முடிவுறாத் தனிமை

அருகாமையற்றதின் வலியின் கீறலில்
தொலைவின் நீளத்தை தீடிரென உணர்ந்து கொள்கிறது
இறுக்கம் கொண்ட மனது
பிறர் பார்வை மறைக்க
சலனமற்ற முகமூடியணிந்து மறைந்து கொள்கிறது வெறுமை
சொற்ப கணங்களே நீடித்தாலும்
எதன் காரணம் என்றறிய இயலாது
தாளவியலா அழுத்தத்தை தந்துவிட்டுப் போகிறது
முடிவுறாத் தனிமை

4 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

கோவி.கண்ணன் said...

//சலனமற்ற முகமூடியணிந்து மறைந்து கொள்கிறது வெறுமை
சொற்ப கணங்களே நீடித்தாலும்
எதன் காரணம் என்றறிய இயலாது
தாளவியலா அழுத்தத்தை தந்துவிட்டுப் போகிறது
முடிவுறாத் தனிமை//

விரைவில் திருமணத்தை செய்யுங்க சாரே. தள்ளிப் போட்டு நாளாக நாளாக நிறைய கவிதைகள் கிடைக்கும்.

லக்கிலுக் said...

//முடிவுறாத் தனிமை//

காதல் கவிதை எழுதவாவது ஒரு பெண்ணை காதலிக்கவும் :-)

முத்துகுமரன் said...

//விரைவில் திருமணத்தை செய்யுங்க சாரே. தள்ளிப் போட்டு நாளாக நாளாக நிறைய கவிதைகள் கிடைக்கும்.//
கவிதைகள் வேணும்னா முன்னதை தள்ளிப் போடத்தானே வேண்டும் :-)

முத்துகுமரன் said...

//காதல் கவிதை எழுதவாவது ஒரு பெண்ணை காதலிக்கவும் :-)//

முயற்சி பண்ணனும். இருந்தாலும் உங்க அளவுக்கு நமக்கு அதிர்ஷ்டம் இல்லை!

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP