பொய்களற்றுபாம்புச் சட்டையைப் போல உரித்துப் போட்டாலும்
திரும்ப திரும்ப முளைத்துவிடுகின்றன
சந்தேகமாக இருக்கிறது
உடல் போர்த்தியிருப்பது தோல்களா?

பொய்களாவென?

பதிந்துவிட்ட முகமுடிகளை
முகமென தக்க வைக்க சில பொய்கள்
அந்தரங்கத்தின் எல்லாப் பகிர்தல்களைத் தாண்டியும்
பிரத்யோகமாக தங்கிவிடும் பொய்கள்.


விழுக்காடுகளுக்கு ஏற்ப உலவுகின்றன
படுத்துறங்கும் மெத்தையை போலவும்,
தூக்கம் பறிக்கும் மூட்டைப் பூச்சிகளாக
பொய்கள்.


உயிரற்று இருப்பதைக் காட்டிலும்
கடினமாக இருக்கிறது
பொய்களற்று வாழ்வது!

உனக்கொரு பெயர்உனக்கொரு பெயர் இருக்கிறதோ!!
எனக்கு தெரியவில்லை இதுவரை
அம்மா என்பதை தவிர

நீ தீண்டாத என் உயிர்


விவரிப்புகளில் அடங்கிவிடாத வலியோடு அழுத்துகிறது மனதை
புதிதாக வரையப்பட்ட எல்லைக்கோடு
இமைகளை மூட விடாது அச்சமூட்டுகிறது
விலக்கி வைக்கப்பட்டதான மாயபிம்பம்
தடுக்கவியலாது நடந்துவிடுகிறது உயிர்வதை
பெயர் மாற்றி உச்சரித்த கணங்களில்
பாதுகாப்பகவே வைக்கப்பட்டாலும்
அந்நியமாகவே மிதக்கிறது கண்ணாடி கூடுக்குள்
நீ தீண்டாத என் உயிர்

துபாயில் தோழர் இசாக்கின் குறும்படம் திரையிடல் நிகழ்ச்சி.

இரண்டாம் கருவறை, காதலாகி, மழை ஓய்ந்த நேரம். மெளனங்களின் நிழற்குடை போன்ற கவிதை தொகுப்புகளின் ஆசிரியரும், துவக்கு இலக்கிய அமைப்பு, அமீரகத்தமிழ்கவிஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் இசாக்கின் '' ஒரு குடியின் பயணம்'' குறும்படம் திரையிடல் நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை 04.01.2008 அன்று மாலை 5.30 மணி அளவில் துபாய் கராமாவிலுள்ள ''சிவ் ஸ்டார்'' உணவகத்தில் திரையிடப்பட இருக்கிறது. நண்பர்கள், ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினா சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

''குறும்பட திரையிடல் மற்றும் குறுந்தகடு வெளியிடல் அழைப்பிதழ்''இசாக்கின் ஒரு குடியின் பயணம் குறும்படம் திரையிடல்,

அன்பிற்கினிய நண்பர்களே
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்திக்கும் வாய்ப்பு வாய்த்திருக்கிறது.
ஆம்.. எனது குறும்படமான ஒரு குடியின் பயணம் திரையிட உள்ளோம் துபாயில்.
இந்த சூழலில் இப்படம் உருவாக துணை நின்ற நண்பர்களை நன்றியோடு நினைக்கிறேன்.

ஒளிப்பதிவாளர் நண்பர் கவின், படத்தொகுப்பாளர் பா. அரிகோபி, இசையாளர் ரசினி, தயாரிப்பில் துணை நின்ற வ.ச.சுரேசு குமார் என அனைத்து உறவுகளுக்கும் என் அன்பு நன்றி.

அமீரகத்தில் வசிக்கும் நண்பர்கள் அவசியம் கலந்துக்கொண்டு ஊக்கமளியுங்கள்.

இசாக்கின்
ஒரு குடியின்
பயணம்
குறும்படம் திரையிடல்,குறுந்தகடு வெளியிடல்.

நாள்: 04-01-2008 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: சிவ் ஸ்டார் உணவகம்- கராமா, துபாய்

அனைத்து தோழர்களும் நண்பர்ளுடன் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.

அன்புடன்
துவக்கு இலக்கிய அமைப்பு
தாய்மண் வாசகர் வட்டம்
050 5823764- 050 7763653
Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP