன் வாங்குவோம் என்று. அம்மாவின் ஒத்துழைப்பு இருந்ததாலே அவரால் எங்களை படிக்க வைக்க முடிந்தது.

அப்போது ஆரம்பித்ததுதான் நான் துபாய் வரும் வரை கடன், கடனை அடைக்க கடன் என்று வாழ்க்கை ஓடியது. என்னை படிக்க வைக்க வட்டிக்கு கடன் வாங்க வேண்டும் என்று இருந்த போது அதற்காக அப்பா பட்ட அலைச்சல் எத்தனை எத்தனை. எனது ஒரே வேலை அப்பாவை சைக்கிளில் வைத்துக் கொண்டு அவர் சொல்லுமிடங்களுக்கெல்லாம் கூட்டிச் செல்வது. அதனாலேயே வீட்டின் நிதிநிலமை என்னவென்பதும், எவ்வளவு கடன் வாங்குகிறோம், யாரிடம் வாங்குகிறோம் என்பதும் எனக்கு தெரிந்தே இருந்தது.

இவ்வளவு தெரிந்தும் கல்லூரிக் காலத்தில் கொஞ்சம் அதிகப்படியாகவே செலவு செய்தேன். என் நிலை அறிந்தும், நான் செய்த அளவுக்கதிகமான செலவுகள். நான் இறுதி ஆண்டு வந்த போது தம்பியும் பொறியியல் படிப்புக்கு வந்து விட்டான். இன்னும் அதிகப்படியான சுமை அப்பாவிற்கு. அப்போதும் அப்பாவிற்கு உற்ற துணை அட்லாஸ் சைக்கிள்தான். மிக மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவார். உயரம் கம்மியான சைக்கிள் என்பதால் அவருக்கு அது வசதியாக இருந்தது.

அப்பா ஓய்வு பெறும் 20 தினங்களுக்கு முன் எனக்கு துபாயில் பணி கிடைத்தது. அப்பா அவரது பணி ஓய்வு நிகழ்ச்சியின் ஏற்புரையில் சொன்னது என் காதுகளில் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ''இந்த இருபது நாளாத்தான் நான் நிம்மதியா தூங்குறேன். எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான்'' இனி கவலை இல்லை. நாம எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளை படிக்க வைக்கணும் கேட்டுகிறேன்னு சொல்லி நிறைவு செய்தார். கண்கள் கலங்க நான் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னை தனியே அழைத்து அப்பாவுடன் உடன் பணியாற்றியவர் ஒருத்தர் சொன்னது மிகப்பெருமையாக இருந்தது. கூட வேலை பாக்குறவங்க பைக், ஸ்கூட்டர்னு வரும் போது நீங்க சைக்கிள்ல வர்றீங்களே சார்னு நாங்க கூட பலமுறை கேலி பண்ணி இருக்கோம். உனக்கு வேலை கிடத்த பின்பு அவர் சிரித்த முகத்தோடு அதே சைக்கிளில் வந்த போது உண்மையாவே கம்பீரமா இருந்தது தம்பி. அப்பாவை பார்த்துக்குங்க என்றார். சரி சார் என சொல்லி வந்தேன். அப்பாவின் ஓய்வுக்குப் பின் மதுரை வந்துவிட்டோம்.

சென்ற ஆண்டு நான் சொந்த வீடு வாங்கிய போதும் அப்பாவிற்கு உற்ற துணைவன் என் அட்லஸ் சைக்கிள்தான். வீடு வாங்குவது தொடர்பாக எல்லா இடத்திற்கும் இதே சைக்கிளில்தான் அலைந்தார்கள். அப்பாவின் விருப்படியே நல்ல வீடாகவும் அமைந்தது. இதுவரை வெயிலிலும் மழையிலும் காய்ந்து கருவாடாக கிடந்த என் சைக்கிளுக்கும் யோகம் வந்தது.

ஆம் ! இப்போது அய்யாவிற்கு தனி அறை. வேறு எந்த வாகனும் இல்லாததால் அந்த அறையில் தனிக்காட்டு ராஜாவாக இருக்கிறார். நான் வாழ்வில் அதிகம் முறை தொலைத்தது எதுவென்றால் இந்த வண்டியின் சாவி தான். இன்று பூட்டப்படாமல் அறைக்குள் தனியாளாக இருக்கிறார்.

இந்த முறை ஊருக்குப் போன போதும் ஆசை தீர சைக்கிள் ஓட்டினேன். அடிக்கடி செயின் கழண்டு கொண்டாலும் அந்த கடக் கடக் சத்தம் ஒரு சந்தோசத்தை தருகிறது.

அப்பா அம்மா மணிவிழா சிறப்பாக நடந்து முடிந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சி. அப்பாவை வைத்து டபுள்ஸ் அடித்து சென்றபோது சொல்லிக் கொண்டுவந்தேன். வீடு என் பேர்ல இருந்தாலும் அதுல எனக்கு பங்குதான் உண்டு. மொத்தமும் கிடையாது. அதுனால இன்னொரு வீடு வாங்குற வரைக்கும் எனக்கு இருக்கிற ஒரே சொத்து சைக்கிள்தான்பா என்றேன். சிரித்துக் கொண்டார்.

கொஞ்சம் நீளாமாகிப் போய்விட்டது பதிவு. ஏனோ இதையெல்லாம் சொல்ல வேண்டும் என்று ஓரு ஆசை.

ஏன்!

தனிமையின் ஏக்கம்!!

பிறந்தநாளன்று கூட அப்பா அம்மாவின் அருகாமையில் இல்லாமல்

இவ்வளவு தொலைவிலிருக்கும் தனிமையின் ஏக்கம்.........

53 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

அபி அப்பா said...

முத்துகுமரன் மிக அருமையான பதிவு. கிட்டதட்ட என் கதையும் இதுதான், அருமையான அப்பா அருமையான மகன், அருமையான அட்லாஸ் வண்டி! நெஞ்சம் நிறைந்து இருக்கு இப்போ ஏன்னு தெரியலை!

J K said...

நல்ல பதிவு.

படிச்சு முடிக்கறப்பா ஏதோ ஒரு திருப்தி...

பரஞ்சோதி said...

அன்பு தோழனுக்கு
பிறந்த நாள் வாழ்த்துகள்.

அருமையான பதிவு.

அருமையான தந்தையை பெற்ற நீங்க பெரும் பேறு பெற்றவர்.

அப்பாவுடன் இரண்டே நாட்கள் அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்த நானே அவரை மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறேன். பெற்ற பிள்ளை நீங்க எத்தனை பெருமைப்பட வேண்டும்.

வாழ்த்துகிறேன்.

Anonymous said...

ungal pathivai padithathum ungkalai pola enakkum kankal panithana - nenjam kananthathu
ungkalin appa paasam padithu santhosa patten. ovvoru puthalvarkalum ungkalai maathiri unarnthu nadanthal pettavarkal thaangal patta paattinai marakkalam
unkalin nanti unarvum to your parents as well as to your cycle really highly appreciable one.. palasai marakkamal ethanai per irukiraarkal - athuvum, intha veetil enakkum panguthaan entu solla ethanai perukku manathu varum - really u r great - ippadi oru son kidaikka unkal parents thaan kodutthu vaithirukka vendum. ippadiye irunkal thambi..
pollute aakamal entha soolnilaiyilum - santhosamaga irunthathu unkal pathivu - ANAITHU SELVAMUM PERTTU NEEDULI VAAZHA VAAZHTTHUKAL - baskar

இராம் said...

முத்துக்குமரன்,

அருமையான பதிவு, எனக்கும் இதேமாதிரியான அனுபவம் உண்டு.... எங்க அப்பா'வுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது, அதுனாலே அப்போ வாங்கமுடிஞ்ச பழைய சைக்கிள்'லே அவரை பின்னாடி உட்கார வைச்சி கடைக்கு கூட்டி போனது ஞாபகம் இருக்கு.... :)

தம்பி said...

சைக்கிள் ஓட்டுவது எப்படின்னு ஒரு பதிவே போட போறேன் நானு.

நட்டு said...

அருமையான அழகான பதிவு.நேர்மை,தியாகம் போன்றவை தலைமுறையாக பெற்றோர் சொத்துபோலும்.

இலவசக்கொத்தனார் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே. எனது சிகப்புச் சைக்கிளின் ஞாபகம் வந்துவிட்டது!!

சுல்தான் said...

நிகழ்வை அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள். நல்ல பதிவு.

முகு said...

வாழ்க்கையை பின்னோக்கி மிதிவண்டியில்
சென்று வந்ததற்கு மகழ்ச்சி முத்துகுமரன்,
நடுத்தர வர்க்கத்தின்
இந்த கடன் படிப்பு தவிர்க்க இயலாதது.

உங்களின் தாய் பற்றி அதிகம் கூறவில்லையே....
அவர்களை உங்கள் மிதிவண்டியில் அழைத்து
சென்றதில்லையா?

TBCD said...

பொதுவாகவே பாடப்படாத சரித்திரமா இருக்கும் அப்பாக்களின் சரித்திரம்..

ஒரு குடும்பத்தின் தலைவனாகும் போது அவரின் அருமை புரியும்...

உங்கள் காதை ( காதை தாம்பா.பிழை இல்ல ) மிதிவண்டி பற்றி மட்டும் இல்லாமல்..உங்கள் அப்பாவைப் பற்றியும் பேசுகிறது...

வாழ்க்கையின் பக்கங்களை சுவையாக புரட்டியிருக்கிறீர்கள்...

முத்துகுமரன் said...

உங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறேன் அபிஅப்பா.

நன்றி jk

முத்துகுமரன் said...

உங்களின் வாழ்த்து மிகுந்த மகிழ்வளிக்கிறது பரஞ்சோதி! உறவுகளைக் காட்டிலும் நட்பின் மகிமையை உணர்த்தியவர் நீங்கள்.

இந்த தருணத்திலே சொல்வதில் மகிழ்கிறேன். என் வீடு முடிக்கும் போது தேவைப்பட்ட ஒரு தொகையை வெறும் இணைய உரையாடல் நட்பை வைத்து தந்தவர் நீங்கள். மூத்த சகோதரனாக இருந்து செய்த உதவி அது. மறக்க முடியுமா! இணையம் தந்த முத்துக்களில் நீங்கள் எனக்கு முக்கியமானவர்.

முத்துகுமரன் said...

தங்கள் அன்பிற்கு நன்றி பாஸ்கர்.

ராம்! உங்கள் இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

முத்துகுமரன் said...

சீக்கிரம் பதிவை போடுங்க தம்பி

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும் அன்பான கருத்திற்கும் நன்றி நட்டு.

வாழ்த்திற்கு நன்றி கொத்ஸ். உங்க வண்டிக்கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

cheena said...

முத்துக் குமரன், தங்களின் பதிவைப் படித்தேன் - தங்கள் தாய்
தந்தையர் மற்றும் தங்களின் சைக்கிள் - அருமை - எனது
பழைய நினைவுகளை மீண்டும் ஒரு முறை அசை போட
வைத்தது. ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்கு முன்னால் நானும்
கூடல் மாநகரில் நகர் முழுவதும் சைக்கிளில் சுற்றியவன் தான்.
கல்லூரி நாட்களில் புதூரிலிருந்து நாகமலை புதுக்கோட்டை
மற்றும் திருப்பரங்குன்றம் சைக்கிளில் தான் சென்று படித்தேன்.
பொறியியல் படித்த காலத்தில் பெற்றோர்
பட்ட கஷ்டம் நினைத்து நினைத்து, சில காலம் கழித்து, ஒரு நல்ல நிலைமைக்கு வந்து, அவர்களின் மறைவுக்கு பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக மறந்து போனது. அவ்வப்
போது இரவு நேரங்களில் தூக்கம் வராமல் அசை போடுவது
உண்டு. தங்கள் பதிவு என்னுடைய பழைய மலரும் நினைவுகள் மீண்டும் மலரத் தூண்டி விட்டது. நன்றி

முத்துகுமரன் said...

