சுமையினோடு

தோல்வியாகவே முடிகிறது
வார்த்தைகளாக உருமாற்ற முனைந்த
உரையாடல்களற்ற தருணங்களில்
பிரிவின் சுமையினோடு
வெறுமையாகிப் படர்ந்த
தவிப்புகள்

3 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

தமிழச்சி said...

Tuesday, 25 March, 2008

தமிழ்மணத்தில் இருந்து பதிவை மட்டும் நீக்கியிருப்பதாக சொல்லும் உங்கள் மின்னஞ்சல் என்னை தமிழ்மணத்தில் இருந்து நீக்கியதை ஏன் குறிப்பிடவில்லை?
தமிழ்மணத்தின் நிர்வாகத்தினரிடமிருந்து வந்த மின்னஞ்சலில்

தமிழ்மணத்தில் இருந்து இந்த பதிவு (குறிப்பிட்ட) நீக்கப்படுகின்றது

என்று சொல்லிவிட்டு தமிழ்மணத்தில் இருந்து என்னை விலக்கி

வைத்திருக்கிறீர்கள். இந்த முரண்பாட்டுக்கு காரணம் என்ன?

நீங்கள் நீக்கியது பதிவையா? என்னையும் சேர்த்தா? என்னை

நீக்குவதென்றால் 24 மணிநேரத்திற்கு முன் உங்களுடைய

அறிவிப்பு எனக்கு வந்திருக்க வேண்டும். அப்படி எந்த

மின்னஞ்சலும் தமிழ்மணத்தின் நிர்வாக்கதினரிடமிருந்து

எனக்கு வரவில்லை. காரணங்களை எனக்கு தெரிவிக்க

வேண்டுகின்றேன்.

தமிழச்சி said...

Tuesday, 25 March, 2008
இப்பதிவு நீக்கப்படுகின்றது என்று சொல்லி விட்டு கடந்த 24 மணிநேரத்தில் எழுதி பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன?

to me show details 6:46 AM (6 hours ago) Reply
Content-type: text/html; charset=utf-8
From: http://www.thamizmanam.com/ postadmin@thamizmanam.com Cc: postadmin@thamizmanam.com
Dear author,
Your post தமிழச்சியின்is removed by http://www.thamizmanam.com/ Administrator due to follwing reason,http://www.www.thamizmanam.com/

Dear ,Your blog is Removed from listing by www.thamizmanam.com Administrator due to follwing reason,பதிவர் தமிழச்சி உங்கள் பதிவு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்படுகின்றது. தொடர்ந்தும் நீங்கள் தமிழ்மணத்தின் எல்லைகளை மீறும் வகையிலே செயற்படுவதினாலே இப்பதிவு நீக்கப்படுகின்றது.

க. இரமணிதரன்

தமிழ்மணம்,

நிர்வாகி http://www.www.thamizmanam.com/. ////

க. இரமணிதரன் அவர்களுக்கு,

நீங்கள் தமிழ்மணத்தின் நிர்வாகிகளுள் ஒருவராக இருப்பது பிரச்சனை அல்ல. பெயரிலி என்ற பெயரில் நீங்கள் பதிவர்களை குறிப்பாக என்னை மிக கேவலமான முறையில் தரக்குறைவாக பேசியதற்கு தமிழ்மணத்தை சேர்ந்த மற்ற நிர்வாகிகளான MR. சுந்தரவடிவேலு, MR. சுடலைமாடன், MR. கார்த்திக்ராமாஸ், MR. தமிழ் சசி அவர்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள். நீங்கள் என்னைத் தாக்கி பேசிய வார்த்தைகளைத் தான் அப்படியே பதிவாக எடுத்து போட்டேனே தவிர அதில் என்னுடைய எழுத்துக்கள் எதுவும் இல்லை என்பதை ஆதாரப்பூர்வமாக என்னால் நிருபிக்க முடியும். அப்படி இருக்கும் போது உங்களுடைய எழுத்தை எடுத்துப் போட்டதே ஆபாசமென்றால் உங்களை எதனால் அடித்தால் தகும். காபரே டான்ஸ் ஆட்டக்காரி என்று வர்ணிப்பீர். அதை கேட்டுக் கொண்டு ஒதுங்கி போக வேண்டுமா? இந்த மாதிரி ரவுடி வேலையெல்லாம் என்னிடம் காட்டினால் மரியாதை இருக்காது. இன்று காலையில் லக்கியின் பதிவை நீக்கினீர்கள். அதில் உங்களை தாக்கி எழுதியிருப்பதாக சொல்கிறீர்கள். என்னுடைய பதிவில் உம்முடைய எழுத்தை தானே பதிவு செய்திருந்தேன். மற்ற தமிழ்மண நிர்வாகிகள் கவனித்துப் பார்க்க வேண்டும். இப்பதிவு நீக்கப்படுகின்றது என்று சொல்லி விட்டு கடந்த 24 மணிநேரத்தில் எழுதி பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டதற்கு காரணம் என்ன? குறிப்பாக தந்தை பெரியாரின் பதிவுகள் உள்பட?

முத்துகுமரன் said...

வணக்கம் தமிழச்சி! உங்கள் பதிவில் பின்னூட்டம் இட முயற்சித்தேன். முடியவில்லை. அதனால் இங்கு பின்னூடமாக இடுக்கிறேன்( முந்தைய பின்னூட்டம் உங்களின் பின்னூட்டம் என்ற நம்பிக்கையில்). தமிழ் மணத்திலிருந்து உங்கள் பதிவினை நீக்கியிருந்தால்/நீக்கியிருப்பதால் - (தமிழ்மணம் சரிவர திறக்க இயலவில்லை- எனவே இடுகைகள் நீக்கமா பதிவு நீக்கமா என என்னால் பார்க்க முடியவில்லை) அதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் பதிவில் உங்கள் இடுகை நீக்கத்திற்கான காரணமாக தமிழ்மண எல்லைகளை மீறியிருப்பது என்று குறிப்பிட்டுருப்பதை பார்த்தேன். தமிழ்மணத்தின் எல்லைகள் எதுவென்பதை நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழ்மணத்தின் இந்த போக்கு சர்வாதிகாரத்தனமானது. நிர்வாகத்தினர் இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP