இறையாண்மை

குண்டுகள் இடு!
கொலைகள் செய்!
வன்புணர்!
யோனிகள் சிதை!
வாழ்விடங்கள் தகர்!
சவக்குழிகள் பயிரிடு!
மனிதநேயம் நிர்வாணமாக்கு!
பட்டியலிடு, இறந்த குழந்தைகளையும் தீவிரவாதிகளாக்கி!
எல்லாம் செய்!
அரசாக!
அரசாக!
எம்
தமிழன் விழிக்காதவரை

உன் இறைமைக்கு
உத்திரவாதம் கொடுக்கவும்,
கட்டிக் காக்கவும்,
கூடவும் ஆசிகளோடும்
சிரித்துக் கொண்டிருப்பர்,
காந்தி தேசத்து அகிம்சை ராமர்கள்!

9 எண்ணத்தை வாசித்த இனியவர்கள்:

Xavier said...

நச்!!!!

முத்துகுமரன் said...

நன்றி சேவியர்!

பழமைபேசி said...

நன்றி! நன்றி!!

சென்ஷி said...

kalakkal!

Anonymous said...

நேற்று லண்டனில் வெளிவந்த அத்தனை பத்திரிக்கைகளிலும் வெளிவந்த செய்தி.

ஆப்கானிஸ்தானில் போரில் பணிபுரிந்த பிரிட்டனைச்சேர்ந்த ஒரு ராணுவ வீரன் வீடு இல்லாமல் 1.5 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள வீட்டின் அறுகில் ஒரு காரில் குடியிருந்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த 1.5 மில்லியன் மதிப்புள்ள நான்கு படுக்கை அறைகொண்ட வீட்டில் ஒரு அகதி குடும்பம் ஓசியில் ஆதாவது வரி செலுத்துவோரின் பணத்தில் குடியிருந்து கொண்டிருக்கிறது. அந்த வீட்டிற்காக வரிசெலுத்துவோரின் பணம் ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம்(ஒரு வருடத்திற்கு) அரசு மூலம் வாடகையாக கொடுக்கப்படுகிறது. அகதிகளுக்கு குறிப்பாக இலங்கைத்தமிழர்களுக்காக மட்டும் ஜ்ரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன்களை செலவிடுகிறது. வரிசெலுத்துவோரின் பணத்தில் வாழ்ந்துகொண்டு அவர்களையே குறைகூறிக்கொண்டும் கொள்ளையடித்துக்கொண்டும் இருக்கும் இவர்களுக்கு தம்மக்கள் தங்கள் தாயகத்தில் படும் கஷ்டம் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை. நம்மக்கள் மட்டும் ஏன் இவர்களுக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரியவில்லை. ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரையை விரட்டியது போல இன்னும் சில வருடங்களில் குடியேறிய நாடுகளில் தனி ஈழம் கேட்டு சண்டையிடத்தான் போகிறார்கள். இதன் காரணமாகத்தான் நார்வே சமாதானப் பேச்சு வார்த்தைக்கு பல முறை வழிய வந்து உதவியது. ஏனென்றால் அகதிகளால் அதிகம் அவதிக்குள்ளாகும் நாடுகளில் நார்வேயும் ஒன்று. எப்படியாவது சாமாதனப்படுத்து இவர்களை அவர்கள் ஊருக்கு அனுப்பலாம் என்றால் முடியவில்லையே?!.

பிரிட்டனும் இவர்களை வெளியேற்ற பல சலுகைகளை அறிவித்து விட்டது. சொந்த ஊரில் பிழைத்துக்கொள்ள 15,000 பவுண்டு (சுமார் 12 லட்சம் ரூபாய்) மற்றும் இலவச விமான டிக்கெட் என்று அறிவித்தாலும் , இங்கு கிடைக்கும் சலுகைகளை விட்டு போக யாரும் முன்வரவில்லை.

நம் நாடும் இவர்களால் பல இன்னல்களை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏன் நம் தலைவரையே இழந்து நிற்கிறது. ஆனால் அவர்களை ஆதரிக்க இன்னும் சில புல்லுருவிகள் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தியத்தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!.

லக்கிலுக் said...

திராவிட நாடு கேட்டவர்களும் இன்று இந்திய இறையாண்மை என்ற வார்த்தையை இருநாட்களுக்கு இரண்டாயிரம் முறை உச்சரிக்கும் கொடுமை :-(

முத்துகுமரன் said...

//திராவிட நாடு கேட்டவர்களும் இன்று இந்திய இறையாண்மை என்ற வார்த்தையை இருநாட்களுக்கு இரண்டாயிரம் முறை உச்சரிக்கும் கொடுமை :-(//

மிகப் பெரும் அவலம் லக்கிலுக்! இந்திய இறையாண்மை எங்கிருக்கிறது என்பதுதான் இப்போதய கேள்வி

கோவி.கண்ணன் said...

//உன் இறைமைக்கு
உத்திரவாதம் கொடுக்கவும்,
கட்டிக் காக்கவும்,
//

உதிர வாதம் தான் கொடுப்பார்கள் மேலும் ஆயுதங்களைக் கொடுத்து !
:(

Anonymous said...

very nice...very effective words...

KAMALA

Related Posts with Thumbnails

Modified by Blogger Tutorial

முத்துகுமரன் ©Template Nice Blue. Modified by Indian Monsters. Original created by http://ourblogtemplates.com Blogger Styles

TOP