நன்றி சுல்தான்.

முகு, என் தாயைப்பற்றி அதிகம் சொல்லவில்லை என்பது உண்மைதான். சமயம் வாய்க்கும் போது அவரைப்பற்றியும் எழுதுவேன்.

அம்மாவையும் அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆனால் அம்மா பெரும்பாலும் நடந்துவருவதையே விரும்புவார்கள். ஓரிரு முறை தம்பியோடு டபுள்ஸ் சென்று வந்ததால் அந்த முடிவு.

பிச்சைப் புகினும் கற்கை நன்றே - எத்தனை அற்புதமான வரி.

முத்துகுமரன் said...

அருமையான பின்னூட்டத்திற்கு நன்றி TBCD.

ILA(a)இளா said...

வாழ்த்துக்கள் முத்து!

வல்லிசிம்ஹன் said...

PiRantha naaL vaazththukkaL Muththuk kumaran.
veku nekizhvaana pathivu.
Unga ammavukkum appaavukkum vaazththukkaL.
intha ariya kudumbaththaic santhiththathil
mikka makizcchi.

thanimaiyai ninaikka vendAAm.

appaavum ammaavum arukliye irukkiRArkaL manathaLavil.

manathukku NiRaivu ungaL pathivu.
enga paiayanukkum mudhalil kidaiththathu oru pazhaiya vandithaan.
25 varudangaLukkup piRaku ippothu irandu vandikaL inthap paalai vanaththil vanthu sambaathiththaalum,
enakku appo avan eppo paarththaalum, puncture Akum vaNdiyil mithiththu varuvathuthaan Ninaivu varukiRathu.
NanRi Muththukumaran.
God Be with you always and protect you.

Appaavi said...

நெஞ்சைத் தொட்டப் பதிவு... அருமையாக இருந்தது...

கோவி.கண்ணன் said...

//நான்தான் முதன் முதலில் ஓட்ட வேண்டும் என்று திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்கு உருட்டிக் கொண்டே வந்திருக்கிறார்.//

தந்தைமை தாய்மையை விட குறைவு இல்லை என்பதை உங்கள் அழகான நடை எழுத்துக்கள் காட்டி இருக்கிறது.

உங்கள் அப்பாவை வணங்குகிறேன்.

கோபிநாத் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்து :)

அருமையான பதிவு...எங்க அப்பாவுக்கும் எப்போதும் சைக்கிள் தான்.

ம்.......

கப்பி பய said...

அருமையான பதிவு முத்துக்குமரன்!!

அந்த நாள் ஞஆபகம் நெஞ்சிலே வந்ததே :)

Anonymous said...

well written
and also screwed my auto graphs insided my deep heart..
lot of feelings but dont know what to say

great post which ever read in tamil blog world.

சிவபாலன் said...

Wow! Super Post!

delphine said...

மகிழ்ச்சியாக இருக்கு முத்து குமரனிந்த பதிவை வாசித்து.. அருமையான பெற்றோர்களுக்கு அருமையான மகன்..

சென்ஷி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!

அருமையான பதிவு....

அப்பாக்களின் சரித்திரம் பல இடங்களில் இடம் பெறாமல் போய் விடுகின்ற காலத்தில் இது ஒரு சிறந்த பதிவு...

சென்ஷி

தருமி said...

பசுமையான நினைவுகளைத் தந்துள்ளீர்கள். நன்று.

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்பாவை எனக்குத் துணைக்கு வரச்சொல்லுங்கள் - பதிவுலகிற்கு.

வெற்றி said...

முத்து,
நல்ல நினைவு மீட்டல் பதிவு.
பி.நா வாழ்த்துக்கள்.

மங்கை said...

//அறிவுரைகளாக சொல்லாமல் வாழ்ந்து காட்டுபவர்.//

அருமையா சொல்லிட்டீங்க

அப்பாவின் மேல் மதிப்பு வைத்தவர்கள் என் மனதில் உயந்து நிற்பவர்கள் முத்துக்குமரன்... படித்து முடிக்கும் போது கண் ஓரங்களில் நீர் கோத்து இருந்தது..

சமீப காலமாக அப்பாவைப் பற்றிய பதிவுகள் அதிகமாக வருவது மனதிற்கு இதமாக இருக்கிறது..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துக்குமரன்

வெட்டிப்பயல் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துகுமரன்...

பழசையெல்லாம் அசைப்போட வைத்தது இந்த பதிவு...

மயிலாடுதுறை சிவா said...

முத்துகுமார்

மனப் பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களின் சைக்கிள் பதிவு மிக அருமை! நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் எழுதியது இது...
http://manikoondu.blogspot.com/2005/05/blog-post_17.html#comments

நீங்கள் வீடு கட்டியதற்கு வாழ்த்துகள் பல. இன்னும் பல சொத்துகள் சேர மனதார வாழ்த்துகள் பல....

மயிலாடுதுறை சிவா...

ILA(a)இளா said...

நல்லதொரு பதிவு. ஒரே முச்சுல படிக்க, ஏதோ உங்க கூட இருந்த மாதிரியே உணர்வு

gulf-tamilan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் முத்துகுமரன்!!!

ஜோ / Joe said...

அருமையான பதிவு .தவமாய் தவமிருந்து திரைப்படம் நம்மைப் போன்றவர்களை கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.

அப்பா,அம்மாவுக்கு என் வணக்கங்கள்!

cheena said...

பிறந்த நாள் வாழ்த்துகள் முத்துகுமரன்

SurveySan said...

எங்க கிட்ட இருந்தது அட்லாஸோ, BSA வோ இல்ல, ஏதோ பேர் தெரியாத ஒரு சைக்கிள்.

அத தொட தொடன்னு தொடைக்கர கொடும இருக்கேன் :(

அது சரி, விடுமுறையில், சிதம்பரம் கோயிலுக்குச் சென்று திருவாசகம் பாடும் ப்ளான் என்னாச்சு?
தனிப் பதிவு போடுங்களேன் ;)

Anonymous said...

vanakkam..
WISHING YOU A VERY HAPPY BIRTHDAY..
அருமையான பதிவு.

THAMARAI

லக்கிலுக் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர்!

கலக்கல் பதிவு!

SurveySan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

//அப்போது ஆரம்பித்ததுதான் நான் துபாய் வரும் வரை கடன், கடனை அடைக்க கடன் என்று வாழ்க்கை ஓடியது. என்னை படிக்க வைக்க வட்டிக்கு கடன் வாங்க வேண்டும் என்று இருந்த போது அதற்காக அப்பா பட்ட அலைச்சல் எத்தனை எத்தனை. எனது ஒரே வேலை அப்பாவை சைக்கிளில் வைத்துக் கொண்டு அவர் சொல்லுமிடங்களுக்கெல்லாம் கூட்டிச் செல்வது. அதனாலேயே வீட்டின் நிதிநிலமை என்னவென்பதும், எவ்வளவு கடன் வாங்குகிறோம், யாரிடம் வாங்குகிறோம் என்பதும் எனக்கு தெரிந்தே இருந்தது//

same pinch!

முத்துகுமரன் said...

//அவ்வப்
போது இரவு நேரங்களில் தூக்கம் வராமல் அசை போடுவது
உண்டு. தங்கள் பதிவு என்னுடைய பழைய மலரும் நினைவுகள் மீண்டும் மலரத் தூண்டி விட்டது. நன்றி //

chenna
உங்கள் பழைய நினைவுகளை அசை போட இந்த பதிவு உதவி இருப்பதற்காக மிகவும் மகிழ்கிறேன்

முத்துகுமரன் said...

உங்கள் வாழ்த்திற்கு நன்றி இளா,

உங்கள் கனிவான வாழ்த்திற்கும், அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி வல்லி அம்மா

முத்துகுமரன் said...

முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி அப்பாவி.

//தந்தைமை தாய்மையை விட குறைவு இல்லை என்பதை உங்கள் அழகான நடை எழுத்துக்கள் காட்டி இருக்கிறது.// - புரிதலான இந்த பின்னூட்டம் மிகுந்த மனநிறைவத் தருகிறது கோவியாரே.

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி கோபிநாத், கப்பிபய
//well written
and also screwed my auto graphs insided my deep heart..
lot of feelings but dont know what to say

great post which ever read in tamil blog world. //
அதிகப்படியான பாராட்டு என்றாலும் உங்கள் அன்பிற்கு நன்றி அனானி.

முத்துகுமரன் said...

நன்றி சிவபாலன்.

//மகிழ்ச்சியாக இருக்கு முத்து குமரனிந்த பதிவை வாசித்து.. அருமையான பெற்றோர்களுக்கு அருமையான மகன்..//
உங்கள் பின்னூட்டம் மகிழ்வையும் மனநிறைவுயும் தருகிறது டெல்பின் அம்மா

முத்துகுமரன் said...

//அப்பாக்களின் சரித்திரம் பல இடங்களில் இடம் பெறாமல் போய் விடுகின்ற காலத்தில் இது ஒரு சிறந்த பதிவு...

சென்ஷி //

நன்றி சென்ஷி.

வாழ்த்திற்கு நன்றி தருமி. //பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்பாவை எனக்குத் துணைக்கு வரச்சொல்லுங்கள் - பதிவுலகிற்கு. // - நீங்கள் சந்தித்தாலும் வலியுறுத்துங்கள். உங்களைப் போன்றோர் எல்லாம் வயதில் சிறியவர்களான எங்களுக்கு உற்சாகம் அளிப்பது நாங்கள் சரியான திசையில்தான் பயனிக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது என்றார் அப்பா.

முத்துகுமரன் said...

நன்றி வெற்றி.

உங்கள் அப்பா பற்றிய பதிவையும் மிகவும் நெகிழ்வோடு வாசித்தேன் மங்கை.

வாழ்த்திற்கு நன்றி வெட்டிப்பையல்

முத்துகுமரன் said...

நன்றி மயிலாடுதுறை சிவா. உங்கள் சைக்கிள் பற்றீய பதுவும் வெகு அருமை.

நன்றி கல்ப் தமிழன்.

நன்றி ஜோ. நிச்சயம் உங்கள் பின்னூட்டம் வரும் என்றூ நம்பி இருந்தேன். அதே போல வந்தது மகிழ்வைத் தருகிறது

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி சர்வேசன்.

உங்கள் ஞாபக சக்திக்கு பாராட்டுக்கள். குறுகிய கால அளவு என்பதால் போக முடியவில்லை. சவால் விட்டவர்களும் தொடர்பு கொள்ளாததால் அடுத்த ஆண்டு பார்த்து கொள்ளலாம் என விட்டு விட்டேன் :-)( சவால் விட்டவர் என் விடுமுறை பற்றி அறீயவில்லை போலும்:-))

முத்துகுமரன் said...

//vanakkam..
WISHING YOU A VERY HAPPY BIRTHDAY..
அருமையான பதிவு.

THAMARAI //

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தாமரை.

முத்துகுமரன் said...

வாழ்த்திற்கு நன்றி லக்கி.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP